Search This Blog

Thursday, May 27, 2010

அழகிய இலங்கை...































Sunday, May 23, 2010

மாயா நாட்காட்டியின் படி 2012-ல் உலகம் அழியுமா?

மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.

மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

மாயமந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கைதேர்ந்த கில்லாடிகளான மாயர்கள் ஏன் 2012-ல் காலண்டரை முடித்து விட்டிருக்கிறார்கள். அன்று உலகம் அழியப் போவதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்கள் ஞானதிருஷ்டியால் கண்டுவிட்டார்கள் என்று கொலைவெறியோடு வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் பலர். ஆரம்பத்தில் தென்னமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் சூடாக விவாதிக்கப்பட்ட ‘உலகின் கடைசி நாள்’ விவாதம், இப்போது மூடநம்பிக்கைகளில் புரையோடிப் போன ஆசிய நாடுகளுக்கும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறது.

சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?

சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.

ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறிச்சீறும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிவுகள் மனிதகுலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, மற்றும் ஊழிப்பெருநீர் வகையறாக்களை உறுதி செய்கிறது.

சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதை ‘ஜட்ஜ்மெண்ட் டே’ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.

அதாவது இப்போது உலகில் வசித்து வரும் நீங்களும், நானும் ஐந்தாவது காலக்கட்ட மனிதர்கள். நான்காவது காலக்கட்டத்தில் வசித்தவர்கள் 5125 வருடங்களுக்கு முன்பாக (கி.மு. 3113ல்) நடந்த ஏதோ ஒரு இயற்கைப் பேரழிவில் மண்டையைப் போட்டிருப்பார்களாம். நிலத்தை மூழ்கடித்த நீரால் அவர்கள் அழிந்திருப்பார்கள் என்று மாயன் கணிப்பு கூறுகிறது. மனிதக்குலம் ஒட்டுமொத்தமாக அழிந்து, மீண்டும் பிறந்துதான் இன்று பூமியின் கடைசிக் காலக்கட்டத்தைச் சேர்ந்த பெருமை பெற்ற நீங்கள் விக்கிபீடியாவில் இந்த கட்டுரையை வாசிக்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று நாம் சொல்லவில்லை. எப்போதோ செத்துப்போன மாயர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

Source:www.z9world.com

Tuesday, May 18, 2010

பெண்கள் உலகை ஆண்டால்?- 2

ஒரு கற்பனை நகைச்சுவை























சிரிக்க சில ஜோக்ஸ்..





1.நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.
டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?
நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம்.


2.டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!



3.எதுக்குப்பா கல்யாண மாப்பிள்ளையை குதிரையிலே ஏத்திவிடறாங்க..?

தப்பிச்சு போக கடைசியா ஒரு வாய்ப்பு கொடுக்கறாங்க


4.ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு

ந‌ண்ப‌ன் : நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க


5.ராமு: குரைக்கிற நாய் கடிக்காது

சோமு: ஏன்?

ராமு: ஒரே சமயத்துல இரண்டு வேலையை அதால செய்ய
முடியாது, அதனால தான்


6.சர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார். சில மணிநேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.

அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?

சர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால்சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி சீக்கிரம் வரமுடியும்?


7.பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா.

அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.

பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா

அம்மா: கெட்ட செய்தி

பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க


8.பல்ப் - எடிசன்

ரேடியோ - மார்கோனி

பை-சைக்கிள் - மேக் மில்லன்

போன் - க்ராஹாம் பெல்

க்ராவிடி - நியூட்டன்

கரண்ட் - பாரடே


எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!


9.சர்தார்ஜியிடம் புதிதாய்ப் பிறந்த அவரது குழந்தையை நர்ஸ் கொடுத்தபோது, அவர் மகிழ்ச்சியில் குதிக்க ஆரம்பித்தார், "ஆண் குழந்தை ஆண் குழந்தை" என்று கத்தியபடி.

நர்ஸ் அதட்டினார்: "முட்டாளே! அது பெண் குழந்தை. முதலில் என் விரலை விடு"


10.எதுக்கு டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?

