Search This Blog

Sunday, June 27, 2010

டொராண்டோவில் களேபரம்...

ஜூன் 26ம் திகதி கனடாவின் டொரோண்டோ நகரில் இடம்பெற்ற ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பெரும் கலவரம் வெடித்தது..
சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட ஊர்வலத்தில் திடீரென கலவரம் வெடித்ததில் டொராண்ரோ நகரமே அல்லோகல பட்டது.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வர்த்தக நிலையங்களின் கண்ணாடிகளை அடித்துநொறுக்கினர்..பல போலிஸ் கார்கள் தீப்பற்றி எரிந்தன..இதற்கெல்லாம் காரணம்
பிளக் பிளாக் எனும் அமைப்பு என்று போலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது...பெருமளவில் கலக்கம் அடக்கும் போலீசார் குவிக்கப்பட்டும் கலவரம் கட்டுக்கு அடங்கவில்லை..கலவரகாரர்கள் மாநாடு நடைபெறும் கட்டடத்தை சுற்றி அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை தகர்க்க முற்பட்ட போதும் அது கைகூடவில்லை..
இதனால் ஆத்திரமடைந்த ஆர்பாட்டக்காரர்கள் அதிக வன்முறையில் ஈடுபட்டனர்..இதையடுத்து மேலதிக போலீசார் வரவளைக்கப்பட்டனர்..சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட
போலீசார் கண்ணீர் புகை பிரயோகம் செய்து கலவரத்தை அடக்க பெரும்பாடுபட்டனர்..மதியம் தொடங்கிய கலவரம் சுமார் 12 மணிநேரமாக நள்ளிரவு வரையும் தொடர்ந்தது..இறுதியாக கிடைத்த தகவலின் படி சுமார் 130 பேர் கைதுசெய்ய பட்டுள்ளனர்..மாநாடு நாளையும் நடை பெற இருப்பதால் நாளையும் கலவரம் வெடிக்கலாம் என பரவலாக எதிர்பார்கபடுகிறது...இந்த மாநாட்டின் பாதுகாப்பு செலவீனம் சுமார் ஒரு பில்லியன் டாலர்களாகும்..

கலவரத்தின் சில காட்சிகள் இதோ...











Photos in courtesy of Canadian Press

பயன் தரும் மருத்துவ குறிப்புக்கள்-2

1.மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் தூள்

இயற்கையில் நம் முன்னோர் சமையலில் பயன்படுத்திய பல பொருட்களில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பது, பின்னாளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் சமையலில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் மஞ்சள் தூளின் மருத்துவ குணங்கள் சிலவற்றை இதில் பார்ப்போம். பொதுவாக மஞ்சள் நிறம் ஏற்படவும், உணவுப் பதார்த்தங்கள் கலராக இருப்பதற்குமே மஞ்சள் பயன்படுத்தப்படுவதாக பலரும் அறிவோம். ஆனால், அவற்றின் செயல்பாடு மிகவும் ஆச்சரியப்பட வைக்கும்.

மசாலாவில் மஞ்சள் நிறத்தைக் கொண்டுவருவதற்கு மஞ்சள் தூள் பயன்படுத்தப்படுகிறது.

`அல்ஜைமர்' நோய் உடையவர்களுக்கு மூளையில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதில் மஞ்சள் தூள் பெரும் பங்காற்றுகிறது. மஞ்சள் தூளில் இருக்கும் குர்குமின் (curcumin) என்ற பொருள் இதற்கு உதவுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவத்தில் வெகுகாலமாக பயன்படுத்தப்படும் மஞ்சள்தூளானது புற்றுநோய்க்கும், மல்டிபிள் செலெரோஸிஸ், சிஸ்டிக் பைபரோஸிஸ் போன்ற வியாதிகளுக்கும் அருமருந்தாக செயலாற்றி வருகிறது.

