Search This Blog

Thursday, September 30, 2010

பீர்க்கங்காய் முப்பருப்பு கூட்டு

தேவையானவை...

பீர்க்கங்காய் - 200 g


வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

காய்ந்த மிளகாய் - 2

இஞ்சி - 1 அங்குல துண்டு

பூண்டு - 3 பல்

தேங்காய் துருவல் - 2 tbsp

கடலை பருப்பு - 2 tbsp

துவரம் பருப்பு - 2 tbsp

பாசி பருப்பு - 2 tbsp

எண்ணெய் - 2 tsp

கடுகு - 1/4 tsp

சீரகம் - 1/4 tsp

பெருங்காயம் - 1 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

கருவேப்பிலை - தாளிக்க

கொத்தமல்லி - அலங்கரிக்க
 
செய்முறை...
 
•பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.


•வெங்காயம் மற்றும் தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

•எல்லா பருப்பையும் கழுவி மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவேண்டும். பருப்பு ரொம்பவும் குழைய தேவையில்லை.

•வானலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் சீரகம் சேர்த்து வெடிக்க விட்டு பெருங்காயம் காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பில்லை சேர்க்கவும்.

•இப்போ வெங்காயம் சேர்த்து வதங்கியதும், இஞ்சி பூண்டு நசுக்கி சேர்க்கவும்.

•பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளி சேர்க்கவும்.

•தக்காளி குழைந்து வந்ததும் பீர்க்கங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி பருப்பை சேர்க்கவும்.

•உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி மூடி வைத்து 8 நிமிடம் வேக விட்டு இறக்கி தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

தேவைகேற்ப மிளகாய் சேர்த்து கொள்ளலாம். பீர்க்கங்காய் தோல் இளசாக இருந்தால் புதினா சேர்த்து துவையல் செய்யலாம்.

Source:www.arusuvai.com

எந்திரன் வசூல் கனடாவில் எப்படி இருக்கும்?

வருகின்ற ஒக்டோபர் முதலாம் திகதி உலகம் முழுவதும் 3000இக்கு மேற்பட்ட திரையரங்குகளில் எந்திரன் திரையிடபடுகிறது.முதல்வார வசூல் கனடாவில் எப்படி இருக்கும் என்று ஒரு சிறிய அலசல்.

டொரோண்டோ நகரில் எந்திரன் நான்கு மிக முக்கிய திரையரங்குகளில் வெளியிடபடுகின்றது..முதல் எழு நாட்களில் மட்டும் 111காட்சிகள் திரையிடப்படவுள்ளன..ஒரு தமிழ் படம் கனடாவில் இந்த அளவு திரையிடபடுவது இதுவே முதல் முறை..கிட்ட தட்ட ஒரு ஹாலிவூட் படத்துக்கு கிடைக்கும் ஒபெனிங் எந்திரனுக்கு கிடைத்திருக்கிறது..ஒரு தியட்டரில் முதல்  நான்கு நாட்களும் தினசரி எட்டு காட்சிகள் திரையிடபடுகின்றன..கடைசியாக அவதார் படத்துக்குதான் தினசரி எட்டு காட்சிகள் திரையிடப்பட்டன..

முதல மூன்று நாட்கள வசூல் எப்படி இருக்கபோகின்றது என்று பார்ப்போம்..இந்த தியட்டர்கள் சராசரியாக 400 இருக்கைகளை கொண்டன.ரஜனி மற்றும் சங்கர் இணையும் படம் என்றபடியால் முதல் மூன்று தினங்களும் அணைத்து காட்சிகளும் நிச்சயம் ஹவுஸ் புல்லாகவே இருக்கும்..முதல் மூன்று தினங்களிலும் சராசரியாக 59 காட்சிகள் திரையிடபடுகின்றன..வயதுவந்தோருக்கான டிக்கட் ஒன்றின் விலை $10.75 ஆகும்.சிறுவர்களுக்கான டிக்கட் விலை $7.99 ஆகும்..படம் பார்க்கவரும் ரசிகர்களில் 90 வீதம் வளந்தவர்கள் எனவும்,10 வீதம் சிறுவர்கள் எனவும் வைத்துகொள்வோம்..
வயது வந்தவர்களுக்கான டிக்கட் விற்பனை மூலம் கிடைக்கும் வசூல் $228330(59x400x0.9x10.75)  ஆகும்..சிறுவர்களுக்கான டிக்கட் விற்பனை மூலம் கிடைக்கும் வசூல்
$18857(59x400x0.1x7.99) ஆகும்.எனவே மொத்த வசூல் $247187 ஆகும்..இது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில்  ரூபாய்  98,87,480(247187x40)..முதல் மூன்றுநாள் வசூலே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் ஆகும்..எந்தவொரு தமிழ் படத்துக்கும் கனடாவில் இவளவு வசூல் கிடைத்ததில்லை..

