Search This Blog

Wednesday, July 6, 2011

பர்சனல் பயோடேட்டா-6




பெயர்: கனிமொழி

செல்லப்பெயர்: கருணா(ய்)நிதியின் இலக்கிய வாரிசு

தொழில்: வேலை வெட்டி எதுவும் இல்லைங்கோ

பொழுதுபோக்கு: கதை,கவிதை எழுதுதல்,கொள்ளை அடித்தல், கம்பி எண்ணுதல்

வருமானம்: எண்ணுவதற்கு நேரமில்லை

பலம்:பணம், கருணாநிதி,தி.மு.க

பலவீனம்: சகோதரர்கள்,பேராசை

சமீபத்தைய சாதனை: 2G Spectrum ஊழல், கருணாநிதி தலையில் மிளகாய் அரைத்தது

நீண்டநாள் சாதனை: பாராளுமன்ற உறுப்பினர் ,2 முறை திருமணம்

சமீபத்தைய ஏரிச்சல்: 2G Spectrum ,திகார் ஜெயில்,நீரா ராடியா

சிறந்த நண்பர்கள்: A.ராஜா, நீரா ராடியா

சமீபத்தைய ஆப்பு: திகார் ஜெயில்







பெயர்: திருவாளர் பொதுஜனம்

பட்டபெயர்: இளிச்சவாயர், ஏமாளிகள்

பலம்: ஒட்டு உரிமை, ஜனநாயகம்

பலவீனம்: ஒட்டு போடாமை, அரசியல்வாதிகள், ஜாதி வெறி

நீண்டகால சாதனை:ஜனத்தொகை 

நீண்டகால எரிச்சல்: அரசியல்வாதிகள், சாமியார்கள்

சமீபத்திய எரிச்சல்: சினிமா நடிகர்களின் அலப்பறைகள்

தேர்தல்:  இலவசங்களின் சீசன்,ஒரு நாள் விடுமுறை

எஜமான்: அரசியல்வாதிகள், சாமியார்கள், நடிகர்கள்

ஜனநாயகம்: கணக்கில் எடுப்பதில்லை

நம்புவது; அரசியல்,சினிமா,கடவுள்,போலிச்சாமியார்கள், சொல்புத்தி

நம்பமறுப்பது: சொந்த புத்தி ,தன்னம்பிக்கை,பகுத்தறிவு

அரசியல்வாதிகள்: ஒட்டு பொறுக்கிகள்,புளுகு மூட்டைகள்

தினமும் ஏறுவது : கடன், வன்முறை,சுயநலம் 

தினமும் குறைவது : பேங்க் பேலன்ஸ்,தன்னம்பிக்கை,அகிம்சை,பொதுநலம்

Monday, July 4, 2011

இலங்கை- மிக அபூர்வமான படங்கள்-1


இலங்கையின் 18ம் நூற்றாண்டு அரிய புகைப்படங்கள்











Friday, July 1, 2011

இளநீரின் மருத்துவ குணங்கள்...



இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம்(Isotonic Drink).


இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மயக்கம், அசதி ஏற்படும் போது மருத்துவரிடம் செல்வதற்கு முன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும்.


கடும் நீரிழப்பின் போது(severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியும். மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும்.அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகுவது நல்லது.



பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும் போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்து விட்டு உடனடியாக இளநீர் பருகி வர உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சிறுநீர்க்குழாய் பாதிப்பு(Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.

டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும். அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.

உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும் போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.

கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று ஆரோக்கியத்துடன் வாழலாம்.

உடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பானிக் குளிர்பானங்கள்(Carbonated Drinks), பனிக்கூழ்(Ice cream) ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.

மேலும் தோல் பளபளப்பாக சிவப்பாக மாற 24 மில்லி கிராம் ஸல்ஃபர் உப்பு தேவைப்படுகிறது. இந்த ஸல்ஃபர் உப்பு இரத்தம் சுத்தம் அடையவும் கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் தோல் முடி நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன. இந்த உப்பு இளநீரில் அதிகம் காணப்படுகிறது.


Source: www.tech.lankasri.com

Tuesday, June 28, 2011

பால் வீதி - 2


கடந்த பதிவில் நட்சத்திரங்களின் தோற்றம் பற்றி பார்த்தோம்.இந்த பதிவில் நட்சத்திரங்களை பற்றி சற்று ஆழமாக பாப்போம்..

நட்சத்திரங்களை நாம் பொதுவாக ஐந்து வகைகளாக பிரிக்கலாம்.