மஞ்சளில் உள்ள குர்குமின், ஒரு ஆன்டி-ஆக்ஸிடெண்டும், ஆன்டி இன்ஃப்ளமேட்டரி எனப்படும் எரிச்சல் குறைக்கும் மருந்தும் ஆகும். இது மூளையில் அமைலோய்ட் சேர்வதினால் உருவாகும் எரிச்சலையும், அதனால் உருவாகும் செல் உடைவுகளை சரிப்படுத்தவும் செய்கிறது.

முடக்குவாதம் (arthritis), இதயத்தில் பாதிப்பு ஏற்படுவதையும் குர்குமின் தடுக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.


2.மிள‌கி‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடு எ‌ன்ன?

மிளகு ப‌ல்வேறு மரு‌த்துவ‌ குண‌ங்களை‌க் கொ‌ண்டது. அத‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடுக‌ள் எ‌ன்ன எ‌ன்பது ப‌ற்‌றி பா‌ர்‌க்கலா‌ம். ‌மிளகு, வெ‌ல்ல‌ம், பசுநெ‌‌ய் ஆ‌கிய மூ‌ன்றையு‌ம் சே‌ர்‌த்து லே‌‌கியமாக ‌கிள‌றி நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு சா‌ப்‌பி‌ட்டுவர தொ‌ண்டை‌ப் பு‌ண் குணமாகு‌ம்.

‌சி‌றிது ‌சீரக‌ம், 5 ‌மிளகு, ‌கொ‌த்தும‌ல்‌லி ‌சி‌றிது, க‌றிவே‌ப்‌பிலை ஆ‌கியவ‌ற்றை அரை‌த்து ‌சி‌றிய உருணடைகளா‌க்‌கி உல‌ர்‌த்‌தி‌க் கொ‌ள்ளவு‌ம்.

தேவையான போது இ‌தி‌ல் ஒரு உரு‌ண்டையை க‌ற்பூரவ‌ல்‌லி இலை‌ச் சா‌ற்‌றி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ள்ள கொடு‌க்க குழ‌ந்தைகளு‌க்கு ஏ‌ற்படு‌ம் ச‌ளி‌த் தொ‌ல்லை தீரு‌ம். ஈளை ம‌ற்று‌ம் இரும‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் காலை‌யி‌ல் எழு‌ந்தது‌ம் கற‌ந்த பசு‌ம்பாலை கா‌ய்‌ச்‌சி, அ‌தி‌ல் ‌‌சி‌றி‌து ‌மிளகையு‌ம், ம‌ஞ்சளையு‌ம் பொடியா‌க்‌கி கல‌ந்து குடி‌த்து வர 3 நா‌ளி‌ல் குண‌ம் ‌கி‌ட்டு‌ம்.


3.ரத்த ஓட்டத்தை சீராக்கும் தக்காளி

சில‌ர் ப‌ல்வேறு உட‌ல் உபாதைகளு‌க்காக ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக்கொள்வது வழக்கம். அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் அவற்றில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

ஆனால், இந்த ஆஸ்பிரின் மாத்திரைக்கு பதிலாக தக்காளியை சாப்பிடலாம் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறு‌கிறது.

தக்காளி விதையில் இயற்கையாக ஜெல் போன்ற திரவம் காணப்படுகிறது. அந்த திரவமானது ரத்தம் உறைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும், சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதும் இந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது.

ஆ‌ய்வு கு‌றி‌த்து கூறுகை‌யி‌ல், ரத்த ஓட்டம் சீராகுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சிறிய அளவில் தினசரி ஆஸ்பிரின் மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அது, வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தி அல்சர் ஏற்பட வழிவகுக்கும் தன்மை உடையது. ஆனால் தக்காளி சாப்பிடுவதால் அதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படாது என்று தெரிவித்தனர்.


4.காசநோ‌ய்‌க்கு மரு‌ந்தாகு‌ம் தூதுவளை

தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை 1 டம்ளர் பசும்பாலில் கல‌ந்து ‌தினமு‌ம் காலையில் மட்டும் குடித்து வர நாவறட்சி, கபநீர், மூட்டு வலி, காசநோய் குணமாகும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, கடைந்தோ உண்டு வரக் கபக் கட்டு நீங்கி உடல் பலம் பெறும்.