*
*
*
*
*
*
*
*

இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா ’கொசு’ங்கிறான் !

Saturday, May 15, 2010

வாழ்க்கை வாழ்வதற்க்கே.......

உனக்குள் இருக்கும் மிருகத்தை அடக்கினால்
உனக்குள் ஒளிந்திருக்கும் கடவுள் தெரிவார்..

பொறாமை ஒழி,பொறுமை பிறக்கும்
தர்மம் செய்,இரக்கம் சுரக்கும்....

உண்மையாய் இரு,நம்பிக்கை பிறக்கும்
ஒருவரை மட்டும் நேசி,வாழ்க்கை சிறக்கும்..

சமூகம் ஒரு கண்ணாடி,
நீ அதற்கு கொடுப்பதை தான் அது உனக்கு திருப்பி கொடுக்கும்....

நண்பனாய் இரு,ஆனால் அடிமையாய் இருக்காதே
எதிரியாய் இரு,ஆனால் துரோகியாய் இருக்காதே....

வெகுளியாய் இரு,ஆனால் முட்டாளாய் இருக்காதே
பெருமை கொள்,ஆனால் கர்வம் கொள்ளாதே....

தடியால் அடி,ஆனால் சொல்லால் அடிக்காதே
பணிவாய் நட,ஆனால் இழிச்சவாயாய் இருக்காதே....

நாத்திகம் பேசு,ஆனால் கோவிலை உடைக்காதே
கடவுளை நேசி,ஆனால் பகுத்தறிவை இழக்காதே.....

காதல் கொள்,ஆனால் காமம் கலக்காதே
எங்கு சென்றாலும் தமிழ் கலாசாரம் மறக்காதே....

Thursday, May 13, 2010

சிந்திக்க சில தத்துவங்கள்...

முடி வளர்ந்தா வெட்டலாம்,நகம் வளர்ந்தா வெட்டலாம், மூளை வளர்ந்தால்?


சாலைய பார்த்தா சமர்த்து,சேலைய பார்த்தா விபத்து...


டீ கப்ல டீ இருக்கும்,வேர்ல்ட் கப்ல வேர்ல்ட் இருக்குமா?


தாடையில வளர்ந்தா தாடி,பாடையில போனா பாடி....


நிக்கிற ரயிலுக்கு முன்னாடி ஓட முடியும்,ஆனால் ஓடுற ரயிலுக்கு முன்னாடி நிக்க முடியுமா?


வாழமரம் தார் போடும்,ஆனால் அத வச்சு ரோடு போடா முடியுமா?


பஸ்ஸில நாம ஏறினா பிரயாணி,பஸ் நம்ம மேல ஏறினா புரியாணி....



மேலே இருந்து கீழே வந்தா அருவி,கீழே இருந்து மேலே போனா குருவி...


என்னதான் கட்டிலுக்கு நாலு கால் இருந்தாலும் ஒரு காலில கூட செருப்பு போடா முடியாது..


என்னதான் சாப்ட்வேர் மேதையாய் இருந்தாலும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மூலம் காற்று வர வைக்க முடியாது...


நாய் நன்றி உள்ள மிருகமாய் இருந்தாலும் அதால் தாங்க்யு சொல்ல முடியாது...


அயன் பொக்ஸ்சில் அயன் பண்ண முடியும்..பென்சில் பொக்ஸ்சில் பென்சில் பண்ண முடியுமா?

உன் காதலிக்கு ஒரு "கோல்ட் ரிங்" வாங்கி கொடுக்கும்போது அவள் முகத்தில் தோன்றும் போலியான சந்தோசத்தை விட உன் நண்பனுக்கு ஒரு "கட்டிங்" வாங்கி கொடுக்கும்போது அவன் முகத்தில் தோன்றும் சந்தோசமே உண்மையான அன்பின் அடையாளம்

Wednesday, May 12, 2010

பெண்கள் உலகை ஆண்டால்?- 1

ஒரு கற்பனை நகைச்சுவை



















Monday, May 10, 2010

அதி புத்திசாலித்தனம்.....தாங்க முடியல -2