சினிமா உலகில் பிரபல நடிக நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளவது காலம் காலமாக நடந்து வருகின்றது....அது பற்றிய ஒரு சிறு தொகுப்பே இந்த பதிவு...
தமிழ் சினிமா உலகில் முதல் தற்கொலையாக கருதபடுவது 1974 ம் ஆண்டு நடந்த நடிகை விஜயஸ்ரீ இன் தற்கொலை ஆகும்..கொலை என கருதப்பட்ட இவரின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது..
தர்மயுத்தம் படத்தில் ரஜனிகாந்துக்கு தங்கையாக நடித்தவர் நடிகை லக்ஷ்மிஸ்ரீ.. 1979 ம் ஆண்டு காதலர் உறக்கத்தில் இருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் லக்ஷ்மிஸ்ரீ..முதலில் சந்தேகங்கள் எழுந்தாலும் இறுதியில் தற்கொலை என்றே தீர்பளிக்கபட்டது ..
நடிகை ஷோபா 1980களில் புகழின் உச்சியில் இருந்த ஒரு நடிகை..நிழல் நிஜமாகிறது,பசி,ஏணி படிகள்,மூடுபனி,அழியாத கோலங்கள் போன்ற படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது....பசி படத்தில் நடிததட்காக இவருக்கு ஊர்வசி விருது கிடைத்தது..ஆனால் இவருடைய புகழ் சிறிது காலமே நிலைத்தது...துரதிஷ்டவசமாக 1980 ம் ஆண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் ஷோபா..
முள்ளும் மலரும்,காளி போன்ற திரை படங்களில் நடித்தவர் நடிகை ஜெயலக்ஷ்மி...பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதையில் இவரின் பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது..துரதிஷ்டவசமாக தூக்கமாத்திரை உட்கொண்டு மரணத்தை தழுவி கொண்டார் ஜெயலக்ஷ்மி...
1990 காலபகுதியில் பிரபலமான ஹிந்தி நடிகை திவ்ய பாரதி....1974ம் ஆண்டு பிறந்த இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர்..பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்த இவர் 1993 ம் ஆண்டு தன்னுடைய 19வது வயதில் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்...இவருடைய தற்கொலைக்கான காரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது...
சில்க் சுமிதா... மறக்க முடியுமா இவரை..வசீகர புன்னகையால் வாலிபர் முதல் முதியோர் வரை கட்டி போட்ட இந்த கவர்ச்சி கன்னி 1980களில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகை..இவருடைய நேத்து ராத்திரி அம்மா எனும் பாடல் இன்றும் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம்....சிலுக்கு என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் இவர் 1996ம் ஆண்டு முப்பதாறாவது வயதில் தன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்...கடன் தொல்லை,காதல் தோல்வி மற்றும் மது பழக்கம் என்பனவே இவருடைய தற்கொலைக்கு காரணம் என நம்பபடுகிறது...
2001ம் ஆண்டு கடல் பூக்கள் எனும் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரதிக்ஷா.2002ம் ஆண்டு இவருடைய மரணம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விடயங்களில் ஒன்று....புன்னகை மன்னன் பட பாணியில் காதலருடன் சேர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடு பட்ட போது அதிர்ஷ்ட வசமாக காதலர் சித்தார்த் ரெட்டி பிழைக்க பரிதாபமாக உயிரிழந்தார் நடிகை பிரதிக்ஷா....பெற்றோரின் காதல் எதிர்பாலேயே பிரதிக்ஷா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்க படுகின்றது....பூச்சி மருந்து கலந்த குளிர்பானத்தை அருந்தியதாலேயே மரணம் சம்பவித்ததாக முதலில் தெரிவிக்க பட்ட போதும் பின்பு பிரதிக்ஷா மரணத்தில் சந்தேகம் இருபதாக தெரிவித்து அவரின் காதலர் கைது செய்ய பட்டார்..பிரதிக்ஷா கற்பழித்து கொல்லப்பட்டதாக சந்தேகம் நிலவுகின்றது....உண்மை அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..
ponaal pokattum.....
ReplyDelete