கடந்த பதிவில் நட்சத்திரங்களின் தோற்றம் பற்றி பார்த்தோம்.இந்த பதிவில் நட்சத்திரங்களை பற்றி சற்று ஆழமாக பாப்போம்..
நட்சத்திரங்களை நாம் பொதுவாக ஐந்து வகைகளாக பிரிக்கலாம்.
1. Main-Sequence Star (சாரி...இதன் தமிழ் அர்த்தம் தெரியவில்லை).
இந்தவகை நட்சத்திரங்கள் தான் மிக அதிகமாக விண்வெளியில் காணபடுகின்றன.நமது சூரியனும் இந்த வகையை சார்ந்தது தான்.இவை அளவிலும்,பிரகாசத்திலும் வேறுபடுகின்றன,ஆனால் இவில் மிகவும் நிலையான நட்சத்திரங்கள்.இதற்கு காரணம் புவியீர்ப்பு விசையுடன் உள்ள சமநிலை ஆகும்.அதாவது புவியீர்ப்பு விசையானது மையத்திலிருந்து நட்சத்திரத்தை எப்போதும் உள்ள்நோகியே இழுக்கும்,ஆனால் Nuclear Fission எனப்படும் அணு சேர்க்கையானது பெருமளவில் சக்தியை வெளிநோக்கி தள்ளுகின்றது.இந்த இரண்டு விசைகளும் சமநிலையில் இருப்பதே இவற்றின் நிலையான தன்மைக்கு காரணமாகும்.இந்தவகை நட்சத்திரங்கள் பல பில்லியன் ஆண்டுகள் நிலைக்க கூடியவை.(எமது சூரியனின் வயது சுமார் ஐந்து பில்லியன் அண்டுகள் ஆகும்). Sirius மற்றும் Alpha Centuri A போன்றவையும் இந்த வகை நட்சத்திரங்கள் தான்.
2. Red Giant Star - ரெட் ஜயன்ட்
ஒரு நட்சத்திரத்தின் மையத்தில் உள்ள ஐதரசன் வாயு தீர்ந்ததும் அணு சேர்கை தடைபடுகின்றது.புவியீர்ப்பு சமநிலையில் தளம்பல் ஏற்படும் போது மையத்தை சுற்றி உள்ள ஐதரசன் வாயு ஹீலியமாக மாற மீண்டு சமநிலை சரி செய்யபடுகின்றது.இந்த நிலையில் அந்த நட்சத்திரம் ஒரு பலூனை போல ஊதி சுமார் 100 மடங்கு பெருக்கின்றது.இந்த நிலையில் உள்ள நட்சத்திரங்களை ரெட் ஜயன்ட் என கூறுவார்.பொதுவாக அநேகமான Main-Sequence நட்சத்திரங்கள் காலம் செல்ல செல்ல ஐதரசன் வாயு குறைவடைய இந்த நிலையை அடைகின்றன. ரெட் ஜயன்ட் நிலையானது சில மில்லியன் வருடங்களே நீடிக்கும்.அணு சேர்க்கை நடைபெற மேலும் எரிபொருள் இல்லாத நிலையில் நட்சத்திரமானது மிக சிறிய வெண் குள்ள நட்சத்திரமாக (White Dwarf Star) மாறுகின்றது.நமது சூரியனுக்கும்ம் இதே நிலை தான்..
3. Red Dwarf Star - செங் குள்ள நட்சத்திரம்
இந்தவகை நட்சத்திரங்கள் விண்வெளியில் பரவலாக காணபடுகின்றன.இவை Main Sequence நட்சத்திர வகையை சார்ந்தவை தான் ஆனால் மிகவும் குறைந்த எடையை கொண்டவை.குறைந்த எடை காரணமாக இவற்றின் வெப்பநிலை நமது சூரியனை விட மிகவும் குறைந்தே காணபடுகின்றது.இந்தவகை நட்சத்திரங்களில் அணு சேர்கை மெதுவாகவே நடை பெறுவதால் இவை சுமார் 10 ட்ரில்லியன் ஆண்டுகள் வரை அழியாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் கணிப்பிட்டுள்ளனர்.இவற்றின் எடை சூரியனின் எடையில் 0.075% முதல் 50% வரை காணபடுகின்றது.
