1. விபச்சாரம்
உலகின் இறுதி ஆண் உள்ளவரை
வெற்றிகரமான தொழில்....
2.கற்பனை
நிறைவேறாத ஆசைகள் நிஜமாகும் களம்...
3.சமயம்
உலகில் மிக அதிகமாக நம்பப்படும் பொய்...
4.கண்ணீர்
பலனை எதிர்பாராமல் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ளும் உற்ற நண்பன்...
5.மின்சாரம்
நவீன உலகத்தின் உண்மையான கடவுள்....
6.வைரஸ்
அணுகுண்டும் தோற்றுபோகும் சத்தமிலா ஆயுதம்...
7.நம்பிக்கை
உலகை வழிநடத்தும் அதி சக்தி வாய்ந்த மாயை....
8.தூக்கம்
வாழ்கையில் அனைவருக்கும் கிடைக்கும் நிஜமான விடுதலை....
9.வெற்றி
இன்னொருவனின் தோல்வியினை கொண்டாடும் தருணம்...
10.பொய்
சிலவேளைகளில் நிஜமாகவே மறுக்கப்பட்ட உண்மைகள்..