லேடஸ்ட் நிலவரங்கள்,கிசுகிசுக்கள்...
நயன்தாரா விவகாரம்...மனம் திறந்த ரமலத்!
பேட்டி கொடுக்காமல் சற்று ஒதுங்கியே இருந்த ரமலத், நீண்ட இடைவெளிக்கு பிறகு 'குங்குமம்' இதழுக்காக வாயை திறந்திருக்கிறார். மக்கள் மத்தியில் ரமலத்துக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கும் இந்த நிலையில் ரமலத்தின் ஒருவனுக்கு ஒருத்தி பேட்டி சூடாகதான் இருக்கிறது. என்ன சொல்லியிருக்கிறார் அதில்? இதோ-
சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் எங்க வீட்டுக்கு வந்தாலும் ஒரு பாசத்தோடதான் உபசரிப்பேன். எங்களுக்கு சோறு போடுற தொழிலாச்சே. அந்த மாதிரிதான் அந்த பெண்ணையும் ஆரம்பத்துல பார்த்தேன். வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவரை சார்னும் என்னை அக்கான்னும் கூப்பிடும். ஆனா அது மனசுல இந்த மாதிரி நியாயத்துக்கும் தர்மத்துக்கும் புறம்பான ஒரு ஆசை இருக்குதுங்குறது எனக்கு தெரியாம போச்சு. இல்லாட்டி என் வீட்டுக்கே வந்து என் புருஷனை விட்டு தரச்சொல்லி கேக்குற வரைக்கும் அதை நம்பியிருப்பேனா? உலகத்துல ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணுகிட்ட கேட்க கூடாததை எங்கிட்ட கேட்டுச்சு. அன்னைக்குதான் வாழ்க்கையிலேயே நான் து£ங்காத முழு ராத்திரி.
மூத்த பையன் விஷால் கேன்சர்ல இறந்த துக்கத்துல இருந்து முழுசா மீண்டு வராத நிலையில எங்கிட்ட வந்து இப்படி கேட்டாங்க. விஷால் விஷயத்துல கூட அவருக்கு எங்க இருந்துச்சு அக்கறை? உடலை அடக்கம் பண்ணிட்டு வந்ததோட சரி. மறுநாள் அந்த பொண்ணோட கிளம்பிட்டார். பையன் போயிட்டானே என்ற கவலையெல்லாம் நயன்தாரா வந்ததும் ரெண்டாந்தரமா போச்சு. மொத்தத்துல அக்கான்னு சொல்லி வீட்டுக்குள்ளே வந்தவங்களை நம்புனதாலதான் இப்ப சக்களத்தி சண்டை போட வேண்டியிருக்கு. வர்றபோதெல்லாம் சாக்லெட், டிரஸ்னு வாங்கிட்டு வந்ததால பசங்களும் ஆன்ட்டின்னு பிரியா பழகுனாங்க. எல்லாம் வேற நோக்கம்னு அந்த பிஞ்சுகளுக்கே இன்னிக்கு தெரிஞ்சுருச்சு.
அந்த பொண்ணு போட்டோவை பார்த்தா கிழிச்சு போடுறாங்க. டிவியில அவங்க நடிக்கிற படம் வந்தா ஆஃப் பண்ணிடுறாங்க. ராத்திரி து£க்கத்துல பாதியில எழுந்து அப்பா எங்கம்மான்னு கேக்குறான் கடைசி பையன் ஆதித். மன ரீதியா அவங்க பாதிக்கப்பட்டிருக்காங்க.இப்படி என் பிள்ளைகளுக்கும் எனக்கும் மன உளைச்சலை தந்துட்டு அவரை எங்ககிட்ட இருந்து பிரிச்சுட்டு போய் சந்தோஷமா வாழ நினைக்குது அந்த பொண்ணு.
இப்படியெல்லாம் அந்த பேட்டியில் குமுறியிருக்கிறார் ரமலத். பதில் சொல்ல வேண்டிய பிரபுதேவாவும் நயன்தாராவும் காளகஸ்தி கோவிலுக்கு போய் பரிகார பூஜை செய்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள். முக்'கண்'ணுடைய பரமேஸ்வரன் தனது எந்த கண்ணை திறக்கப் போகிறாரோ, பார்க்கலாம்!
த்ரிஷா இடத்தில் எமி...கவுதம் மேனன் அதிரடி முடிவு!
இங்கிலாந்து -இந்திய கூட்டுத் தயாரிப்பு போல இருப்பதுதான் எமியின் விசேஷம்! வெளிநாட்டு அழகிகளை மட்டுமல்ல. அப்படியே கொஞ்சம் கழுத்தை நீட்ட்ட்ட்ட்டி எட்டிப்பார்த்து கூட ஒரு உதாரணம் சொல்லாம். அண்டை மாநிலமான பாலிவுட் குயின்களை கூட 'உவ்வே' என்று ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள் நமது ரசிகர்கள். பாலிவுட்டில் கொண்டாடப்பட்ட பிபாபாஷா பாசு தமிழில் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்த போது என்னவானார்? ஆனால் எமியை பொருத்தவரை எந்த பக்கம் திருப்பினாலும் அழகு!
