
சில தினங்களுக்கு முன்பு கனடாவின் வன்குவர் நகரை வந்தடைந்த சன் சி கப்பலில் பயணித்த 500 ஈழ அகதிகளில் ஒருவர் இறந்துள்ளதை கனடிய பொலிசார் உறுதிபடுத்தியுள்ளனர்..இறந்த நபர் முப்பத்தேழு வயதுடைய ஒரு ஆண் எனவும்,கப்பல் கரையை அடையமுன் மூன்று வாரங்களுக்கு முதலே இவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது..இறந்தவர் திருமணமானவர் எனவும் அவருக்கு ஒரு குழந்தை உள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது..இறந்தவர் கடுமையான நோயவாய்பட்டிருந்ததாகவும் கப்பலில் சிகிச்சை இன்றி அவர் இறந்ததாக தெரிவித்த பொலிசார் இம்மரணத்தில் கொலைக்கான அறிகுறிகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்..இறந்தவரின் உடல் சர்வதேச கடல் பரப்பில் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. மேலும் இருபத்தியேழு பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் கர்ப்பிணி தாய்மார்கள் எனவும் அறியகிடைத்துள்ளது.கப்பலில் வந்தவர்களில் 350இற்கு மேற்பட்ட ஆண்களும்,50பெண்களும்,50சிறுவர்களும் அடங்குகின்றனர்..கப்பலில் வந்த அகதிகளில் விடுதலை புலி சந்தேக நபர்கள் உள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்..எல்லா அகதிகளினதும் அகதிகோரிக்கைகள் இனிமேல் தான் பரீசீலனைக்கு உட்படுத்தபடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்..
Source:http://ca.news.yahoo.com/s/capress/100815/national/migrant_ship
No comments:
Post a Comment