தூதுவளை இலையைச் சாறு பிழிந்து அதேயளவு நெய்யில் காய்ச்சி 1 தேக்கரண்டியளவு 2 வேளை குடித்து வர, எலும்புருக்கிக் காசம், மார்புச் சளி உடனே நீங்கும்.

தூதுவளைக் காயை நிழலில் உலர்த்திக் காயவைத்து தயிர், உப்பு சேர்த்து பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டு வர மனநலம் பாதிப்பு, இதய பலவீனம், மலச்சிக்கல் குணமாகும்.

தூதுவளைப் பூக்கள் 10 எடுத்து 1 டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து 48 நாட்கள் இருவேளை குடித்து வர, தாது விருத்தி, உடல் பலம், முகவசீகரம் பெறலாம்.

source:www.pathivu.com

Thursday, June 24, 2010

ஐ போன் 4

அதோ இதோ என்று சொல்லப்பட்ட ஐ போன் 4 அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனமே ஐபோனையும் அது குறித்தத் தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இந்த போன் ஜூன் 24 அன்று விற்பனைக்குக் கிடைக்கும். அடுத்து ஜூலை மாதத்தில் மேலும் 18 நாடுகளில் வெளியிடப்படும். மேல் நாடுகளில், வெளியான பின், இந்தியாவிலும் விற்பனைக்கு இது செப்டம்பர் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த போனின் சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.

1.வடிவம்:

புதியதாக, முழு சதுரமாக, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இதன் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. வால்யூம் கீகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. முந்தைய போனைக் காட்டிலும் 28% ஸ்லிம்மாக உள்ளது. 9.33 மிமீ தடிமன் உள்ளது. இப்போது உள்ள மொபைல் போன்களில், இதுவே மிகக் குறைந்த தடிமன் உடையாதாக இருக்கிறது.

போனைச் சுற்றிச் செல்லும் ஸ்டீல் வளையம், ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதுவித உலோகமாகும். இது போனுக்கான ஆன்டென்னாவாகவும் இயங்குகிறது. இரண்டாவதாக ஒரு மைக் இணைக்கப்பட்டு, ஒலியின் தேவைற்ற இரைச்சலை நீக்குகிறது. இதன் டூயல் ஸ்பீக்கர்கள் கீழாக அமைக்கப்பட்டுள்ளன. எடை 137 கிராம்.

2. மைக்ரோசிம்:

இந்த போனில் வழக்கமான சிம் கார்டுக்குப் பதிலாக மைக்ரோ சிம்மினைப் பயன்படுத்தலாம்.

3.டிஸ்பிளே:

ஐபோன் 4–ன் திரை அதே 3.5 அங்குல அகலம் கொண்டுள்ளது. ரெசல்யூசன் 640 x 960 ஆக 320 x 480 லிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. மொபைல் போன் ஒன்றின் திரையில் அதிக பட்சம் காணப்படும் ரெசல்யூசன் இதுவாகத்தான் இருக்கும். எல்.இ.டி. பேக் லைட்டுடன் கூடிய எல்.சி.டி. திரையாக இது உள்ளது. இந்த திரையை‘Retina Display’ என அழைக்கின்றனர்.

இந்த தொழில் நுட்பம் ஒரு சதுர அங்குலத்தில் 326 பிக்ஸெல்களைத் தருகிறது. இந்த திரை மேற்புறம் அலுமினோ சிலிகேட் கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், இதில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படாது. இதை ரீசைக்கிள் செய்திட முடியும் என்பதால், அடுத்து ஐபோன் 5 வரும்போது எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

4. கேமரா:

இதன் கேமரா நேரடியாக 8 எம்.பி.க்கு உயரும் என்று எதிர்பார்த்த வேளையில், 5 மெகா பிக்ஸெல் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இதனை வீடீயோ ரெகார்டிங் போது பயன்படுத்தலாம். வீடியோ ரெகார்டிங் நொடிக்கு 30 பிரேம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

டச் போகஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் மற்றும் ஜியோ டேக்கிங் ஆகியவை கிடைக்கின்றன. போன் முன் பக்கம் உள்ள இன்னொரு கேமரா, வீடியோ சேட்டிங் செய்திட மிகவும் உதவுகிறது. பேஸ் டைம் என்னும் வசதி மூலம் கேமராக்களுக்கிடையே மாறிக் கொள்ளலாம்.