வண்ணார பேட்டை ரசிகனுக்கும் பிடிக்கும். மைலாப்பூர் ரசிகனுக்கும் இனிக்கும். அப்படி ஒரு முகம் அவருக்கு. இந்த முக லட்சணம்தான் த்ரிஷாவை ஒரு ஸ்டெப் பின்னுக்கு தள்ளிவிட்டிருக்கிறது! ஹையோ... அது எப்போ?
தமிழில் சூப்பர் ஹிட் ஆன விண்ணை தாண்டி வருவாயா படத்தை இந்தியில் எடுக்க வேண்டும் என்று விரும்பினார் கவுதம் மேனன். இதன் மூலம் இந்திக்கும் போகலாம் என்று நினைத்திருந்தார் சிம்பு. ஆனால் அது நடக்கவில்லை. தமிழில் நடித்த அதே கேரக்டரில் நடிக்கிற அதிர்ஷ்டம் த்ரிஷாவுக்கு மட்டும் வாய்த்தது. இப்போது அதிலும் திடீர் மாற்றம். த்ரிஷாவுக்கு பதிலாக எமியை புக் பண்ணிவிட்டார் கவுதம் மேனன்.உமியாயிருந்தா ஊதி தள்ளிடலாம். எமியாச்சே? இதயத்துல ஒரு கர்சீப் போட்டு வைங்கப்பா...
கதை கேட்கிறார் அஜீத்....கதறும் 'கப்சா' இயக்குனர்கள்
எப்பவோ போயிருக்க வேண்டிய 'மங்காத்தா' ஷ§ட்டிங் திடீர்னு நின்னு போச்சு! மீண்டும் தொடருவாங்களா, அல்லது....? இப்படி ஒரு கேள்வியோடு டென்ஷன் கிளப்புகிறார்கள் கோடம்பாக்கத்தில். அதை உறுதி செய்வது போல அஜீத்தும் புது இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார். ஆச்சர்யம் என்னவென்றால் அவர் கதை கேட்பது நடிப்பதற்காக அல்ல. தானே தயாரிக்கும் படத்திற்காக.
ஒரிஜனல் கதையோடு அவரை சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் சிலர். ஒட்டு வேலை, கட்டு வேலை போட்டு ஹாலிவுட் கதைகளை சுட்டு சொல்கிறார்கள் சிலர். கதை கேட்கும் போதே இந்த சீன் இந்த படத்தில வந்திருச்சே. அந்த சீன் அந்த கொரியன் படத்துல இருக்கே என்று எந்த காட்சியை சொன்னாலும் சரியாக கண்டு பிடித்துவிடுகிறாராம் தல.
மனுஷன் எல்லா படத்தையும் பார்த்திருக்காரு போலிருக்கு. எந்த கதையையும் சுட்டு ஒப்பேற்ற முடியலையேப்பா என்று வழிகிறார்கள் கதை சொல்லப் போன 'கப்சா' இயக்குனர்களில் சிலர். அப்படியும் மீறி அவரை இம்ப்ரஸ் பண்ணிய இயக்குனர்களுக்கு தனது புதுக் கம்பெனியில் வாய்ப்பு கொடுக்கப் போகிறாராம் அஜீத்.
சூர்யாவுக்காக உருவான முகமூடி.....அணிந்து கொள்கிறார் ஆர்யா!
நினைவுகளை 'ரீவைண்ட்' செய்கிறவர்களுக்கு ஒரு பழைய செய்தி! சூர்யா நடிக்கும் 'முகமூடி' என்ற படத்தை மிஷ்கின் டைரக்ட் செய்யப் போவதாக கிசுகிசுக்கப்பட்டது. பட்ஜெட் 35 கோடி என்றும், இப்படத்தை தயாரிப்பது ஐங்கரன் நிறுவனத்தினர் என்றும் அப்போது செய்திகள் றெக்கை கட்டின. என் அடுத்தப்படத்தின் பட்ஜெட் 35 கோடி. அதில் ஹாரிஸ்தான் இசையமைப்பாளர் என்று பேச்சு வாக்கில் இளையராஜாவிடமே சொல்லி, அவரது தவுலுக்கு சவுண்டாகவும் ஆனார் மிஷ்கின். (அது நந்தலாலா நேரம்)
இப்போது மீண்டும் முகமூடியை து£சு தட்டி எடுத்திருக்கிறாராம். இதில் நடிக்கப் போவது சூர்யா அல்ல, ஆர்யா! யுத்தம் செய் படத்தை முடித்துவிட்ட மிஷ்கின், இந்த முகமூடி கதையை ஆர்யாவிடம் சொன்னாராம். அவருக்கும் பிடித்துப் போய்விட இப்போது நடித்துக் கொண்டிருக்கும் லிங்குசாமியின் சொந்த கம்பெனியிலேயே கேட்கலாம் என்று யோசித்தாராம்.