இனி முதல் எழுநாள் வசூலை பற்றி சிறிது அலசுவோம்..சூப்பர் ஸ்டார் படம்,ரகுமான் இசை,சங்கர் கொடுத்த பில்டப் என அதீத எதிர்பார்ப்பை உலக தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது எந்திரன்..இதற்கு கனடா வாழ் தமிழ் மக்களும் விதிவிலக்கில்லை..ஏற்கனவே சிவாஜி இரண்டுவாரம் ஹவுஸ் புல்லாக ஓடியது..முதல் வாரத்தில் திரையிடப்படவுள்ள காட்சிகளில் 75 வீதமானவை ஹவுஸ் புல் காட்சிகள் என வைத்து கொள்வோம்..மீதிகாட்சிகளுக்கு 75 வீதமான டிக்கட்டுகள் வில்படுவதாக வைத்துகொள்வோம்..மேலே கூறியது போல படம் பார்க்க வருவோரில் வீதமானோர் பெரியவர்கள் எனவும் வீதமானோர் சிறுவர்கள் என்றும்
வைத்து கணகிட்டால் ஹவுஸ் புல் காட்சிகள் மூலம் கிடைக்கும் வசூல் $347737
{(83x400x0.9x10.75)+(83x400x0.1x17.99)} ஆகும்..மீதிகாட்சிகள் மூலம் கிடைக்கும் வசூல் $87982 {(28x400x0.9x0.75x10.75)+(28x400x0.1x0.75x7.99)} ஆகும்..எனவே முதல் வாரத்தின் மொத்த வசூல் $435719 ஆகும்..இந்திய மதிப்பில் இது சுமார் ரூபாய் 1,74,28,760 ஆகும்..கிட்ட தட்ட ஒன்றே முக்கால் கோடி ரூபாய்களை முதல் எழு நாட்களில் கனடாவில் எந்த ஒரு இந்திய படமும் வசூல் செய்ததில்லை..

இது டொராண்டோவில் உள்ள முக்கி நான்கு திரையரங்குகளை வைத்து கணிக்கப்பட்ட வசூல் ஆகும்..இதில் ஏனைய நகரங்களோ,சிறிய திரயரன்குகளோ உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நான்கு தியேட்டர்களில் எழு நாட்களில் ஒன்றே முக்கால் கோடி வசூல் என்றால் உலகம் முழுவதும் 3000தியேட்டர்களில் எழு நாட்களில் வசூல் எவளவு இருக்கும்? ..படம் வெற்றியோ,தோல்வியோ,எந்திரன் வசூல் மழையில் நனையபோவது மட்டும் உறுதி..

Tuesday, September 28, 2010

கேரளாவில் 125 தியேட்டரில் எந்திரன் டிக்கெட் காலி.!!

கேரளாவில் எந்திரன் படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. சில மணி நேரத்திலேயே 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்தது.


கேரளாவி்ல் எந்திரன் படம் 125 தியேட்டர்களில் வெளியாகிறது. இது கேரள சினி்மா வரலாற்றில் புதிய சாதனை ஆகும். மலையாளத் திரைப்பட வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் 100 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டதில்லை. முதல் முதலாக எந்திரன் தான் இந்த சாதனையை படைத்துள்ளது.

திருவனந்தபுரம், கொச்சி, பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய இடங்களில் உள்ள நியூ, தான்யா, அஜந்தா ஆகிய 5 தியேட்டர்களில் எந்திரன் பட முன்பதிவு நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆனால் காலை 9 மணிக்கு முன்பாகவே ரஜினி ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்தனர்.
முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் 5 தியேட்டர்களிலும் 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்தன. இதே போல் மற்ற பகுதிகளிலும் 2 நாட்கள் காட்சிக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.

இது குறித்து அஞ்சலி, அதுல்யா தியேட்டர்களின் மேலாளர் அசோகன் கூறுகையி்ல், இதற்கு முன் எந்த படத்திற்கும் முன்பதிவு செய்யப்பட்டதில்லை. எந்திரன் படம் இந்த புதிய சாதனையை படைத்துள்ளது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டன என்றார்.

தமிழ் நாட்டு நிலவரம்..
திரையுலகம் இதுவரை காணாத பெரும் வசூல் சாதனையைச் செய்து வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம்.

இந்த சாதனைகளை முறியடிக்க இனியொரு படத்தை ரஜினியைத் தவிர வேறு யாராலும் தரமுடியுமா என்ற கேள்விதான் இன்று கோடம்பாக்கத்தில் பிரதானமாக எழுந்து நிற்கிறது. டிக்கெட் விற்பனையில்தான் இந்தப் புதிய சாதனை.

சென்னை அபிராமி மெகா மாலில் 20 நிமிடங்களில் 8 நாட்களுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நான்கு மணி நேரத்தில் ரூ 50 லட்சத்தை எந்திரன் வசூல் செய்திருப்பதாகவும், இது இந்தியத் திரையுலகில் முன்னெப்போதும் நிகழாத பெரும் சாதனை என்றும் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மற்ற திரையரங்குகளில் முன்பதிவு துவங்கிய ஒரு மணி நேரத்தில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன. வெள்ளிக்கிழமை நள்ளிரவிலிருந்தே ரசிகர்கள் திரண்டு வந்து இரவு முழுக்க விழித்திருந்து காலை ஒன்பது மணிக்கு முன் பதிவு தொடங்கியதும் டிக்கெட் வாங்கிச் சென்ற காட்சியை பல தியேட்டர்களில் காண முடிந்தது.

"நிறைய தியேட்டர்களில் திரையிடுவதால் ரசிகர்கள் நெருக்கடி இருக்காது என்று நினைத்தோம். மாறாக அதிகாலையிலேயே கூட்டம் திரண்டுவிட்டது. கேட்டுக்கு வெளியில் ஏராளமான ரசிகர்கள் நிற்பதால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதாக போலீசார் கூறியதும், கதவை திறந்து வளாகத்தின் உள்ளே அனுமதித்தோம். கவுன்டர்கள் திறக்கும்வரை ரசிகர்கள் அமைதியாக காத்திருந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது" என ஒரு தியேட்டர் காம்ப்ளக்ஸ் நிர்வாகி குறிப்பிட்டார்.

சத்யம் காம்ப்ளக்சில் மாணவ மாணவிகள், ஐ.டி துறை இளைஞர்கள் அதிகமாகக் காணப்பட்டனர். அருகில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள எஸ்கேப் சினிமாவின் அனைத்து கவுண்டர்களிலும் எந்திரன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதால் வெறும் 10 நிமிடத்தில் ஒரு வாரத்துக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுவிட்டன. இதனால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

உதயம், காசி தியேட்டரில் இளம் ரசிகர்கள் கும்பல் கும்பலாக நின்று கோஷமிட்டபடி காத்திருந்தனர். இங்கு அதிகாலை 3 மணியிலிருந்தே கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் வரத் துவங்கியது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பலர் ரசிகர் மன்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.

கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரத்தின் மகன் கணேஷ் கூறுகையில், `முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரண்டு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன. ஆன்லைனில் அதிக ரசிகர்கள் வந்ததால், சர்வர் ஹேங்காகி விட்டது. 40 வருடத்தில் இப்படியொரு வரவேற்பை எந்த படத்துக்கும் பார்த்ததில்லை` என்றார். கமலா மட்டுமல்ல, அபிராமி உள்ளிட்ட பல திரையரங்குகளின் இணையதளங்கள் நேற்று முழுக்க முடங்கிப் போயின.

சத்யம் தியேட்டர் காம்ப்ளக்ஸ் துணை தலைவர் முனி கண்ணையா, `சென்னை மற்றும் புறநகர்களில் 70-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் `எந்திரன்` திரையிடப்படும் நிலையில் இவ்வளவு பெரிய கூட்டத்தை முன்பதிவில் எதிர்பார்க்கவில்லை. ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது,` என்றார்.

கோவை கங்கா, யமுனா தியேட்டர்களில் காலை 6.30க்கு ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததால், 8 மணிக்கே வினியோகம் துவங்கியது. ஒரு மணி நேரத்தில் 1 வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டன.

மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உட்பட முக்கிய நகரங்கள் அனைத்திலும் இதே போன்ற உற்சாகத்துடன் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் நகரங்களில் பொதுவாக எந்தப் படத்துக்கும் முன் பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்துக்கான டிக்கெட்டுகள் அடுத்த 8 நாட்களுக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது புதிய வரலாறு என்கிறார்கள். திருப்பத்தூர் மீனாட்சி திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் கூடி, டிக்கெட்டுக்குக் காத்திருந்தனர்.

நன்றி:www.viduppu.com

Monday, September 27, 2010

பிரபலங்களின் கையெழுத்துக்கள்-2

இந்திய பிரபலங்களின் கையெழுத்துக்கள்...



















Sunday, September 26, 2010

ஹாலிவூட் பார்வை-தி மிஸ்ட்(The Mist)


1980ம் ஆண்டு பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் பிரபல நாவலை அடிப்படையாக வைத்து 2007ம் ஆண்டு நடிகர் தாமஸ் ஜேனின் நடிப்பில் வெளிவந்த திகில் படம் தான் தி மிஸ்ட்..


மனிதனின் மிகவும் அடிப்படை உணர்வான பயத்தை பற்றி அழகா கூறும் படம்..அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய கிரமாத்தில் அடிக்கும் பயங்கர புயலுடன் ஆரம்பிக்கிறது படம்..திரைப்படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்யும் தொழில் செய்பவர் டேவிட்(தாமஸ் ஜேன்) தனது மனைவி,மகன் சகிதம் ஓர் ஆற்றங்கரை அருகில் உள்ள வீட்டில் வசிக்கிறார்..புயல் அடித்த இரவு டேவிட் குடும்பம் சகிதமாக நிலத்தடி அறையில் இரவை கழிக்கிறார்..மறுநாள் விடிகையில் வெளியே வந்து பார்க்கும்போது புயலினால் வீடு பலத்த சேதம் அடைந்து காணபடுகிறது...


 அப்போது ஆற்றில் வெகுதொலைவில் ஒரு வெள்ளை நிற அடர்ந்த புகை அந்த கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது..மனைவியை வீட்டில் விட்டுவிட்டு மகனை அழைத்து கொண்டு பக்கதுவீட்டுகாரர் சகிதம் சூப்பர் மார்க்கெட்டுக்கு சாமான் வாங்க செல்கிரரர் டேவிட்..செல்லும் வழியில் இராணுவ வாகனங்களும் போலீசும் வேகமாக சென்றுகொண்டிருந்தன..
சூப்பர் மார்கெட் கூட்டத்தினால் நிரம்பி வழிந்தது..அங்கு இவர்கள் சாமான் வாங்கி கொண்டிருக்கையில் திடீரென்று பாரிய நிலநடுக்கம் ஏற்படுகிறது..சில வினாடிகளின் பின்னர் நிலநடுக்கம் நின்றுவிடுகிறது..சிறிது நேரத்தின் பின்னர் ஒரு வயதான மனிதர் மூக்கில் இரத்தம் வழிய அலறியபடியே ஓடி வந்தார்..


உள்ளே வந்து வெண்புகார் தன்னை துரத்துவதாகவும்,அதனுள்ளே இருந்து எதோ தன்னை இழுத்ததாகவும் கூறுகின்றார்.. அவர் கூரிகொன்டிருக்கும் போது மிகவும் அடர்த்தியான வெண்புகார் அந்த பகுதி எங்கும் பரவியது..அப்போது ஒருவர் பதறியடித்துகொண்டு தனது காரை நோக்கி ஓடினார்..சிறிது நேரத்தில் அவரது அலறல் சத்தம் கேட்டது..உடனே எல்லோரும் பதறியடித்துகொண்டு சூப்பர் மார்கெட்டின் கதவுகளை சாத்துகின்றனர்..ஓவொருவரும் வெண்புகார் பற்றி வேறுபட்ட கருத்துக்களை கூறுகின்றனர்..சிலர் அது ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் கெமிகல் பாக்டரி வெடித்தால் வந்ததென்றனர்..



