இந்த பேரண்டத்தின் உருவாக்கம் பற்றி பொதுவாக எல்லோராலும் விஞ்ஜான ரீதியாக ஏற்றுகொள்ள பட்ட கொள்கை "Big Bang Theory" என அழைக்கபடுகிறது.அதாவது எதுவுமே இல்லாத ஒரு நிலையிலிருந்து திடீரென வெடித்து பரவியதே தற்போதைய விண்வெளியின் பிறப்பு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.அந்த ஆரம்ப புள்ளியை ஆங்கிலத்தில் "singularity" என கூறுவர். இந்த ஆரம்ப புள்ளிக்குள் தான் விண்வெளியின் மிகவும் அடிப்படையான நான்கு விசைகள் தோற்றம் பெற்றன.புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை, வலிமையான அணு விசை மற்றும் ஐதான அணு விசை என்பனவே அந்த நான்கு விசைகளாகும். singularity எனப்படும் அந்த ஆரம்பபுள்ளியினுள் சமநிலையில் இந்த நான்கு விசைகளும் காணப்பட்டன.புவியீர்ப்பு விசையினால் இந்த சமநிலை உடைக்கப்பட்ட பொது ஒளியை விட வேகமாக அண்டம் விரிவடைய தொடங்கியது.இந்த விரிவாக்கமானது எல்லாத்திசையிலும் சமசீராகவே நடைபெற்றது. வெடிப்பு சுமார் 13.7பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதாக விஞ்ஜானிகள் கூறுகின்றனர்.
Big bang வெடிப்பு நிகழ்ந்து சுமார் 380,000ஆண்டுகளின் பிறகே முதலாவது நட்சத்திரம் தோன்றியதாக கூறபடுகிறது.விண்வெளியில் மிக அதிகமாக காணப்படும் மூலக்கூறு ஐதரசன் வாயு ஆகும்.இத்துடன் தூசு துணிக்கைகள் மற்றும் சடப்பொருள் என்பன விண்வெளியில் நிறைந்து காணபடுகின்றன.புவியீர்ப்பு விசை காரணமாக ஐதரசன் வாயுவின் மூலக்கூறுகள் மெதுவாக ஒன்றை ஒன்று நெருக்க தொடங்குகின்றன.காலபோக்கில் இந்த நெருக்கம் அதிகமாக வாயுவின் அடர்த்தி,வெப்பம் மற்றும் அமுக்கம் என்பன அதிகரிக்கின்றன.ஒரு கட்டத்தில் அதீத அமுக்கம் மற்றும் அடர்த்தி காரணமாக ஐதரசன் வாயுவின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து விடுகின்றன.இந்த பினைவை ஆங்கிலத்தில் Nuclear fusion என அழைப்பர்.nuclear fusion நடைபெறும் பொது பெருமளவில் சக்தி வெளிவிடபடுகின்றது.இந்த சக்தி ஒளியாகவும்,வெப்பமாகவும் வெளியேறுகின்றது.
புவியீர்ப்பு விசையினால் உருவாகும் nuclear fusion காரணமாகவே நட்சத்திரங்கள் உருவாவதாக விஞ்ஜானம் கூறுகின்றது.மூலகூறுகளுக்கு இடையிலான புவியீர்ப்பு விசையினால் நட்சத்திரங்கள் உருவானதை போலவே தான் கோள்களும் உருவாகின.ஒரு நட்சத்திரத்தை சுற்றி உள்ள தூசு துணிக்கைகள் அந்த நட்சத்திரத்தின் புவியீர்ப்பு விசையினால் நெருகமடைகின்றன.மிகவும் நுண்ணிய துகள்கள் சேர்ந்து மணல் அளவில் துணிக்கைகள் உருவாகின்றன.மணல் அளவில் உள்ள துணிக்கைகள் சேர்ந்து கல்லாக மாறுகின்றன.காலபோக்கில் இவ்வாறு துணிக்கைகள் சேர்ந்து கோள்கள் தோற்றம் பெறுகின்றன.இவ்வாறு தோற்றம் பெற்ற கோள்கள் புவியீர்ப்பு விசை காரணமாக நட்சத்திரங்களை சுற்ற ஆரம்பிக்கின்றன.இதனால் சூரிய குடும்பங்கள் தோற்றம் பெற்றன.இவ்வாறு எண்ணில் அடங்கா நட்சத்திரங்கள்,கோள்கள் மற்றும் சூரிய குடும்பங்கள் அடங்கிய ஒரு தொகுதியை கலேக்சி என அழைக்கின்றனர்.விஞ்ஞானிகளின் கணிப்பின்படி அண்டவெளியில் சுமார் 100 பில்லியன் கலேக்சிகள் உள்ளன.ஒவொரு கலக்சியிலும் சுமார் நூறு முதல் இருநூறு பில்லியன் வரையிலான நட்சத்திரங்கள் உள்ளன.
தொடரும்...
No comments:
Post a Comment