ஆர்யாவின் ஆர்வத்திற்கு லிங்குசாமியும் உடன்பட்டு விட்டதாக தகவல். விரைவில் முகமூடியை துவங்குகிறார்கள். ஆர்யாவை நடிக்க வைத்து முப்பது கோடிக்கு படம் எடுப்பதென்பது உரலுக்குள் விரல் வைத்த கதையாகிவிடும் என்பதால், பிசினஸ்சை பல மடங்கு கூட்டுகிற அம்சங்களை சேர்க்கிறார்களாம். அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பெரிய ஹீரோயின், முன்னணி இசையமைப்பாளர் என்று வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள்.
நன்றி:www.tamilcinema.com
Search This Blog
Monday, October 11, 2010
Saturday, October 9, 2010
Wednesday, October 6, 2010
சிரிப்பு ஒரு மாமருந்து
உலகில் பிற உயிரினங்களுக்கும் பசி உணர்ச்சிகளும் உயிரை தக்க வைத்திடும், மற்றும் உயிரைக் காப்பாற்றும் உணர்ச்சிகளும் மிகுந்து இருந்தாலும் மனித இனம் அதையும் மீறி பேசும் வல்லமை பாடும் வல்லமை, சிரித்திடும் கலையை அறிந்திருக்கிறான்.
சிரித்திடும் சமயம் நமது முக அசைவுகள் அனைத்தும் தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகளின் திசுக்களை இயல்பாக்கி அமைதிப்படுத்துகின்றன. மேலும் 14 தசைகள் மட்டும் அச்சமயம் இயங்குகின்றன. பாரா சிம்பதடிக் நரம்புகள் ஆட்சி புரிகின்றன.கோபம் உச்சநிலை அடையும் சமயம் 100க்கும் மேற்பட்ட தசைகள், நாடி நரம்புகள் வேகம் கொண்டு சிம்பதடிக் நரம்புகள்(தானியங்கி) முறுக்கேறி அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது உடலில் இரத்தத்தில் அமிலம் மிகுகிறது.
எனவே நாம் வாழ்வில் நமது உணவின் அங்கம் போல் சிரிப்புக்கு, சிரிப்புக் கலையைக் கற்பதற்கு, கடைப்பிடிக்க சில நிமிடங்களாவது ஒதுக்கிடலாம்.
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். துன்பம் வரும் சமயமும் துவளாமல் சிரிப்புடன் எதிர் கொள்வது ஓர் அரிய கலை. அற்புதக் கலை.சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும். கவலை அலைகள் பிறரை நம்மிடம் இருந்து விரட்டும்.சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி பாஸிடிவ் கரண்ட்டை பரப்பும். சோக அலைகள் நம்மைச்சுற்றி நெகடிவ் கரண்ட் தரும்.
சிரிப்பதற்கு கூட பயிற்சிகள் தேவைப்படுகின்றன. ஐந்து நிமிடம் காலையில் சிரித்துப் பழகலாம். நீங்கள் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, சிரிக்கும் சமயம் மட்டுமே உங்கள் வீட்டில் இருந்து வெளி வாருங்கள். மகிழ்சி அலைகளைப் பரப்புங்கள் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.சோக அலைகள், துக்க சுவடுகளை, கவலை எண்ணங்களை வீட்டில் புதையுங்கள். வெளி உலகில் வந்து பரப்பாதீர்கள் என அறிவுறுத்துகிறார். ஆனால் நாம் யாரைப் பார்த்தாலும் நமது சோகக் கதையை கவலை மூட்டையை துக்க வியாபாரத்தை ஆரம்பிக்கிறோம்.
இனி வாழ்வில் இன்று முதல் சிரிப்பு வியாபாரம் தொடங்கலாம். அதனால் ஒரு நஷ்டமும் இல்லை. இதில் லாபம் மட்டுமேகிட்டும். இது உறுதி.அதிலும் பிறர் மனம் புண்படாத நிலை சிரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தரலாம். உயிர் எழுத்துக்களை அ முதல் ஓ வரை வரிசையாக தொடர்ந்து வேகமாக உச்சரித்தால் சிரிப்பு அலைகள் உருவாகும். நம்மை சுற்றி நடக்கும் தவறான நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல் நாம் சாட்சியாக நிற்கும் சமயம் பல உண்மைகள் புரியும். பல நேரம் நமது தேவையே பிறக்கு தேவையிருக்காது. மேலும் நம்மால் ஏற்பட்ட தொல்லையும் நம் உறவினர்கள், நண்பர்களுக்கு குறையலாம்.