சிலரோ இது இராணுவத்தின் இரகசிய சோதனையின் பின்விளைவென்றனர்.. எங்கும் மயான அமைதி நிலவியது...அப்போது டேவிட் சூபர்மார்கேட்டின் பின்பகுதிக்கு செல்கிறார்..அப்போது பின்கதவை எதோ பலமாக இடித்தது..உடனே டேவிட் இதை மற்றவர்களுக்கு கூறுகின்றார்..சிலர் இதை நம்ப மறுத்து டேவிட்டுடன் வாக்குவாத படுகின்றனர்..அதில் ஒரு இளைஞன் போய் பின்கதவை திறந்து வெளியே எட்டி பார்க்கின்றான்..அப்போது ஒரு பாரிய ஒக்டோபசை ஒத்த மிருகத்தின் கால் வந்து அந்த இளைஞன் ஐ இழுத்து செல்கிறது..உடனே இவர்கள் அவசரமாக கதவை சாத்திவிட்டு திரும்பி ஓடுகின்றனர்..அப்போதுதான் எல்லோருக்கும் அந்த வெண்புகாருக்குள் கொடிய மிருகங்கள் இருப்பது தெரியவந்தது..வேற்றுகிரக வாசிகளை ஒத்த அந்த மிருகங்கள் பூமிக்கு எப்படி வந்தன?இவர்கள் தப்பிக்க எடுக்கும் போராட்டங்கள் ஆகியவற்றுக்கான விடையுடன் முடிவடைகிறது படம்....சற்றும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் அதிரவைகிறது..


ஒரு மனிதன் அதீத பயத்திற்கு உட்படும் போது எவ்வாறு நடந்துகொள்வான் என மிக அழகாக இந்த படம் கூறுகிறது..மூன்று வகையான மனிதர்களை இந்த படத்தில் காணமுடியும்..ஒன்று அதீத பயத்தில் மூலைக்குள் இருந்து அழும் ரகம்,இரண்டாவது மனதுக்குள் பயம் இருந்தாலும் தன்னை பெரிய தைரியசாலி போல காட்டிகொள்ளும் ரகம்,மூன்றாவது நிலமைக்கேற்றவாறு சிந்தித்து முடிவெடுக்கும் ரகம்... வேற்றுகிரக மிருகங்கள் தரும் திகிலை விட பைபிளை படித்து அதன் மேலே பைத்தியமாக அலையும் அந்த பெண்மணி தரும் திகில் பயங்கரம்..பயத்தில் உறைந்துபோய் இருக்கும் மக்களிடம் தன்னை இறைவனின் பாத்திரமாக உருவகபடுத்தி இவர் செய்யும் அட்டூழியங்கள் திகில் ரகம்.. தனக்கு எதிராக பேசுபவர்களை இறைவனின் எதிரிகள் என சித்தரித்து ஏனையோரை அவர்களுக்கு எதிராக திசை திருபிவிடுகிறார் இவர்..மிருகங்கள் கொன்றதை விட தங்களுக்குள் அடித்துக்கொண்டு இறந்தவர்கள் அதிகம்..


பயம் என்ற உணர்வு எவ்வாறு ஒரு மனிதனை மாறுகின்றது என்பதை காட்சியமைப்புக்கள் தெளிவாக காட்டுகின்றன..ஒரு மனிதன் அதீத பயத்துக்கு உட்படும் போது அவனுடைய மனம் எவளவு பலகீனமானது என்பதையும்,யார் வேண்டுமானாலும் அவனை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பதையும் அந்த பைத்தியகார பெண்மணியின் கதாபாத்திரம் அருமையாக விளக்குகின்றது..சற்றும் ஏதிர்பாராத கிளைமாக்ஸ் நெஞ்சை கனக்க வைக்கிறது..

தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு படம்...திகில் நிச்சயம்..

புதிய வைரஸ் எச்சரிக்கை...

கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.

“Here You Have” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது. உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. அதில் “நீங்கள் கேட்ட பாலியல் பட பைல் இதோ இங்குள்ளது’ என்று ஒரு பிடிஎப் பைலுக்கு லிங்க் தருகிறது. இது பிடிஎப் பைலே அல்ல. .scr. என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு கோப்பு. விண்டோஸ் ஸ்கிரிப்ட் அடங்கிய வைரஸ் கோப்பு.

இது CSRSS.EXE என்னும் கோப்பினை உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் பதிக்கிறது. இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கோப்பின் இயக்கத்தை நிறுத்துகிறது. இது ஒரு பாட்நெட் வகை வைரஸ். ஆனால் பழைய நிம்டா, அன்னா கோர்னிகோவா (2001 ஆம் ஆண்டு) மற்றும் மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகிறது. ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வந்து இறங்குகிறது. அடுத்து உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள அனைத்து முகவரிக்கும் இதே போல ஒரு செய்தியை அனுப்புகிறது. இது கடந்த செப்டம்பர் 10 முதல் உலகெங்கும் பரவி வருகிறது. தேடுதல் தளங்களில் தேடப்பட்ட தகவல்களில் இந்த தகவல் தான் இரண்டாம் இடம் கொண்டிருந்தது. SANS Technology Institute என்ற நிறுவனத்தின் இன்டர்நெட் கண்காணிப்பு பிரிவு, இந்த இமெயில் டன் கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது. மெக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து முழுமையாக அறிய சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தன் இமெயில் சர்வர்களை எல்லாம் மூடிவிட்டது.

இந்த வைரஸை அனுப்பிய சர்வர் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து இந்த வைரஸ் கோப்பு எடுக்கப் பட்டிருக்கலாம். ஆனாலும், ஏற்கனவே பரவிய கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த வைரஸ் இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இதிலிருந்து எப்படி தப்பிப்பது?

நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை பதிந்து இயக்குங்கள். ஏற்கனவே பதிந்திருந்தால், உடனே அப்டேட் செய்திடவும். இமெயில் இணைப்புகள் எது வந்தாலும் திறப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டாம். அனுப்பியவருக்கு தனி இமெயில் அனுப்பி, அனுப்பியதை உறுதி செய்து கொண்டு பின் திறக்கவும். “Here you Have” அல்லது “Just For You” என்று இருந்தால் எந்த சலனமும் இல்லாமல், முற்றிலுமாக அழித்துவிடவும். இந்த வைரஸ், நார்டன்/சைமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் பரவ முடியவில்லை என்று ஒரு செய்தியும் வந்துள்ளது. இருப்பினும் இமெயில்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

Thursday, September 23, 2010

காமன்வெல்த் 2010- இந்தியாவின் தேசிய அவமானம்..

டெல்லியில் நடைபெற இருக்கும் காமன் வெல்த் போட்டிகளை பற்றி சர்ச்சைகளை கிளப்பியிருக்கும் அதிர்ச்சியூட்டும்  படங்கள்..படத்தை பார்த்தாலே புரியும் ஊழலின் ஆழம் எவளவென்று...
























சினிமா துணுக்குகள்....

 மிஷ்கின் வேணாம்...கண்டிப்பு காட்டிய கார்த்தி

அண்ணன் சிங்கம்னா தம்பி சிறுத்தையா கர்ஜிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் சிவா இயக்குகிற படம்தான் இந்த சிறுத்தை. ஊரே ஒண்ணு கூடி தமுக்கடிச்சாலும், கமுக்கமா இருந்தாதான் காரியம் நடக்கும்னு நினைச்சிருப்பாரு போல. முந்தைய படமான பையா பட ஜோடியான தமன்னாவையே இந்த படத்திலும் ஜோடியாக்கிக் கொண்டார் கார்த்தி. (இந்த சாக்பீஸ்ல இருந்து உழைப்பை நீக்கிட்டா வெறும் சுண்ணாம்புதான் மிஞ்சும்ங்கிற பேராண்மை பட டயலாக் ஏனோ இங்க ஞாபகம் வந்து தொலையுது வாத்யாரே...) இதில் யூனிபார்ஃம் போடாத போலீஸ் ஆபிசரா நடிக்கிறார் கார்த்தி.
 
 கிட்டதட்ட இதே கெட்டப்தானாம் வேட்டை படத்தின் ஹீரோ ஆர்யாவுக்கும். அதனால்தான் லிங்குசாமியுடன் சேர்ந்து படம் பண்ணலாம் என்று பேசி முடிவெடுத்த கார்த்தி, "சிறுத்தையிலும் போலீஸ். வேட்டையிலும் போலீஸ்னா சரியா வராது" என்று ஒதுங்கிக் கொண்டாராம். இதற்கிடையில் நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க சம்மதித்திருக்கிறார் கார்த்தி.
 
 நா.ம.அ படத்தை ரிலீஸ் செய்து கொடுத்த வகையில் சேட் பாக்கெட்டில் எலி கடி! அந்த ஓட்டையை அடைக்கதான் இந்த அட்ஜஸ்ட்மென்ட் என்கிறார்கள். யாரை இயக்குனராக போடலாம் என்று ஒரு லிஸ்ட் தயாரித்தாராம் ஜபக். அதில் ஒரு இயக்குனரின் பெயரை படித்தவுடன் பேனாவால் அந்த பெயரை அடித்தாராம் கார்த்தி. அவர் மிட் நைட்டிலும் கூலிங் கிளாஸ் போடும் 'குட் நைட் கண்ணன்' மிஷ்கின்தான் என்கிறது கோடம்பாக்கத்து குருவி!

எந்திரன் டிக்கெட் ரேட்...ஆறுதல் தரும் புதிய செய்தி!

இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருக்கிறது எந்திரன் ரிலீசுக்கு. அதற்குள் இந்த படத்தின் டிக்கெட் முதல் நாளே எவ்வளவு ரூபாய்க்கு விற்கும் என்று கணக்கு போட்டு கணக்கு போட்டு வாயை பிளக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். இத்தனைக்கும் கொஞ்சம் பெரிய மண்டபம் கிடைத்தால் அங்கேயும் ஒரு ஸ்கிரீன் கட்டி படம் போட்டுவிடுவார்களோ என்று அஞ்சுகிற அளவுக்கு திரும்புகிற இடத்திலெல்லாம் ரிலீஸ் பண்ணப் போகிறார்களாம் எந்திரனை.
 
அப்படியிருந்தும் டிக்கெட் கிடைக்குமா என்ற கவலை ரசிகர்களை வாட்ட ஆரம்பித்திருக்கிறது.சென்னை மாவட்ட விநியோக உரிமையை பெற்றிருக்கும் திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் மேலும் சில கோடிகள் அதிகம் வைத்து இப்படத்தை சத்யம் நிறுவனத்திற்கு விற்றுவிட்டாராம். சென்னையில் மட்டும் முதல் ஒரு வாரத்திற்கு டிக்கெட் ரேட் தாறுமாறாக இருக்கும் என்று கவலைப்படும் ரசிகர்களுக்கு முதல்வர் போட்ட வாய் மொழி உத்தரவு ஒன்று ஆறுதல் அளிக்கக்கூடும்.

கவர்மென்ட்டுக்கு கெட்ட பேரு வர்ற மாதிரி எந்த தியேட்டர்காரர்களும் நடந்துக்க வேணாம். டிக்கெட் விலையை அதிகப்படுத்தி விற்பதை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் கூறியிருப்பதாக தகவல்கள் உலவுகின்றன. இந்த நல்ல செய்தி ரசிகர்களை நிச்சயம் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கும்.

