டீவீடி பிளேயர்ஸ்

தொண்ணூறுகளின் மத்திய காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு வீடியோ உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஒரு தொழில்நுட்பம் தான் டீவீடி. உலக வீடியோ சந்தையில் 97 வீத கட்டுபாட்டை தன்னகத்தே கொண்டிருந்த டிவிடியின் ஆதிக்கம் இன்று சிறிது சிறிதாக குறைந்து கொண்டு வருகிறது...இதற்கு முக்கிய காரணமாக அமைவது மல்டிமீடியா துறையின் அதீத வளர்ச்சியாகும்..2006ம் ஆண்டு சொனியால் அறிமுகபடுத்தபட்ட ப்ளுரேய் எனும் தொழில்நுட்பம் இன்று அதிவேகமாக வளர்ந்து வருகிறது..டிவிடியிலும் பார்க்க அதி உயர்வான துல்லியத்துடன் செயட்படகூடிய ப்ளுரேய் தகடுகள் மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன..மேலும் இளையோர் மத்தியில் அதிகரித்துள்ள இணையத்தில் திரைப்படங்களை பார்க்கும் அதாவது “Online Movie Streaming” பழக்கமும் டிவிடியின் சரிவுக்கு ஓர் காரணமாகும்.
தொலை நகல் இயந்திரங்கள்

அனைத்து அலுவலகங்களிலும் தவிர்கமுடியாத ஒரு பொருளாக விளங்கியது இந்த தொலை நகல் இயந்திரம்.தொலை நகல் அனுப்புவதற்காக நானும் ஏத்தனையோ முறை தபால் நிலையத்தில் வரிசையில் நின்றிருக்கிறேன்..சாதாரணமாக எல்லோரிடமும் காணப்படாத ஒரு பொருள் தான் இந்த பாக்ஸ் இயந்திரம்..ஆனால் இன்றோ நிலைமை வேறு....முன்பெல்லாம் பிரிண்டர்,இஸ்கான் செய்யும் இயந்திரம் மற்றும் பாக்ஸ் இயந்திரம் எல்லாம் தனித்தனியாகவே வடிவமைக்கப்பட்டன.ஆனால் இன்றோ மூன்றையும் ஒன்றாகசேர்த்து மல்டி பாங்க்ஷன் பிரிண்டர் என்ற பெயரில் விற்கிறார்கள்..விலையும் அவ்வளவு பெரிதல்ல..இதனால் அநேகமானோரின் வீடுகளில் இருந்தே பாக்ஸ் அனுப்பகூடிய வசதி கிடைகிறது...அலுவலகங்களும் இதையே தற்போது பின்பற்றுகின்றன..மேலும் ஈ-மெயிலின் பாவனை இன்று ராக்கட் வேகத்தில் உயர்ந்து வருகின்றது.இன்று பெரும்பாலானோர் ஈ-மெயிலிலேயே தேவையான டாகுமேன்ட்சை இஸ்கான் செய்து அட்டாச் பண்ணி அனுப்புகிறார்கள்..பாக்ஸ்ஐ தேடிசெல்வோரின் எண்ணிக்கை இதனால் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது...
நிலையான தொலைபேசி இணைபுக்க்கள்..

பிலிம் ப்ரோஜெக்டோர்ஸ்...

சினிமா எப்பொழுது கண்டுபிக்கப்படதோ அப்பொழுதே இந்த பிலிம் ப்ரோஜெக்டர்களும் வந்துவிட்டன..உலகின் எல்லா மூலை முடுக்கிலும் இவற்றை பார்க்கலாம்..மீட்டர்கணக்கில் படச்சுருளை சுற்றி ஓடவிட்டு படம்கான்பிக்கும் அழகே தனிதான்..எல்லா அனலாக் டெக்னாலஜிக்கும் இருக்கும் பொதுவான வில்லன் தான் டிஜிட்டல் டெக்னாலஜி..இதற்கு பிலிம் ப்ரோஜெக்டரும் விதிவிலக்கில்லை..இன்று உலகில் டிஜிட்டல் ப்ரோஜெக்டர்களின் பாவனை மிகவும் அதிகரித்து வருகிறது..ஆரம்பத்தில் பிசினெஸ் மீட்டிங்குகளுக்கும்,லெக்சர்களுக்கும் பயன்பட்டு வந்த டிஜிட்டல் ப்ரோஜெக்டோர்ஸ் இன்று திரையரங்குகளையும் ஆக்கிரமித்துள்ளன..சுமார் 9 வருடங்களுக்கு முன்பு கொழும்பு லிபர்ட்டி திரையரங்கில் வெளியானது ஜுராசிக் பார்க் 3 திரைப்படம்..நானும் நண்பர்களுடன் பார்க்க சென்றேன்....படமும் தொடங்கியது..சும்மா ஏதேட்சையாக திரும்பிபார்த்தேன்...ஒபெரடோர் ரூம் இருட்டாக இருந்தது..எனக்கு ஒரே வியப்பாக இருந்தது..ஒபெறேட்டரே இல்லாமல் படமா?..சுற்று முற்றும் பார்த்தேன்...அப்போதான் தலைக்கு மேலே தெரிந்தது டிஜிட்டல் ப்ரொஜெக்டர்..ஆரம்பத்தில் மிக அரிதாக பாவிக்கப்பட்ட டிஜிட்டல் ப்ரொஜெக்டர் இன்று மிகபரவலாக பாவிக்கபடுகிறது...இணையத்தில் துலாவி பார்த்ததில்
2005 ம் ஆண்டு மெரிக்காவில் 100இக்கும் குறைவான திரையரங்குகளிலேயே டிஜிட்டல் ப்ரோஜெக்டர்சின் பாவனை இருந்துள்ளது..ஆனால் இன்றோ 16000இற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பாவனையில் உள்ளது டிஜிட்டல் ப்ரோஜெக்டர்ஸ்..சிலவருடங்களில் அருங்காட்சியகத்தில் வைக்கும் பொருளாக பிலிம் ப்ரோஜெக்டர்ஸ் மாறினாலும் ஆச்சரியமில்லை...
No comments:
Post a Comment