1. Main-Sequence Star (சாரி...இதன் தமிழ் அர்த்தம் தெரியவில்லை).

இந்தவகை நட்சத்திரங்கள் தான் மிக அதிகமாக விண்வெளியில் காணபடுகின்றன.நமது சூரியனும் இந்த வகையை சார்ந்தது தான்.இவை அளவிலும்,பிரகாசத்திலும் வேறுபடுகின்றன,ஆனால் இவில் மிகவும் நிலையான நட்சத்திரங்கள்.இதற்கு காரணம் புவியீர்ப்பு விசையுடன் உள்ள சமநிலை ஆகும்.அதாவது புவியீர்ப்பு விசையானது மையத்திலிருந்து நட்சத்திரத்தை எப்போதும் உள்ள்நோகியே இழுக்கும்,ஆனால் Nuclear Fission எனப்படும் அணு சேர்க்கையானது பெருமளவில் சக்தியை வெளிநோக்கி தள்ளுகின்றது.இந்த இரண்டு விசைகளும் சமநிலையில் இருப்பதே இவற்றின் நிலையான தன்மைக்கு காரணமாகும்.இந்தவகை நட்சத்திரங்கள் பல பில்லியன் ஆண்டுகள் நிலைக்க கூடியவை.(எமது சூரியனின் வயது சுமார் ஐந்து பில்லியன் அண்டுகள் ஆகும்). Sirius மற்றும் Alpha Centuri A போன்றவையும் இந்த வகை நட்சத்திரங்கள் தான்.

2. Red Giant Star - ரெட் ஜயன்ட்

ஒரு நட்சத்திரத்தின் மையத்தில் உள்ள ஐதரசன் வாயு தீர்ந்ததும் அணு சேர்கை தடைபடுகின்றது.புவியீர்ப்பு சமநிலையில் தளம்பல் ஏற்படும் போது மையத்தை சுற்றி உள்ள ஐதரசன் வாயு ஹீலியமாக மாற மீண்டு சமநிலை சரி செய்யபடுகின்றது.இந்த நிலையில் அந்த நட்சத்திரம் ஒரு பலூனை போல ஊதி சுமார் 100 மடங்கு பெருக்கின்றது.இந்த நிலையில் உள்ள நட்சத்திரங்களை ரெட் ஜயன்ட் என கூறுவார்.பொதுவாக அநேகமான Main-Sequence நட்சத்திரங்கள் காலம் செல்ல செல்ல ஐதரசன் வாயு குறைவடைய இந்த நிலையை அடைகின்றன. ரெட் ஜயன்ட் நிலையானது சில மில்லியன் வருடங்களே நீடிக்கும்.அணு சேர்க்கை நடைபெற மேலும் எரிபொருள் இல்லாத நிலையில் நட்சத்திரமானது மிக சிறிய வெண் குள்ள நட்சத்திரமாக (White Dwarf Star) மாறுகின்றது.நமது சூரியனுக்கும்ம் இதே நிலை தான்..

3. Red Dwarf Star - செங் குள்ள நட்சத்திரம்

இந்தவகை நட்சத்திரங்கள் விண்வெளியில் பரவலாக காணபடுகின்றன.இவை Main Sequence நட்சத்திர வகையை சார்ந்தவை தான் ஆனால் மிகவும் குறைந்த எடையை கொண்டவை.குறைந்த எடை காரணமாக இவற்றின் வெப்பநிலை நமது சூரியனை விட மிகவும் குறைந்தே காணபடுகின்றது.இந்தவகை நட்சத்திரங்களில் அணு சேர்கை மெதுவாகவே நடை பெறுவதால் இவை சுமார் 10 ட்ரில்லியன் ஆண்டுகள் வரை அழியாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் கணிப்பிட்டுள்ளனர்.இவற்றின் எடை சூரியனின் எடையில் 0.075% முதல் 50% வரை காணபடுகின்றது.

4. Neutron Star - நியுட்ரோன் நட்சத்திரம்

சூரியனை விட 1.35-2.1மடங்கு பெரிய நட்சத்திரங்கள் அழியும் போது அவை வெண் குள்ளமாக மாறுவதில்லை,மாறாக முற்று முழுதாக நியுற்றோன்களால் ஆனா ஒரு சிறிய நட்சத்திரமாக மாறுகின்றன.காரணம் இவை அழியும் போது சுபெர்நோவா எனும் பாரிய வெடிப்புடன் அழிகின்றன.நியுட்ரோன் நட்சத்திரத்தில் புவியீர்ப்பு விசை மிக அதிகமாக காணப்படுவதால் புரோட்டன்களும் இலத்திரன்களும் ஒன்று சேர்ந்து நியுற்றோன்களாக மாறுகின்றன.இந்தவகை நட்சத்திரங்கள் விண்வெளியில் மிக அரிதாகவே காணபடுகின்றன.இந்தவகை நட்சத்திரங்கள் மிகவும் அடர்த்தி உடையவை.நியுட்ரோன் நட்சத்திரத்தில் இருந்து ஒரு மேசைகரண்டி அளவு பதார்த்தத்தை வெட்டிஎடுத்தால் பூமியில் அதன் நிறை எவரெஸ்ட் சிகரத்தின் நிறைக்கு சமனாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