நாம் பொருள் உதவிகளை கேட்காமல் கொடுக்க வேண்டும்.நமது ஆலோசனை உதவிகளை மூன்று முறை கேட்ட பிறகே கொடுக்க வேண்டும்.இவ்விஷயத்தில் நாம் பல நேரம் மாறி தவறி விடுகிறோம்.சிரித்துப் பழக வேண்டும்.சிறுவர்களிடம் சிரித்துப் பழக வேண்டும்.சிறு குழந்தைகளைப் பார்த்து சிரித்துப் பழக வேண்டும்.சினம் அடையும் சமயம் சிரித்துப் பழக வேண்டும்.செயல்படும் போது சிரித்த முகத்துடன் பழகவேண்டும்.சிரிப்பு நமது வாழ்வின் மூச்சாக வேண்டும்.சோகம் நமது ஆரோக்கியச் செல்வத்தைக் குறைக்கும்.சிரிப்பு நமது ஆரோக்கியச் செல்வத்தை உயர்த்தும்.'சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என்ற சிந்தனையுடன் சிரிப்பு வியாபாரத்தை இன்று தொடங்குங்கள். முதலில் வீட்டு உறவினர்களிடம் சிரிப்பு வியாபாரத்தை தொடங்குகள். எளிய வியாபாரம் சிறப்பான உத்திகள்.கோப அலைகள் அனைத்தையும் சிரிப்பு அலைகளாக மாற்ற முயற்சி செய்யுங்கள். அது ஒரு அற்புதக் கலை.
வாழ்க்கை வானம் உங்களுக்கு வசப்படும் தூரந்தான். துணிச்சலின் சொந்தக்காரராக மாறிடுவீர்கள்.மகிழ்சியின் பொக்கிஷதாரராக ஆகிவிடுவீர்கள்.அதற்கான வழி தெரியவில்லையா? இயற்கை உணவுகளும், கனி உணவுகளும் அப்பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டும். இயற்கை வாழ்வியல் வளமாக வழி நடத்திச் செல்லும். நாம் அதற்குத் தயாரா? சிரிக்கும்போது நைட்ரஜன் காற்று கூட நமக்கு சக்தி தரும். காற்றாக மாறும் வல்லமையைப் பெறுகிறோம். சிரித்துப் பழகுகிறவர்களுக்கு உணவின் தேவை குறைகிறது.
Source:www.z9tech.com/

Monday, October 4, 2010
Sunday, October 3, 2010
எந்திரன்- ஓர் ஆழமான அலசல்..
இந்திய சினிமா வரலாற்றில் மிக அதிக பொருட்செலவில் தயாரான படம் தான் எந்திரன்..செக்கு மாடு போல திரும்ப திரும்ப ஒரே கதை அம்சங்களை கொண்ட படங்களை தயாரிக்கும் இந்திய சினிமாவில் இது ஒரு புதிய தொடக்கம்..இந்தியாவில் பல மொழிப்படங்கள் வெளிவருகின்றன..எல்லாவற்றிலும் மிக முக்கிய கரு காதல்,மசாலா,செண்டிமெண்ட்..இந்த மூன்றுமே இந்திய சினிமாவின் முக்கிய "Generes" ஆகும்..ஹாலிவூடில் உள்ள "Generes" களை ஆராய்ந்தால் ஒரு Encyclopedia வே தயாரிக்கலாம்..அந்த அளவுக்கு மிகவும் பரந்த ஒரு சினிமா களம் ஹாலிவூட்..தமிழ் சினிமாவை ஹோலிவூட் தரத்துக்கு கொண்டுபோகிறோம் என கூறி எத்தனையோ படங்கள் வெளிவந்தன..ஆனால் அவை தமிழ் சினிமாவை நாறடித்தது தான் மிச்சம்..ஆனால் இந்த எந்திரன் இந்திய சினிமாவின் முதலாவது True Science Fictionபடமாக வெளிவந்திருக்கிறது..குண்டு சட்டியில் குதிரை ஓடிகொண்டிருந்த தமிழ் திரையுலகம் விழித்து கொண்டதற்கான முதல் அறிகுறி இந்த எந்திரன்..தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வராதா என ஏங்கியோரின் கனவை நனவாகியிருக்கிறது இந்த படம்.. குறிப்பாக அந்த கடைசி 45 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகளில் அப்படி ஒரு ஹாலிவூட் தரம்..ஒரு Iron man,Terminator படம் பார்ப்பது போல மிகவும் தரமான கிராபிக்ஸ் சண்டை காட்சிகள்..