பெரிய வீட்டு கல்யாணம்..பொருமுகிறார் போட்டோகிராபர்

கோடம்பாக்கத்தில் சமீபத்தில் நடந்த மிகப்பெரிய கல்யாணம் அது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரும் வந்திருந்ததால் மண்டபமே 'சூப்பராக' காட்சியளித்தது. ஆனை, அம்பாரி, அதிர வைக்கும் வாத்தியங்கள் என்று ராஜபோக திருமணத்தை அப்படியே படம் பிடித்துக் கொடுக்க ஆளாளுக்கு ஆசைப்பட்டார்களாம். இதற்காக முன்னணி போட்டோ ஸ்டுடியோக்களும் வீடியோ கிராபர்களும் வரிந்து கட்டிக் கொண்டு வாய்ப்பு கேட்டார்களாம். ஆனால் பெண்ணின் அப்பா மனசில் ஒருவர் மட்டுமே இருந்தார்.
 
அதனால் 'யோகம்' அவருக்கே அடித்தது. அவரை நேரில் வரவழைத்த அப்பா, இந்த கல்யாணத்துக்கு வர்றவங்களையும், நிகழ்ச்சிகளையும் ஒரு பிரேம் விடாம எடுத்துக் கொடுக்கணும் என்றாராம். ஆஹா. இதல்லவோ சூப்பர் வாய்ப்பு என்று தன்னை தானே தட்டிக் கொடுத்துக் கொண்ட புகைப்படக்காரர் மாய்ந்து மாய்ந்து படம் எடுத்தார்.
திருமணம் முடிந்து கிட்டதட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது.

 பணம் தானாக வரும் என்று காத்திருந்த யோகமான போட்டோகிராபர் இப்போது நடையாய் நடக்கிறாராம். எப்போ போனாலும் மேடம்தான் பதில் சொல்றாங்க. அப்புறம் வாங்களேன் என்று! சாருக்கு தெரிஞ்சா இப்படி இழுத்தடிக்க மாட்டாரு. ஆனால் நான் போகும்போதெல்லாம் அவரு இல்லையே என்று நொந்து போகிறாராம் போட்டோகிராபர்.

தள்ளிப் போடும் தமன்னா....தாங்க முடியாத ஹரி!

ஹீரோவுக்கு காய்ச்சல் வந்தால், ஹீரோயினுக்கு நெறி கட்டுமா? தமன்னாவிடம் கேட்டால் 'கட்டுமே' என்பார். தனுஷ் தற்போது நடித்துவரும் படங்கள் எல்லாமே கிட்டதட்ட முடிந்துவிட்டது. 'சிங்கம்' படம் வெளியான கையோடு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க வேண்டிய ஹரி அவரது கால்ஷீட் கிடைக்காததால் தவித்துக் கொண்டிருக்கிறார். இவருடன் சேர்ந்து தவிப்பது தமன்னாவும்தானாம்.
 

திடீர் காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாக கிடந்த தனுஷ் மீண்டும் எழுந்து நடப்பதற்குள் ஒரு மாசம் ஓடிப் போய்விட்டது. இந்த ஒரு மாதம் ஹரி படத்திற்காக தமன்னா கொடுத்த தேதிகளும் ஸ்வாகா ஆகிவிட்டது. சர்ரென்று ஆந்திராவுக்கு பறந்துவிட்டார். அங்கும் சில படங்களில் நடிக்கிறாராம். அவற்றை முடித்துவிட்டு சென்னை திரும்பினாலும் தனுஷ் படத்தை கண்டு கொள்ள முடியாது. காரணம் கார்த்தி நடிக்கும் சிறுத்தை தயாராக இருக்கிறது தமன்னாவுக்கு. இந்த நிலையில் தமன்னாவையே மாற்றிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாராம் ஹரி.

ஆனால் படிக்காதவன் வெற்றிக்கு பிறகு தனுஷ§டன் ஜோடி சேர்கிற படமாச்சே. வேறு ஒரு நடிகைக்கு விட்டுக் கொடுக்கவும் மறுக்கிறார் தமன்னா. மாசத்துக்கு அறுபது நாளு இருந்தா நல்லாயிருக்குமே என்று இவரும் இவரது மேனேஜரும் காலண்டரை கசக்கிக் கொண்டிருக்க, கையை பிசைந்து கொண்டிருக்கிறார் ஹரி.
இவங்க பிரச்சனையை சமாளிக்க முடியாமல் சுள்ளிக்கட்டுல மாட்ன பல்லி மாதிரி ச்சொவ் ச்சொவ்னு புலம்பிகிட்டு இருக்கார் தனுஷ்.

Source:www.tamilcinema.com

Wednesday, September 22, 2010

எந்திரன் கதை வெளியானது!-ஷங்கர்,கலாநிதிமாறன் அதிர்ச்சி!

எந்திரன் கதை நேற்று பிரபல வெப்சைட்டில் வெளியானது ஷங்கரின் இயக்கத்தில் வெளியான படங்களில் முதன் முதலாக படம் வெளியாகும் முன்னரே கதை வெளியானது எந்திரன் மட்டுமே. செய்தி வெளியானது முதல் ஷங்கர் அலுவலகமும், சன் நெட்வொர்க் அலுவலகமும் அதிகப்படியான டென்சனில் இருக்கிறார்கள்.இது பற்றி தினத்தந்தி மூத்த பத்திரிகையாளர் ஒருவர் ஷங்கரிடம் பேட்டி காண தொடர்பு கொள்ள, அவர் மறுத்து விட்டார்.


சரி எந்திரன் கதை என்ன?