5.சிப்:

ஆப்பிள் ஏ4 சிப் ஒரு கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதே சிப் ஐ பேடிலும் பயன்படுத்தப்படுகிறது. மல்ட்டி டாஸ்க் மற்றும் கேம்ஸ் இயக்கங்கள் இதன் மூலம் மிக எளிதாகக் கிடைக்கின்றன. HSDPA/HSUPA, WiFi 802.11 b/g/n என நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது.

6. கூடுதல் உதிரி வசதிகள்:

பார்வை வசதி குறைந்தவர்களுக்கென ஸ்கிரீன் ரீடிங் என்னும் புதிய நுட்பம் தரப்பட்டுள்ளது. இது போனில் ஏற்படுத்தப்படும் அசைவுகள் மற்றும் தொடுதல் மூலம் இயங்குகிறது. கீ போர்டில் தொடப்படும் எழுத்துக்களை வாய்ஸ் மூலம் தருகிறது. இதன் உள்ளே உள்ள 21 மொழிகளில் இதனை இயக்கலாம். வீடியோ சேட் வசதி இதில் புகுத்தப்பட்டுள்ளது.

இதற்கென வீடியோ சேட் எனப்படும் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனை 30 புளுடூத் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைத்து இயக்கலாம். இதில் தரப்பட்டுள்ள ஸூம் செயல்பாடு மூலம், திரையை ஐந்து பங்கு பெரிதாக்கிக் காணலாம்.

தான் அடுத்து வடிவமமைக்கும் போன்களில் மின்திறன் அதிகப்படுத்தப்படும் என ஆப்பிள் முன்பு அறிவித்திருந்தது. இதில் மின்திறன் 40% அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 3ஜி பிரவுசிங் தொடர்ந்து ஆறு மணி நேரம், வீடியோ 10 மணி நேரம், மியூசிக் 40 மணி நேரம் பயன்படுத்தலாம். ஒரு முறை ஏற்றப்பட்ட சார்ஜ் 300 மணி நேரம் தங்குகிறது.


source:www.z9tech.com

Wednesday, June 23, 2010

மிக அரிய விளம்பரங்கள்-4

மிக அரிய கடிகார விளம்பரங்கள்..








































Monday, June 21, 2010

உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்..

உலககிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்....


முதலாவது கால்பந்தாட்ட உலககிண்ண போட்டியில் விளையாடியவர்களில் தற்போது உயிருடன் இருப்பவர் ஆர்ஜெண்டீனாவை சேர்ந்த பிரான்சிஸ்கோ வரல்லோ என்பவர் ஆவார்..அவருக்கு தற்போது நூறு வயது...

போட்டி துவங்கி மிகக்குறைந்த நேரத்தில் வெளியேற்றப்பட்ட வீரர் உருகுவேயின் ஜோஸ் பாடிஸ்டா ஆவார்..1986ம் ஆண்டு உலககிண்ண போட்டியில் இவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்படும் போது போட்டி தொடங்கி வெறும் 56 செகண்டுகள் தான்..

உலககிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் இதுவரை 48 முறை ஹாட்ரிக் கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன..


உலககிண்ண போட்டிகளில் ஒரு போட்டிக்கான சராசரி பார்வையாளர்களின் எண்ணிக்கை 43000

உலககிண்ண போட்டிகளில் விளையாடிய மிக இளம்வீரர் வடஅயர்லாந்தை சேர்ந்த நோர்மன் வைட்சைடு என்பராவர்..1982ம் ஆண்டு உலககிண்ண போட்டியில் விளையாடும் போது இவருக்கு வயது 17வருடங்கள் 41நாட்கள்..