தென் இந்திய சினிமாவின் கடவுளாக போற்றப்படும் ரஜனியின் ஆர்ப்பாட்டமில்லாத அறிமுக காட்சி நிச்சயம் யாரும் சற்றும் எதிர் பார்கத்துதான்..ஆனால் இன்றைய கால கட்டத்தில் அது மிக முக்கியமான ஒன்று..உலகின் வேறு எந்த சினிமாக்களிலும் ஹீரோவுக்கும் ஆர்ப்பாட்ட அறிமுகம் கொடுப்பதில்லை..இதை உணர்ந்து அறிமுக அலபறைகளை தவிர்த்த சங்கருக்கு ஒரு சபாஷ்..(விஜய் சார்..இதுக்கு பிறகாவது உங்களின் ஒபெநிங் சாங் அலபறைகளை நிறுத்துவீர்களா? ) படத்தின் நிறைகள் என்று பார்த்தல் ரஜனிகாந்தின் ஆர்ப்பாட்டமில்லாத அதிரடியான நடிப்பு,புதிய கதை களம்,ஐஸ்வர்யாராயின் அழகு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள்..பின்னணி இசையில் ரசூல் பூக்குட்டி மிரட்டியிருக்கிறார்..வசீகரனாக வரும் ரஜினியில் வயது ஆங்காங்கே தெரிகிறது..ஆனால் நடிப்பில் மனுஷன் பின்னிஎடுதுவிட்டார்..குறிப்பாக அந்த வில்லன் ரஜினி செம மிரட்டல்.. மேலும் நிஜ வில்லனாக வரும் ரஜினியின் ப்ரோபெசரின் நடிப்பு அபாரம்..கண்களாலேயே மிரட்டுகிறார்...
படத்தின் இன்னுமொரு பலம் சாபு சிறில்..ஒரு ஹை டெக் நகரத்தையே படைத்திருக்கிறார்..படத்திலும் சில காட்சிகளில் வந்து போகிறார்.. எல்லாவற்றையும் சரியாக செய்த சாபு சிறில் விஞ்ஜான ஆய்வுகூடத்தை வடிவமைப்பதில் கோட்டை விட்டுள்ளார் என்றே கூறலாம்..சாதாரண வீட்டின் அளவை ஒத்த ஒரு ஆய்வு கூடத்திலா ரோபோக்களை உருவாகுவார்கள்? மனிதன் உருவாக்கிய ரோபோ மனிதகுலத்துக்கு எதிராக மாறுவது என்ற சாத்தியமான கதையை கையில் எடுத்த சங்கர் திரை கதையில் சிறிது சறுக்கி விட்டார்..படத்தில் ரஜினி சொந்தமாக லேப் வைத்து ரோபோவை கண்டுபிடிப்பதாக காட்டுகிறார்..மிகவும் அதி நவீன ரோபோவை தயாரிப்பது பொம்மை செய்வது போல இலகுவானதொன்றா?அதற்கு எவளவு பணம் செலவாகும்..எவ்வளவு மனித,இயந்திர வளங்கள் தேவைப்படும்..இதை எல்லாம் விடுத்து ரஜினி சிறிய ஒரு ஆய்வுகூடத்தில் இரண்டே இரண்டு உதவியாளர்களை வைத்துகொண்டு ரோபோ கண்டுபிடிப்பதேல்லாம் நடக்காத ஒன்று..ஒரு பெரிய நிறுவனத்தில் ரஜினி வின்ஜானியாக இருந்துகொண்டு ரோபோவை உருவாகுவதாக காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. Science Fiction கதையில் பாடல்கள் எதற்கு?உண்மையிலேயே பாடல்கள் விறுவிறுப்பான திரைக்கதைக்கு வேகத்தடையாக அமைகின்றன..படத்தில் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரும் பாடல்களுக்கு பதிலாக ரோபோவின் சீன்களை சேர்த்திருக்கலாம்..தமிழ் சினிமாவில் இந்த பாடல்களை எப்போது தான் நிறுத்துவார்களோ தெரியவில்லை... மேலும் சந்தானம்,கருணாஸ் பாத்திரங்களை வேஸ்ட் செய்திருக்கிறார் சங்கர்..ஆனால் சிட்டியின் சில்மிசங்கள் அதிரவைகின்றன..சிட்டி செய்யும் கூத்துகளுக்கு கலவரமாகிறது தியேட்டர்..
இப்போது டைரக்டர் சங்கரிடம் சில கேள்விகள்..
