


தாராவியின் பொருளாதாரம் என்று பார்த்தல் மண்பானை கைத்தொழில் மற்றும் புடவை கைத்தொழில் என்பன முக்கிய இடம்பெறுகின்றன..மேலும் கழிவுபோருட்களை மீள்சுலாட்சி செய்யும் தொழிலும் வேகமாக வளர்ந்து வருகின்றது..இங்கு சுமார் 15,000 இக்கு மேற்பட்ட சிறிய தொழிற்சாலைகள் உள்ளன..பெரும்பாலான தொழில்சாலைகள் ஒரு சிறிய அறையின் அளவை ஒத்தது..இன்னுமொரு வியத்தகு விடயம் என்னவென்றால் தாராவியின் வருடாந்த பொருளாதாரம் சுமார் 500 மில்லியன் டாலர்களாகும்....ஆனால் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை தரமோ மிகுந்த பரிதாபதுகுரியது...


மழைகாலங்களில் தாரவி பெரும்பாலும் நீரில் மூழ்கியே காணப்படும்...இங்கு மழைநீர் வழிந்தோட வடிகால் வசதி கிடையாது....இன்னொமொரு முக்கிய பிரச்சனையாக கழிப்பறைகள் உள்ளன..இங்கு போதுமான கழிப்பறை வசதிகள் கிடையாது..2006ம் ஆண்டு கருத்து கணிப்பின் படி 1440 பேருக்கு ஒரு கழிப்பறையே உள்ளது...பெரும்பாலானோர் அருகில் உள்ள நதியிலே இயற்ட்கை கடன்களை கழிக்கின்றனர்..இதனால் இங்கு அடிக்கடி தொற்று நோய்கள் ஏற்படுகின்றன......மும்பையை வெளிநாட்டு நகரங்களுக்கு ஒப்பிட்டு பீலா விடும் அரசியல்வாதிகள் முதலில் தாரவி மக்களின் குறையை தீர்க்கட்டும்....அரசியல்வாதிகளுக்கு பண மாலை அணிவித்து அழகு பார்க்கும் அறிவிலிகள் இந்த கைவிடப்பட்ட மக்களை பற்றி சிந்தித்தால் எவ்வளவோ நல்லது...இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்,வறுமையை ஒழியுங்கள் பிறகு நீங்கள் தான் உலகின் வல்லரசு.........
நல்ல பதிவு.
ReplyDelete