5. Super-giant or Hyper-giant Stars - ராட்சத அல்லது அதி ராட்சத நட்சத்திரங்கள்.

விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களில் மிகவும் பெரியவை இந்த வகை நட்சத்திரங்கள்.சூரியனை காட்டிலும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட அளவையுடைய நட்சத்திரங்களை Supergiants என ஆங்கிலத்தில் அழைகின்றனர்.இந்தவை நட்சத்திரங்கள் மிக வேகமாக அதன் ஐதரசன் எரிபொருளை முடிப்பதால் இவற்றின் ஆயுள் சில மில்லியன் ஆண்டுகள் தான்."Main Sequence" நட்சத்திரங்களை போல் இவை நிலையானவை அல்ல.மிகவும் உறுதியற்ற நிலையிலேயே இவை காணபடுகின்றன.சூரியனை விட 100 மடங்கு பெரிய நட்சத்திரங்கள் ஆங்கிலத்தில் "Hypergiants"  என அழைக்கபடுகின்றது.இந்தவகை நட்சத்திரங்கள் மிக மிக அரிதாகவே விண்வெளியில் காணபடுகின்றன.இது வரையில் கண்டுபிடிகப்பட்ட நட்சத்திரங்களில் மிக பெரியது "VY Canis Majoris" ஆகும்.இது சூரியனை காட்டிலும் 2100 மடங்கு பெரியது.இதன் விட்டம் 3.063பில்லியன்km  ஆகும்.நமது சூரியனை எடுத்து விட்டு அந்த இடத்தில இதை வைத்தால்சனிகிரகம் வரை இதன் விட்டம் இருக்கும். ஒளிக்கதி ஆனது சூரியனை ஒரு முறை சுற்றி வர 14வினாடிகளே ஆகின்றது,ஆனால் இந்த நட்சத்திரத்தை சுற்றிவர ஒளிகதிருக்கு 2.7 மணித்தியாலங்கள் தேவை.இந்தவகை நட்சத்திரங்கள் அழியும் போது கருந்துளைகளாக மாறுகின்றன.

நட்சத்திரங்களின் அளவுகள் இதோ ஒரே படத்தில்.....


தொடரும்.....

Monday, June 27, 2011

மேக்கப் இல்லா ஹிந்தி நடிகைகள்.....


பிரபல ஹிந்தி நடிகைகளின் மேக்கப் அற்ற இயற்கையான முகங்கள்...


பிபாஷா பாசு 



தீபிகா படுகோனே 



கஜோல் 


கரீனா கபூர் 


கத்ரீனா கைப் 


மாதுரி டிக்ஸ்சீத்



பிரியங்கா சோப்ரா 



 சுஷ்மிதா சென் 


தபு 




மேலும் பல நடிகைகளின் படங்கள் ஒரு வீடியோ தொகுப்பாக....

இலங்கையின் கொலைக்களங்கள் (18+)


ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு வீடியோ. 

( எச்சரிக்கை: கொடூரமான வன்முறை காட்சிகள்.)