உறுதியளிதபடியே ஹாலிவூட் தரத்துக்கு இணையான படத்தை தந்தமைக்கு மிக்க நன்றி..ஆனால் ஹாலிவூட் ஐடியாக்களை பயன்படுத்தியது ஏன்?நீங்கள் ஒரு பேட்டியில் சொன்னிர்கள் என்திரனில் ஹாலிவூட் சாயல் இருக்கவே இருக்காதென்று,ஆனால் ரோபோவின் டிசைன் ஹாலிவூட் I Robot மற்றும் Terminator ஐ நினைவூட்டுகின்றன..குறிப்பாக அந்த டீ கொண்டுவரும் ரோபோ Star wars படத்தில் வரும் R2D2ரோபோவின் அப்பட்டமான கொப்பி...பாடல் காட்சி ஒன்றிலும் Star wars strom troopers போல ஆட்களை உலாவ விட்டிருந்தீர்கள்..மேலும் சிட்டி செய்யும் சில்மிசங்கள் 1999ம் ஆண்டு வெளிவந்த Bicentannial Man எனும் திரைப்படத்துடன் ஒத்து போகின்றது . மேலும் நீங்கள் சிவாஜி திரைபடத்தில் ஒரு பாடலை Desparado பட சாயலில் எடுத்திருந்தீர்கள்..அந்நியன் படத்தில் Matrix பட சண்டை காட்சியை கொப்பி அடித்தீர்கள்..ஹாலிவூட் பட தாக்கம் இல்லாமலே ஹாலிவூடுக்கு இணையாக தமிழில் படமே எடுக்க முடியாதா? இன்னும் கொஞ்சம் மினக்கட்டிருந்தால் ஹாலிவூடையே மிஞ்சும் வகையில் எந்திரனை உருவாக்கியிருக்கலாம்.. தமிழ் சினிமாவில் ஒரு புதிய களத்தை திறந்தமைகாக எந்திரனுக்கு நன்றிகள்..சங்கர் சார் அடுத்த படத்திலாவது தவறாமல் சொந்த ஐடியாக்களை பயன்படுத்துங்கள்..உங்கள் ஐடியாக்களை ஹாலிவூட் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை இருக்கவேண்டும் என்பதே எல்லோரினதும் ஆசை..
இந்த Trailorஐ பாருங்கள்...சிட்டியின் ரகசியம் புரியும்..

Thursday, September 30, 2010
பீர்க்கங்காய் முப்பருப்பு கூட்டு
தேவையானவை...
பீர்க்கங்காய் - 200 g
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - 1 அங்குல துண்டு
பூண்டு - 3 பல்
தேங்காய் துருவல் - 2 tbsp
கடலை பருப்பு - 2 tbsp
துவரம் பருப்பு - 2 tbsp
பாசி பருப்பு - 2 tbsp
எண்ணெய் - 2 tsp
கடுகு - 1/4 tsp
சீரகம் - 1/4 tsp
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - தாளிக்க
கொத்தமல்லி - அலங்கரிக்க
செய்முறை...
•பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
•வெங்காயம் மற்றும் தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
•எல்லா பருப்பையும் கழுவி மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவேண்டும். பருப்பு ரொம்பவும் குழைய தேவையில்லை.
•வானலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் சீரகம் சேர்த்து வெடிக்க விட்டு பெருங்காயம் காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பில்லை சேர்க்கவும்.
•இப்போ வெங்காயம் சேர்த்து வதங்கியதும், இஞ்சி பூண்டு நசுக்கி சேர்க்கவும்.
•பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளி சேர்க்கவும்.
•தக்காளி குழைந்து வந்ததும் பீர்க்கங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி பருப்பை சேர்க்கவும்.
•உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி மூடி வைத்து 8 நிமிடம் வேக விட்டு இறக்கி தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
தேவைகேற்ப மிளகாய் சேர்த்து கொள்ளலாம். பீர்க்கங்காய் தோல் இளசாக இருந்தால் புதினா சேர்த்து துவையல் செய்யலாம்.
Source:www.arusuvai.com

எந்திரன் வசூல் கனடாவில் எப்படி இருக்கும்?
வருகின்ற ஒக்டோபர் முதலாம் திகதி உலகம் முழுவதும் 3000இக்கு மேற்பட்ட திரையரங்குகளில் எந்திரன் திரையிடபடுகிறது.முதல்வார வசூல் கனடாவில் எப்படி இருக்கும் என்று ஒரு சிறிய அலசல்.
டொரோண்டோ நகரில் எந்திரன் நான்கு மிக முக்கிய திரையரங்குகளில் வெளியிடபடுகின்றது..முதல் எழு நாட்களில் மட்டும் 111காட்சிகள் திரையிடப்படவுள்ளன..ஒரு தமிழ் படம் கனடாவில் இந்த அளவு திரையிடபடுவது இதுவே முதல் முறை..கிட்ட தட்ட ஒரு ஹாலிவூட் படத்துக்கு கிடைக்கும் ஒபெனிங் எந்திரனுக்கு கிடைத்திருக்கிறது..ஒரு தியட்டரில் முதல் நான்கு நாட்களும் தினசரி எட்டு காட்சிகள் திரையிடபடுகின்றன..கடைசியாக அவதார் படத்துக்குதான் தினசரி எட்டு காட்சிகள் திரையிடப்பட்டன..
முதல மூன்று நாட்கள வசூல் எப்படி இருக்கபோகின்றது என்று பார்ப்போம்..இந்த தியட்டர்கள் சராசரியாக 400 இருக்கைகளை கொண்டன.ரஜனி மற்றும் சங்கர் இணையும் படம் என்றபடியால் முதல் மூன்று தினங்களும் அணைத்து காட்சிகளும் நிச்சயம் ஹவுஸ் புல்லாகவே இருக்கும்..முதல் மூன்று தினங்களிலும் சராசரியாக 59 காட்சிகள் திரையிடபடுகின்றன..வயதுவந்தோருக்கான டிக்கட் ஒன்றின் விலை $10.75 ஆகும்.சிறுவர்களுக்கான டிக்கட் விலை $7.99 ஆகும்..படம் பார்க்கவரும் ரசிகர்களில் 90 வீதம் வளந்தவர்கள் எனவும்,10 வீதம் சிறுவர்கள் எனவும் வைத்துகொள்வோம்..