விஞ்ஞானி ரஜினி 10 வருடங்களாக கடுமையாக போராடி,தன்னைவிட 100 மடங்கு அறிவிலும்,திறமையிலும் மேன்பட்ட எந்திரனை உருவாக்குகிறார்.அந்த எந்திரன் 10 செகண்டில் ஒரு புத்தகத்தை மனப்பாடம் செய்து விடும்.அனைத்து விதமான சண்டைகளும் போடும்.அனைத்து விதமான நடனங்களும் ஆடும்.அனைத்து மொழிகளும் பேசும்.விஞ்ஞானி ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் காதலர்கள்.அவர்கள் காதல் புரிவதை ரோபோ ரஜினி ரசிக்கிறார்.கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ்வர்யாராயையும் ரசிக்கிறார்.

பிறகு உருகி உருகி காதலிக்கிறார்.ஐஸ்வர்யாராயிடம் சென்று தன் காதலை வெளிப்படுத்துகிறார்.அவர் அதிர்ச்சியுடன் அவருக்கு அறிவுரை சொல்கிறார்.நீ ஒரு எந்திரன்.நீ என்னை காதலிக்க முடியாது. நாம் சேர்ந்து வாழ முடியாது என சொல்ல ..எந்திரன் ரஜினி ஒத்துக்கொள்ள வில்லை.vமுன்னை விட தீவிரமாக காதலிக்கிறார்.விஞ்ஞானி ரஜினிக்கு இது தெரிந்ததும் கடுமையாக எதிர்க்கிறார்.இது நீ எனக்கு செய்யும் துரோகம்.உன்னை உருவாக்கியவன் நான்.எனக்கே துரோகம் செய்கிறாயா.. என ஆத்திரப்படுகிறார்.

அதற்கு எந்திரன்,மன்னிக்க வேண்டும்.நீங்கள் என்ன சொன்னாலும் நான் காதலிப்பதை கைவிட மாட்டேன் என சொல்ல விஞ்ஞானி ரஜினி திகைக்கிறார்.இதற்கிடையில் உடனே நாம் திருமணம் செய்ய வேண்டும் என ஐஸ்வர்யாராய் அவசரப்படுத்த நான் உருவாக்கிய எந்திரனை கண்டு நீ,பயப்படுகிறாயா என சிரிக்கிறார்.ஐஸ் பிடிவாதத்தால் அவசர திருமணத்திற்க்கு ஏற்பாடு செய்கிறார்.அதிர்ச்சி தரும் திருப்பமாக திருமண மண்டபத்தில் நுழைந்த எந்திரன் அனைவரையும் அடித்து நோறுக்கி விட்டு ஐஸ்வர்யாராயை கடத்த விஞ்ஞானி ரஜினி திகைப்புடன் பார்க்க அவரது நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைக்கிறார்எந்திரன் ரஜினி.

இடைவேளை

இதற்கிடையில் வில்லன் விஞ்ஞானி ரஜினியின் எந்திரன் ஃபார்முலாவை கைப்பற்றுகிறார்.அதன் மூலம் எந்திரனை தன் வசப்படுத்துகிறார்.சட்ட விரோத செயல்களுக்கு எந்திரனை பயன்படுத்துகிறார்.இதன் பிறகு தான் படம் ரொமாண்டிக் மூடிலிருந்து ஆக்சன் அதகளத்துக்கு மாறுகிறது.
சென்னையை அழிக்க வில்லன் குரூப் எந்திரனுக்கு தரும் அசைன்மெண்டை எந்திரன் நிறைவேற்றியதா..ஐஸ்வர்யராயை எந்திரனிடமிருந்து விஞ்ஞானி ரஜினி எப்படி காப்பாற்றினார் விஞ்ஞானி ரஜினி எந்திரனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாரா என்பது தான் கதை.

Source:http://www.virakesari.lk/cinema/news/001view.asp?key=3088

Tuesday, September 21, 2010

இலங்கையில் வேரூன்றும் தலிபானிசம்....

நடைபெற்ற உண்மை சம்பவங்களை வைத்து ஊகிக்கப்பட்ட ஒரு கட்டுரையே இது..


அண்மையில் இந்தியாவில் கைதான 29வயதான மிர்ஸா ஹிமாயட் பெய்க் எனும் நபர் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது...பூனேயில் உள்ள ஜேர்மன் பேக்கறி குண்டு வெடிப்பு வழக்கில் கைதான லஸ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த இவர் கூறிய தகவல் தான் என்ன? இந்த தாக்குதலுக்கு இவர் இலங்கையில் பயிற்ச்சி எடுத்து கொண்டமையே அந்த தகவலாகும்... ...இவளவு காலமும் அண்டை வீட்டு பாகிஸ்தானை கண்ணில் எண்ணெய் ஊற்றாத குறையாய் கவனித்து வந்த இந்தியாவுக்கு தன கொல்லைபுறம்(இலங்கை) வழியாக தீவிரவாதம் ஊருவியுள்ளமை பேரதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை... இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதிகளின்
ஊடுருவலின் பின்னணி என்ன என்பதை பற்றி சிறிது சிந்தித்து பார்ப்போம்..

இலங்கையில் ஜிஹாத் என்பது எண்பதுகளின் நடுப்பகுதிகளிலேயே ஊடுருவிவிட்டது..குறிப்பாக இலங்கையின் கிழக்குபகுதிகளில் முஸ்லிம்கள்
செறிந்து வாழும் பிரதேசங்களில் இஸ்லாமிய ஆயுத குழுக்களின் நடமாட்டம் பற்றி அப்பப்போ பத்திரிகைகளில் செய்தி வெளிவருவது உண்டு.. அல்கைதாவுடன் தொடர்புடைய லஸ்கர் இ தொய்பா இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளை இலங்கையில் இருந்து செய்வதற்கு பல காரணங்கள் உண்டு.. 2006ம் ஆண்டு இலங்கையில் அப்போது பாகிஸ்தானிய தூதுவராக இருந்த பஷீர் வாலி முகம்மது மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் எல்லோருக்கும் தெரியும்.அதில் முகம்மது மயிரிழையில் உயிர்தப்பினார்...ரோ உளவாளிகள் இந்த தாக்குதலை நடத்திவிட்டு விடுதலை புலிகள் மீது பழியை போட்டனர்... மூன்றாவது நாடொன்றில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதலை பாகிஸ்தான் சற்றும் எதிர்பார்கவில்லை..இந்த சூழ்நிலையில் தான் பாகிஸ்தான் அரசு இலங்கை அரசுடன் ஒரு இரகசிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது..அப்போது மாவிலாறு பிரச்னையில் இருந்த ராஜபக்ச சகோதரர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர்..அந்த ஒப்பந்தம் என்னவென்றால் "இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளை இலங்கையில் இருந்து செய்வதற்கு பாகிஸ்தானிய புலனாய்வு துறைக்கு இலங்கை இடமளிக்க வேண்டும்,இதற்கு கைமாறாக விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் இலங்கைக்கு உதவி செய்யும்..."..