உலககிண்ண போட்டியில் விளையாடிய வயதான வீரர் கமேரூன் நாட்டை சேர்ந்த ரோகேர் மில்லேர் ஆவார்..1994ம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் விளையாடும் போது இவருக்கு வயது 42..

உலககிண்ண வரலாற்றில் அடிக்கப்பட்ட முதலாவது கோல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூசியன் லாரன்ட் என்பவரால் மெக்ஸிகோ அணிக்கு எதிராக 1930ம் ஆண்டு போட்டியின்
19வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது..

ஸ்காட்லாந்து அணி இதுவரை 8தடவைகள் உலககிண்ண போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது.
8 தடவையும் முதல் சுற்றை தாண்டவில்லை..

முதலாவது உலககிண்ண போட்டியின் அணைத்து போட்டிகளும் உருகுவே நாட்டின் மொண்டேவேடோ எனும் நகரிலேயே விளையாடப்பட்டது...

உலககிண்ண போட்டிகளில் அடிக்கப்பட்ட மிக வேகமான கோல் துருக்கியை சேர்ந்த ஹகன் சுகர் என்பவரால் 2002ம் ஆண்டு தென்கொரியாவுக்கேதிராக அடிக்கப்பட்டது..போட்டி தொடங்கி பதினோராவது செக்கனில் இந்த கோல் அடிக்கப்பட்டது..

முதலாவது உலககிண்ண போட்டியில் 13 அணிகளே பங்குபற்றின..

உலககிண்ண போட்டிகளில் மிக அதிகமான கோல்களை அடித்த வீரர் பிரேசிலின் ரொனால்டோ ஆவார்..இவர் மூன்று(1998, 2002,2006)உலககிண்ண போட்டிகளில் விளையாடி 15 கோல்களை அடித்துள்ளார்..

உலககிண்ண வரலாற்றில் இரண்டு அணிகளில் விளையாடிய ஒரே வீரர் ஆர்ஜெண்டீனாவை சேர்ந்த லூயிஸ் மொண்டி ஆவார்..இவர் 1930ம் ஆண்டு அர்ஜெண்டேனாவுக்குக்ம்,1934ம் ஆண்டு இத்தாலிக்கும் விளையாடினார்..

1998ம் ஆண்டு உலககிண்ண போட்டிகளிலேயே மிக அதிகமான கோல்கள் அடிக்கப்பட்டன..மொத்தமாக 171 கோல்கள்..

இதுவரை 75 நாடுகள் உலககிண்ண தொடரில் பங்குபற்றி உள்ளன..

2ம் உலக போர் காரணமாக 1946 ம் ஆண்டு உலககிண்ண போட்டிகள் ரத்து செய்ய பட்டன..

இதுவரை நடந்த அனைத்து உலககிண்ண போட்டிகளிலேயும் பிரேசில் அணி பங்குபற்றி உள்ளது


Source: www.cbc.com

Saturday, June 19, 2010

ராவணன்- திரை விமர்சனம்..


