Search This Blog

Thursday, September 23, 2010

சினிமா துணுக்குகள்....

 மிஷ்கின் வேணாம்...கண்டிப்பு காட்டிய கார்த்தி

அண்ணன் சிங்கம்னா தம்பி சிறுத்தையா கர்ஜிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் சிவா இயக்குகிற படம்தான் இந்த சிறுத்தை. ஊரே ஒண்ணு கூடி தமுக்கடிச்சாலும், கமுக்கமா இருந்தாதான் காரியம் நடக்கும்னு நினைச்சிருப்பாரு போல. முந்தைய படமான பையா பட ஜோடியான தமன்னாவையே இந்த படத்திலும் ஜோடியாக்கிக் கொண்டார் கார்த்தி. (இந்த சாக்பீஸ்ல இருந்து உழைப்பை நீக்கிட்டா வெறும் சுண்ணாம்புதான் மிஞ்சும்ங்கிற பேராண்மை பட டயலாக் ஏனோ இங்க ஞாபகம் வந்து தொலையுது வாத்யாரே...) இதில் யூனிபார்ஃம் போடாத போலீஸ் ஆபிசரா நடிக்கிறார் கார்த்தி.
 
 கிட்டதட்ட இதே கெட்டப்தானாம் வேட்டை படத்தின் ஹீரோ ஆர்யாவுக்கும். அதனால்தான் லிங்குசாமியுடன் சேர்ந்து படம் பண்ணலாம் என்று பேசி முடிவெடுத்த கார்த்தி, "சிறுத்தையிலும் போலீஸ். வேட்டையிலும் போலீஸ்னா சரியா வராது" என்று ஒதுங்கிக் கொண்டாராம். இதற்கிடையில் நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க சம்மதித்திருக்கிறார் கார்த்தி.
 
 நா.ம.அ படத்தை ரிலீஸ் செய்து கொடுத்த வகையில் சேட் பாக்கெட்டில் எலி கடி! அந்த ஓட்டையை அடைக்கதான் இந்த அட்ஜஸ்ட்மென்ட் என்கிறார்கள். யாரை இயக்குனராக போடலாம் என்று ஒரு லிஸ்ட் தயாரித்தாராம் ஜபக். அதில் ஒரு இயக்குனரின் பெயரை படித்தவுடன் பேனாவால் அந்த பெயரை அடித்தாராம் கார்த்தி. அவர் மிட் நைட்டிலும் கூலிங் கிளாஸ் போடும் 'குட் நைட் கண்ணன்' மிஷ்கின்தான் என்கிறது கோடம்பாக்கத்து குருவி!

எந்திரன் டிக்கெட் ரேட்...ஆறுதல் தரும் புதிய செய்தி!

இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருக்கிறது எந்திரன் ரிலீசுக்கு. அதற்குள் இந்த படத்தின் டிக்கெட் முதல் நாளே எவ்வளவு ரூபாய்க்கு விற்கும் என்று கணக்கு போட்டு கணக்கு போட்டு வாயை பிளக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். இத்தனைக்கும் கொஞ்சம் பெரிய மண்டபம் கிடைத்தால் அங்கேயும் ஒரு ஸ்கிரீன் கட்டி படம் போட்டுவிடுவார்களோ என்று அஞ்சுகிற அளவுக்கு திரும்புகிற இடத்திலெல்லாம் ரிலீஸ் பண்ணப் போகிறார்களாம் எந்திரனை.
 
அப்படியிருந்தும் டிக்கெட் கிடைக்குமா என்ற கவலை ரசிகர்களை வாட்ட ஆரம்பித்திருக்கிறது.சென்னை மாவட்ட விநியோக உரிமையை பெற்றிருக்கும் திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் மேலும் சில கோடிகள் அதிகம் வைத்து இப்படத்தை சத்யம் நிறுவனத்திற்கு விற்றுவிட்டாராம். சென்னையில் மட்டும் முதல் ஒரு வாரத்திற்கு டிக்கெட் ரேட் தாறுமாறாக இருக்கும் என்று கவலைப்படும் ரசிகர்களுக்கு முதல்வர் போட்ட வாய் மொழி உத்தரவு ஒன்று ஆறுதல் அளிக்கக்கூடும்.