இஸ்லாமிய தீவிரவாதிகளை பாகிஸ்தான் உளவுத்துறை வளர்ப்பது உலகறிந்த விடயம்...மேலும் இலங்கை அரசு உள்ளநாட்டு பிரச்னையில் இந்தியாவின் தலையீட்டை விரும்பவில்லை..காரணம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் வலுப்பெறும் புலிஆதரவு கொள்கை...இந்த மாதிரியான ஒரு நிலையில் இலங்கை அரசுக்கு இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தானே முக்கியம்..ஒருவேளை இந்தியா இலங்கைக்கு எதிராக திரும்பினால் பாகிஸ்தானை வைத்து போராடலாம் என்பதே ராஜபக்சவின் திட்டம்.. ஒப்பந்தத்தின் படி பாகிஸ்தான் புலனாய்வுத்துறையின் தலைமையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் இலங்கைக்குள் நுழைந்தனர்..இலங்கையில் இருந்தபடியே இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்கள் திட்டமிடப்பட்டன..கூடவே முக்கிய தீவிரவாத புள்ளிகளின் சந்திப்பும் இடம்பெற்றன.. தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்துதான் வருவார்கள் என்று எதிர்பாத்திருக்கும் இந்தியாவுக்கு இலங்கை மூலம் உள்நுழைந்து அதிர்ச்சி கொடுப்பதே தீவிரவாதிகளின் திட்டம்..மேலும் பாகிஸ்தானில் அமெரிக்காவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதும் லஸ்கர் இ தொய்பா இலங்கை நோக்கி தனது தளத்தை மெதுவாக நகர்த்தியது..

இலங்கையுடன் பாகிஸ்தான் நெருங்கி பழகுவதை பொறுக்காத இந்தியா இவர்களின் நட்பை உடைக்க ஒரு திட்டம் தீட்டியது...அதுதான் கடந்த வருடம் இலங்கை கிரிக்கேட் அணிமீது பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்..ரோ மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கை அணி வீரர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர்..இந்த தாக்குதல் மூலம் இலங்கை பாகிஸ்தான் நட்பை உடைத்து இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதே இந்தியாவின் திட்டம்..இலங்கை அரசுடன் இணைந்து பாகிஸ்தான் புலனாய்வு துறை செயல்பட்டதால் றோவிற்கு சந்தேகம் ஏற்படவில்லை..ஏனெனில் இலங்கை அரசு இந்த விடயத்தை மறைக்க எடுத்து கொண்ட பகீரதபிரயத்தங்களினால் றோவினால் எதுவுமே செய்ய முடியவில்லை

இதே நேரம் அமெரிக்கா இந்த வருட ஆரம்பத்தில் இலங்கையில் லஸ்கர் இ தொய்பா செயல்பட்டு வருவதாக ஒரு அறிக்கை வெளியிட்டது..அதே காலபகுதியில் தான் புனேயில் உள்ள ஜேர்மனிய பேக்கரியில் தாக்குதல் நடத்தப்பட்டது..இந்த தாக்குதலில் கைதான சந்தேக நபரை விசாரித்த வேளையில் தான் இலங்கை அரசின் வேடம் புலப்பட்டது..சந்தேக நபர் இலங்கையில் பயிற்ச்சி பெற்றவர் என்ற விடயம் இந்தியாவை அதிர்ச்சியடைய செய்துள்ளது..ஆனால் இந்த குற்ற சாட்டை கோத்தபாய வன்மையாக நிராகரித்துள்ளார்..பகிரங்கமாக உலகின் கண்முனாலேயே நடந்த தமிழர் படுகொலையே மறுத்த கோத்தபாய,திரை மறைவில் நடந்த இந்த விடயத்தை ஒத்துகொள்ளுவார் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்..

இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்க புலனாய்வு துறை ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது..அதாவது இலங்கையில் பாகிஸ்தான் லஸ்கர் இ தொய்பாவை சேர்ந்த 200 போராளிகள் உள்ளதாக அந்த எச்சரிக்கை கூறுகிறது...இது இலங்கை அரசு மீது இருந்த சந்தேகங்களை மேலும் வலுப்பெற செய்கிறது..இலங்கையின் குள்ளநரி தனத்தை புரிந்துகொண்ட இந்தியா இனி ராஜபக்ச அரசை சந்தேக கண்ணோடுதான் பார்க்கும்..இந்த நிலையில் இந்தியா ஈழ தமிழகளுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுக்கும் என உறுதியாக கூறமுடியாது...அப்படியே இந்தியா ஈழதமிழர்களுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தாலும் அது காலம் கடந்த ஞானமாகவே இருக்கும் இருக்கும் என்பதில் மாற்றுகருத்து கிடையாது...

Sunday, September 19, 2010

பிரபலங்களின் கையெழுத்துக்கள்-1

இந்திய பிரபலங்களின் கையெழுத்துக்கள்...