புதுமையான சிந்தனைகள் மூலம் சிறந்த படைப்புக்களை தந்து தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்தவர்களில் இயக்குனர் மணிரத்னமும் ஒருவர்..இந்த கலை சிற்பியின் இயக்கத்தில் வெளிவந்த நவீன ராமாயணம் தான் இந்த ராவணன்..சீயான் விக்ரம்,ஐஸ்வர்யா ராய்,பிரிதிவிராஜ்,பிரபு,பிரியாமணி,கார்த்திக் என ஒரு நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில் வெளிவந்த ராவணனின் கதை என்று பார்ப்போமானால்,காட்டில் வாழும் தாழ்த்த பட்ட இன மக்களின் விடுதலை வீரனாக மக்களால் போற்றப்படும் வீரய்யா எனும் வீராவை பிடிக்க போலீஸ் அதிகாரியான எஸ்.பி தேவ் பிரகாஷ், மனைவி ராகினியுடன் வீராவின் ஊருக்கு வருகிறார்..வீராவின் தங்கை வெண்ணிலா கல்யாணத்தில் புகுந்து வீராவை சுடுகிறார் தேவ் பிரகாஷ்..வீரா தப்பி செல்ல அந்த கடுப்பில் மணகோலத்தில் இருந்த வெண்ணிலாவை இழுத்து சென்று போலீஸ் நிலையத்திலேயே வைத்து கற்பழித்து விடுகின்றனர் சில போலிஸ் அதிகாரிகள்..இதை வீராவிடம் கூறிவிட்டு தற்கொலை செய்கிறாள் வெண்ணிலா..வெண்ணிலா மரணத்திற்கு பழிவாங்கும் முகமாக தேவ் பிரகாஷ் மனைவி ராகினியை கடத்திவிடுகிறான் வீரா...ராகினி தப்பித்தாளா?வீராவின் கதி என்ன?இந்த கேள்விகளுக்கான விடையே மீத கதை..


வீராவாக விக்ரமும்,ராகினியாக ஐஸ்வர்யா ராயும்,தேவ் பிரகாஷாக பிரிதிவிராஜும்,வெண்ணிலாவாக ப்ரியாமணியும் நடித்துள்ளனர்.. வீராவாக விக்ரம் வாழ்ந்தே உள்ளார் என கூறலாம்..பேச்சு,பாடி லாங்குவிஜ் கன கச்சிதம்..கோபம்,காதல்,சோகம்,வெறுப்பு என பல்வேறுபட்ட உணர்சிகளை தத்துரூபமாக வெளிகொனர்ந்துள்ளார்.சில காட்சிகளில் கண்களாலேயே பேசி மிரட்டுகிறார் மனுஷன்....ராகினியாக ஐஸ்வர்யா அற்புதமாக நடித்துள்ளார்...இன்னமும் மாறாத அதே அழகு..அந்த அழகின் ரகசியம் என்னவோ...பல காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா..அடுத்து ஆங்கில பட ஹீரோக்களை போல கம்பீரமாக அறிமுகமாகிறார் பிரிதிவிராஜ்...கூர்மையான பார்வை,விஷமம் கலந்த சிரிப்புடன் வலம்வருகிறார்..நல்லவரா?கெட்டவரா?என்று ரசிகர்களை குழப்பும் வகையில் அமைத்துள்ளது இவரது பாத்திரம்....வீராவை பிடிக்க போகும்போது காட்டும் ஆக்ரோஷம்,மனைவியை பிரிந்த போது காட்டும் தவிப்பு என நடிப்பில் நன்கு ஸ்கோர் பண்ணுகிறார் பிரிதிவிராஜ்..கொஞ்சநேரம் திரையில் வந்தாலும் வெண்ணிலாவாக வரும் ப்ரியாமணி எல்லோருடைய மனதிலும் நிற்கிறார்..இவர்களை தவிர விக்ரமின் அண்ணன் பாத்திரத்தில் வரும் பிரபுவும்,பாரெஸ்ட் அதிகாரியாக வரும் கார்த்திக்கும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.."நித்தியானந்தா"புகழ் ரஞ்சிதா வரும் காட்சிகளில் தியேட்டரில் கைதட்டல் பலம்...