வயது வந்தவர்களுக்கான டிக்கட் விற்பனை மூலம் கிடைக்கும் வசூல் $228330(59x400x0.9x10.75) ஆகும்..சிறுவர்களுக்கான டிக்கட் விற்பனை மூலம் கிடைக்கும் வசூல்
$18857(59x400x0.1x7.99) ஆகும்.எனவே மொத்த வசூல் $247187 ஆகும்..இது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூபாய் 98,87,480(247187x40)..முதல் மூன்றுநாள் வசூலே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் ஆகும்..எந்தவொரு தமிழ் படத்துக்கும் கனடாவில் இவளவு வசூல் கிடைத்ததில்லை..
இனி முதல் எழுநாள் வசூலை பற்றி சிறிது அலசுவோம்..சூப்பர் ஸ்டார் படம்,ரகுமான் இசை,சங்கர் கொடுத்த பில்டப் என அதீத எதிர்பார்ப்பை உலக தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது எந்திரன்..இதற்கு கனடா வாழ் தமிழ் மக்களும் விதிவிலக்கில்லை..ஏற்கனவே சிவாஜி இரண்டுவாரம் ஹவுஸ் புல்லாக ஓடியது..முதல் வாரத்தில் திரையிடப்படவுள்ள காட்சிகளில் 75 வீதமானவை ஹவுஸ் புல் காட்சிகள் என வைத்து கொள்வோம்..மீதிகாட்சிகளுக்கு 75 வீதமான டிக்கட்டுகள் வில்படுவதாக வைத்துகொள்வோம்..மேலே கூறியது போல படம் பார்க்க வருவோரில் வீதமானோர் பெரியவர்கள் எனவும் வீதமானோர் சிறுவர்கள் என்றும்
வைத்து கணகிட்டால் ஹவுஸ் புல் காட்சிகள் மூலம் கிடைக்கும் வசூல் $347737
{(83x400x0.9x10.75)+(83x400x0.1x17.99)} ஆகும்..மீதிகாட்சிகள் மூலம் கிடைக்கும் வசூல் $87982 {(28x400x0.9x0.75x10.75)+(28x400x0.1x0.75x7.99)} ஆகும்..எனவே முதல் வாரத்தின் மொத்த வசூல் $435719 ஆகும்..இந்திய மதிப்பில் இது சுமார் ரூபாய் 1,74,28,760 ஆகும்..கிட்ட தட்ட ஒன்றே முக்கால் கோடி ரூபாய்களை முதல் எழு நாட்களில் கனடாவில் எந்த ஒரு இந்திய படமும் வசூல் செய்ததில்லை..
இது டொராண்டோவில் உள்ள முக்கி நான்கு திரையரங்குகளை வைத்து கணிக்கப்பட்ட வசூல் ஆகும்..இதில் ஏனைய நகரங்களோ,சிறிய திரயரன்குகளோ உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நான்கு தியேட்டர்களில் எழு நாட்களில் ஒன்றே முக்கால் கோடி வசூல் என்றால் உலகம் முழுவதும் 3000தியேட்டர்களில் எழு நாட்களில் வசூல் எவளவு இருக்கும்? ..படம் வெற்றியோ,தோல்வியோ,எந்திரன் வசூல் மழையில் நனையபோவது மட்டும் உறுதி..

Tuesday, September 28, 2010
கேரளாவில் 125 தியேட்டரில் எந்திரன் டிக்கெட் காலி.!!
கேரளாவில் எந்திரன் படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. சில மணி நேரத்திலேயே 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்தது.
கேரளாவி்ல் எந்திரன் படம் 125 தியேட்டர்களில் வெளியாகிறது. இது கேரள சினி்மா வரலாற்றில் புதிய சாதனை ஆகும். மலையாளத் திரைப்பட வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் 100 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டதில்லை. முதல் முதலாக எந்திரன் தான் இந்த சாதனையை படைத்துள்ளது.
திருவனந்தபுரம், கொச்சி, பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய இடங்களில் உள்ள நியூ, தான்யா, அஜந்தா ஆகிய 5 தியேட்டர்களில் எந்திரன் பட முன்பதிவு நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆனால் காலை 9 மணிக்கு முன்பாகவே ரஜினி ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்தனர்.
முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் 5 தியேட்டர்களிலும் 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்தன. இதே போல் மற்ற பகுதிகளிலும் 2 நாட்கள் காட்சிக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.