Saturday, June 25, 2011

பால் வீதி-1



 இந்த உலகில் நாம் விடை காண துடிக்கும் மர்மங்கள் நிறையவே உள்ளன.நாம் எப்படி இவ்வுலகிற்கு வந்தோம்?இந்த பூமி எப்படி உருவானது?விண்வெளியின் இரகசியங்கள் என்ன? போன்ற கேள்விகள் சிறு வயதிலிருந்தே என்னை துளைத்துக்கொண்டிருந்தன.என்னுடைய நெடுநாள் தேடலுக்கு தீர்வாக சமீபத்தில் நான் பார்த்த "The Universe" என்னும் ஆவணப்படம் அமைந்தது.இதன் மூலம் நான் பெற்ற விடைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த பேரண்டத்தின் உருவாக்கம் பற்றி பொதுவாக எல்லோராலும் விஞ்ஜான ரீதியாக ஏற்றுகொள்ள பட்ட கொள்கை "Big Bang Theory" என அழைக்கபடுகிறது.அதாவது எதுவுமே இல்லாத ஒரு நிலையிலிருந்து திடீரென வெடித்து பரவியதே தற்போதைய விண்வெளியின் பிறப்பு என விஞ்ஞானிகள்  கூறுகின்றனர்.அந்த ஆரம்ப புள்ளியை ஆங்கிலத்தில் "singularity" என கூறுவர். இந்த ஆரம்ப புள்ளிக்குள் தான் விண்வெளியின் மிகவும் அடிப்படையான நான்கு விசைகள் தோற்றம் பெற்றன.புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை, வலிமையான அணு விசை மற்றும் ஐதான அணு விசை என்பனவே அந்த நான்கு விசைகளாகும். singularity எனப்படும் அந்த ஆரம்பபுள்ளியினுள் சமநிலையில் இந்த நான்கு விசைகளும் காணப்பட்டன.புவியீர்ப்பு விசையினால் இந்த சமநிலை உடைக்கப்பட்ட பொது ஒளியை விட வேகமாக அண்டம் விரிவடைய தொடங்கியது.இந்த விரிவாக்கமானது எல்லாத்திசையிலும் சமசீராகவே நடைபெற்றது. வெடிப்பு சுமார் 13.7பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதாக விஞ்ஜானிகள் கூறுகின்றனர்.

Big bang வெடிப்பு நிகழ்ந்து சுமார் 380,000ஆண்டுகளின் பிறகே முதலாவது நட்சத்திரம் தோன்றியதாக கூறபடுகிறது.விண்வெளியில் மிக அதிகமாக காணப்படும் மூலக்கூறு ஐதரசன் வாயு ஆகும்.இத்துடன் தூசு துணிக்கைகள் மற்றும் சடப்பொருள் என்பன விண்வெளியில் நிறைந்து காணபடுகின்றன.புவியீர்ப்பு விசை காரணமாக ஐதரசன் வாயுவின் மூலக்கூறுகள் மெதுவாக ஒன்றை ஒன்று நெருக்க தொடங்குகின்றன.காலபோக்கில் இந்த நெருக்கம் அதிகமாக வாயுவின் அடர்த்தி,வெப்பம்  மற்றும் அமுக்கம் என்பன அதிகரிக்கின்றன.ஒரு கட்டத்தில் அதீத அமுக்கம் மற்றும் அடர்த்தி காரணமாக ஐதரசன் வாயுவின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து விடுகின்றன.இந்த பினைவை ஆங்கிலத்தில் Nuclear fusion என அழைப்பர்.nuclear fusion நடைபெறும் பொது பெருமளவில் சக்தி வெளிவிடபடுகின்றது.இந்த சக்தி ஒளியாகவும்,வெப்பமாகவும் வெளியேறுகின்றது.

புவியீர்ப்பு விசையினால் உருவாகும் nuclear fusion காரணமாகவே நட்சத்திரங்கள் உருவாவதாக விஞ்ஜானம் கூறுகின்றது.மூலகூறுகளுக்கு இடையிலான புவியீர்ப்பு விசையினால் நட்சத்திரங்கள் உருவானதை போலவே தான் கோள்களும் உருவாகின.ஒரு நட்சத்திரத்தை சுற்றி உள்ள தூசு துணிக்கைகள் அந்த நட்சத்திரத்தின் புவியீர்ப்பு விசையினால் நெருகமடைகின்றன.மிகவும் நுண்ணிய துகள்கள் சேர்ந்து மணல் அளவில் துணிக்கைகள் உருவாகின்றன.மணல் அளவில் உள்ள துணிக்கைகள் சேர்ந்து கல்லாக மாறுகின்றன.காலபோக்கில் இவ்வாறு துணிக்கைகள் சேர்ந்து கோள்கள் தோற்றம் பெறுகின்றன.இவ்வாறு தோற்றம் பெற்ற கோள்கள் புவியீர்ப்பு விசை காரணமாக நட்சத்திரங்களை சுற்ற ஆரம்பிக்கின்றன.இதனால் சூரிய குடும்பங்கள் தோற்றம் பெற்றன.இவ்வாறு எண்ணில் அடங்கா நட்சத்திரங்கள்,கோள்கள் மற்றும் சூரிய குடும்பங்கள் அடங்கிய ஒரு தொகுதியை கலேக்சி என அழைக்கின்றனர்.விஞ்ஞானிகளின்  கணிப்பின்படி அண்டவெளியில் சுமார் 100 பில்லியன் கலேக்சிகள் உள்ளன.ஒவொரு கலக்சியிலும் சுமார் நூறு முதல் இருநூறு பில்லியன் வரையிலான நட்சத்திரங்கள் உள்ளன.

தொடரும்...