படத்தின் இன்னுமொரு பலம் ஏ.ஆர்.ரஹ்மான்..ரஹ்மானின் இசையில் உசிரே போகுதே பாடல் இனிமை..பாடல்கள் அனைத்தும் படத்தின் கதையுடன் இணைந்தே வருவதால் ஏதோ ஒரு வித்தியாசம் உணரப்படுகிறது...பின்னணி இசையில் மிரட்டுகிறார் ரஹ்மான்..சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டனின் ஒளிப்பதிவு மிகப்பிரமாண்டம்..ஐஸ்வர்யா ராய் விக்ரம் க்ளோசப் ஷோட்கள் அருமை...கிளைமாக்ஸ் சண்டைகாட்சியில் ஒளிப்பதிவு வாயை பிளக்க வைக்கின்றது...இவை அத்தனையும் ஒருங்கிணைத்த ஆசான் மணிரத்தினம்....சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்கையை பிரதிபலிப்பது போன்று அமைகப்பட்டிருக்கிறது வீரா கதாபாத்திரம்..வீரப்பனின் வாழ்கையையும் ராமாயணத்தையும் கலந்து ஒரு நவீன இதிகாசத்தை படைக்க மணிரதினத்தால் தான் முடியும்..இந்த நவீன ராமாயத்தில் அனுமார் வேடத்தில் கார்த்தி வருகிறார் என்பதற்காக அவரை மரத்திற்கு மரம் தாவ விட்டிருப்பது கொஞ்சம் ஓவர்..படத்தில் சில குறைகள் இருந்தாலும் அவை கண்ணனுக்கு பெரிதாக தெரியாதபடி மறைக்கிறது திரைக்கதை..முன்பாதியிலும் பார்க்க பின்பாதி திரைக்கதை கொஞ்சம் வேகம் குறைவுதான்..ஆக மொத்தம் ஒரு ராபின் ஹூட் பிளஸ் ராமாயணம் ஹைப்ரிட் தான் இந்த ராவணன்...

Thursday, June 17, 2010

ஒரு காலத்தில்....

நடிகர் சூர்யா,விஷால் மற்றும் நடிகை மீனாவின் குழந்தை பருவ படங்கள்....



















பயன் தரும் மருத்துவ குறிப்புக்கள்...

1.ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு ‌தினமு‌ம் ஒரு ஆ‌ப்‌பி‌ள்

ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.

மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர மது அருந்தும் எண்ணம் கட்டுப்படும்.

தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது.

வ‌யி‌ற்று‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.


2.ப‌ச்சை‌க் கா‌ய்க‌றிக‌ள்

பச்சை மஞ்சள் காய்கறிகள் பழங்கள் சிறந்தது இவைகளில் விட்டமின் ஏ, விட்டமின் சி அதிகம்.

விட்டமின் ஏ யில் பீட்டா கரோட்டின் உள்ளது இது ஒரு ஆண்ட்டி ஆக்ஸிடெண்ட். புற்று நோய் வராமல் தடுக்கும் குணம் கொண்டது.

கேரட், தக்காளி பீட்ரூட், மாம்பழம், கொய்யா, ஆரஞ்சு, ஆப்பிள், எலுமிச்சை, நெல்லி, திராட்சை இவைகளில் இந்த சத்து அதிகம் அவைகளை அடிக்கடி சாப்பிட்டால் புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவு.


3.அருமரு‌ந்தான துளசி

துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.

அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் அந்த துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். அவற்றில் ஒரு சில உங்களுக்காக.

துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

கோடை காலம் வரப்போகிறது. வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றமா உங்களிடமா? ஜோக் அடிக்காதீங்க.

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். எப்படித் தெரியுமா? துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.

சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மரு‌ந்து மா‌த்‌திரை மூல‌ம் செ‌ய்ய முடியாததை இ‌ந்த அருமரு‌ந்தான துள‌சி செ‌ய்து‌விடு‌ம்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.


4.க‌றிவே‌ப்‌பிலை சா‌ப்‌பிடுவதா‌ல்

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.

வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இ‌ப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம்.

இளம‌் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம் எ‌ன்பது தெ‌ரி‌ந்த ‌விஷய‌ம். ஆனா‌ல் தெ‌ரியாத ‌விஷய‌ம் ஒ‌ன்று உ‌ள்ளது.

அதாவது, நரை முடி வ‌ந்தவ‌ர்களு‌ம், உண‌விலு‌ம், த‌னியாகவு‌ம் க‌றிவே‌ப்‌பிலையை அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் நரை முடி போயே போ‌ச்சு.


Source: www.pathivu.com

Tuesday, June 15, 2010

நான் பாதி நீ பாதி கண்ணே...

தமிழ் நடிக நடிகையர் குடும்பத்துடன்...