4. Neutron Star - நியுட்ரோன் நட்சத்திரம்
சூரியனை விட 1.35-2.1மடங்கு பெரிய நட்சத்திரங்கள் அழியும் போது அவை வெண் குள்ளமாக மாறுவதில்லை,மாறாக முற்று முழுதாக நியுற்றோன்களால் ஆனா ஒரு சிறிய நட்சத்திரமாக மாறுகின்றன.காரணம் இவை அழியும் போது சுபெர்நோவா எனும் பாரிய வெடிப்புடன் அழிகின்றன.நியுட்ரோன் நட்சத்திரத்தில் புவியீர்ப்பு விசை மிக அதிகமாக காணப்படுவதால் புரோட்டன்களும் இலத்திரன்களும் ஒன்று சேர்ந்து நியுற்றோன்களாக மாறுகின்றன.இந்தவகை நட்சத்திரங்கள் விண்வெளியில் மிக அரிதாகவே காணபடுகின்றன.இந்தவகை நட்சத்திரங்கள் மிகவும் அடர்த்தி உடையவை.நியுட்ரோன் நட்சத்திரத்தில் இருந்து ஒரு மேசைகரண்டி அளவு பதார்த்தத்தை வெட்டிஎடுத்தால் பூமியில் அதன் நிறை எவரெஸ்ட் சிகரத்தின் நிறைக்கு சமனாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
5. Super-giant or Hyper-giant Stars - ராட்சத அல்லது அதி ராட்சத நட்சத்திரங்கள்.
விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களில் மிகவும் பெரியவை இந்த வகை நட்சத்திரங்கள்.சூரியனை காட்டிலும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட அளவையுடைய நட்சத்திரங்களை Supergiants என ஆங்கிலத்தில் அழைகின்றனர்.இந்தவை நட்சத்திரங்கள் மிக வேகமாக அதன் ஐதரசன் எரிபொருளை முடிப்பதால் இவற்றின் ஆயுள் சில மில்லியன் ஆண்டுகள் தான்."Main Sequence" நட்சத்திரங்களை போல் இவை நிலையானவை அல்ல.மிகவும் உறுதியற்ற நிலையிலேயே இவை காணபடுகின்றன.சூரியனை விட 100 மடங்கு பெரிய நட்சத்திரங்கள் ஆங்கிலத்தில் "Hypergiants" என அழைக்கபடுகின்றது.இந்தவகை நட்சத்திரங்கள் மிக மிக அரிதாகவே விண்வெளியில் காணபடுகின்றன.இது வரையில் கண்டுபிடிகப்பட்ட நட்சத்திரங்களில் மிக பெரியது "VY Canis Majoris" ஆகும்.இது சூரியனை காட்டிலும் 2100 மடங்கு பெரியது.இதன் விட்டம் 3.063பில்லியன்km ஆகும்.நமது சூரியனை எடுத்து விட்டு அந்த இடத்தில இதை வைத்தால்சனிகிரகம் வரை இதன் விட்டம் இருக்கும். ஒளிக்கதி ஆனது சூரியனை ஒரு முறை சுற்றி வர 14வினாடிகளே ஆகின்றது,ஆனால் இந்த நட்சத்திரத்தை சுற்றிவர ஒளிகதிருக்கு 2.7 மணித்தியாலங்கள் தேவை.இந்தவகை நட்சத்திரங்கள் அழியும் போது கருந்துளைகளாக மாறுகின்றன.
நட்சத்திரங்களின் அளவுகள் இதோ ஒரே படத்தில்.....
தொடரும்.....