இது குறித்து அஞ்சலி, அதுல்யா தியேட்டர்களின் மேலாளர் அசோகன் கூறுகையி்ல், இதற்கு முன் எந்த படத்திற்கும் முன்பதிவு செய்யப்பட்டதில்லை. எந்திரன் படம் இந்த புதிய சாதனையை படைத்துள்ளது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டன என்றார்.
தமிழ் நாட்டு நிலவரம்..
திரையுலகம் இதுவரை காணாத பெரும் வசூல் சாதனையைச் செய்து வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம்.
இந்த சாதனைகளை முறியடிக்க இனியொரு படத்தை ரஜினியைத் தவிர வேறு யாராலும் தரமுடியுமா என்ற கேள்விதான் இன்று கோடம்பாக்கத்தில் பிரதானமாக எழுந்து நிற்கிறது. டிக்கெட் விற்பனையில்தான் இந்தப் புதிய சாதனை.
சென்னை அபிராமி மெகா மாலில் 20 நிமிடங்களில் 8 நாட்களுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நான்கு மணி நேரத்தில் ரூ 50 லட்சத்தை எந்திரன் வசூல் செய்திருப்பதாகவும், இது இந்தியத் திரையுலகில் முன்னெப்போதும் நிகழாத பெரும் சாதனை என்றும் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மற்ற திரையரங்குகளில் முன்பதிவு துவங்கிய ஒரு மணி நேரத்தில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன. வெள்ளிக்கிழமை நள்ளிரவிலிருந்தே ரசிகர்கள் திரண்டு வந்து இரவு முழுக்க விழித்திருந்து காலை ஒன்பது மணிக்கு முன் பதிவு தொடங்கியதும் டிக்கெட் வாங்கிச் சென்ற காட்சியை பல தியேட்டர்களில் காண முடிந்தது.
"நிறைய தியேட்டர்களில் திரையிடுவதால் ரசிகர்கள் நெருக்கடி இருக்காது என்று நினைத்தோம். மாறாக அதிகாலையிலேயே கூட்டம் திரண்டுவிட்டது. கேட்டுக்கு வெளியில் ஏராளமான ரசிகர்கள் நிற்பதால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதாக போலீசார் கூறியதும், கதவை திறந்து வளாகத்தின் உள்ளே அனுமதித்தோம். கவுன்டர்கள் திறக்கும்வரை ரசிகர்கள் அமைதியாக காத்திருந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது" என ஒரு தியேட்டர் காம்ப்ளக்ஸ் நிர்வாகி குறிப்பிட்டார்.
சத்யம் காம்ப்ளக்சில் மாணவ மாணவிகள், ஐ.டி துறை இளைஞர்கள் அதிகமாகக் காணப்பட்டனர். அருகில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள எஸ்கேப் சினிமாவின் அனைத்து கவுண்டர்களிலும் எந்திரன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதால் வெறும் 10 நிமிடத்தில் ஒரு வாரத்துக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுவிட்டன. இதனால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
உதயம், காசி தியேட்டரில் இளம் ரசிகர்கள் கும்பல் கும்பலாக நின்று கோஷமிட்டபடி காத்திருந்தனர். இங்கு அதிகாலை 3 மணியிலிருந்தே கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் வரத் துவங்கியது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பலர் ரசிகர் மன்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரத்தின் மகன் கணேஷ் கூறுகையில், `முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரண்டு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன. ஆன்லைனில் அதிக ரசிகர்கள் வந்ததால், சர்வர் ஹேங்காகி விட்டது. 40 வருடத்தில் இப்படியொரு வரவேற்பை எந்த படத்துக்கும் பார்த்ததில்லை` என்றார். கமலா மட்டுமல்ல, அபிராமி உள்ளிட்ட பல திரையரங்குகளின் இணையதளங்கள் நேற்று முழுக்க முடங்கிப் போயின.
சத்யம் தியேட்டர் காம்ப்ளக்ஸ் துணை தலைவர் முனி கண்ணையா, `சென்னை மற்றும் புறநகர்களில் 70-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் `எந்திரன்` திரையிடப்படும் நிலையில் இவ்வளவு பெரிய கூட்டத்தை முன்பதிவில் எதிர்பார்க்கவில்லை. ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது,` என்றார்.
கோவை கங்கா, யமுனா தியேட்டர்களில் காலை 6.30க்கு ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததால், 8 மணிக்கே வினியோகம் துவங்கியது. ஒரு மணி நேரத்தில் 1 வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டன.
மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உட்பட முக்கிய நகரங்கள் அனைத்திலும் இதே போன்ற உற்சாகத்துடன் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் நகரங்களில் பொதுவாக எந்தப் படத்துக்கும் முன் பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்துக்கான டிக்கெட்டுகள் அடுத்த 8 நாட்களுக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது புதிய வரலாறு என்கிறார்கள். திருப்பத்தூர் மீனாட்சி திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் கூடி, டிக்கெட்டுக்குக் காத்திருந்தனர்.
நன்றி:www.viduppu.com

Monday, September 27, 2010
Subscribe to:
Posts (Atom)