கவர்மென்ட்டுக்கு கெட்ட பேரு வர்ற மாதிரி எந்த தியேட்டர்காரர்களும் நடந்துக்க வேணாம். டிக்கெட் விலையை அதிகப்படுத்தி விற்பதை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் கூறியிருப்பதாக தகவல்கள் உலவுகின்றன. இந்த நல்ல செய்தி ரசிகர்களை நிச்சயம் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கும்.

பெரிய வீட்டு கல்யாணம்..பொருமுகிறார் போட்டோகிராபர்

கோடம்பாக்கத்தில் சமீபத்தில் நடந்த மிகப்பெரிய கல்யாணம் அது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரும் வந்திருந்ததால் மண்டபமே 'சூப்பராக' காட்சியளித்தது. ஆனை, அம்பாரி, அதிர வைக்கும் வாத்தியங்கள் என்று ராஜபோக திருமணத்தை அப்படியே படம் பிடித்துக் கொடுக்க ஆளாளுக்கு ஆசைப்பட்டார்களாம். இதற்காக முன்னணி போட்டோ ஸ்டுடியோக்களும் வீடியோ கிராபர்களும் வரிந்து கட்டிக் கொண்டு வாய்ப்பு கேட்டார்களாம். ஆனால் பெண்ணின் அப்பா மனசில் ஒருவர் மட்டுமே இருந்தார்.
 
அதனால் 'யோகம்' அவருக்கே அடித்தது. அவரை நேரில் வரவழைத்த அப்பா, இந்த கல்யாணத்துக்கு வர்றவங்களையும், நிகழ்ச்சிகளையும் ஒரு பிரேம் விடாம எடுத்துக் கொடுக்கணும் என்றாராம். ஆஹா. இதல்லவோ சூப்பர் வாய்ப்பு என்று தன்னை தானே தட்டிக் கொடுத்துக் கொண்ட புகைப்படக்காரர் மாய்ந்து மாய்ந்து படம் எடுத்தார்.
திருமணம் முடிந்து கிட்டதட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது.

 பணம் தானாக வரும் என்று காத்திருந்த யோகமான போட்டோகிராபர் இப்போது நடையாய் நடக்கிறாராம். எப்போ போனாலும் மேடம்தான் பதில் சொல்றாங்க. அப்புறம் வாங்களேன் என்று! சாருக்கு தெரிஞ்சா இப்படி இழுத்தடிக்க மாட்டாரு. ஆனால் நான் போகும்போதெல்லாம் அவரு இல்லையே என்று நொந்து போகிறாராம் போட்டோகிராபர்.

தள்ளிப் போடும் தமன்னா....தாங்க முடியாத ஹரி!

ஹீரோவுக்கு காய்ச்சல் வந்தால், ஹீரோயினுக்கு நெறி கட்டுமா? தமன்னாவிடம் கேட்டால் 'கட்டுமே' என்பார். தனுஷ் தற்போது நடித்துவரும் படங்கள் எல்லாமே கிட்டதட்ட முடிந்துவிட்டது. 'சிங்கம்' படம் வெளியான கையோடு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க வேண்டிய ஹரி அவரது கால்ஷீட் கிடைக்காததால் தவித்துக் கொண்டிருக்கிறார். இவருடன் சேர்ந்து தவிப்பது தமன்னாவும்தானாம்.
 

திடீர் காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாக கிடந்த தனுஷ் மீண்டும் எழுந்து நடப்பதற்குள் ஒரு மாசம் ஓடிப் போய்விட்டது. இந்த ஒரு மாதம் ஹரி படத்திற்காக தமன்னா கொடுத்த தேதிகளும் ஸ்வாகா ஆகிவிட்டது. சர்ரென்று ஆந்திராவுக்கு பறந்துவிட்டார். அங்கும் சில படங்களில் நடிக்கிறாராம். அவற்றை முடித்துவிட்டு சென்னை திரும்பினாலும் தனுஷ் படத்தை கண்டு கொள்ள முடியாது. காரணம் கார்த்தி நடிக்கும் சிறுத்தை தயாராக இருக்கிறது தமன்னாவுக்கு. இந்த நிலையில் தமன்னாவையே மாற்றிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாராம் ஹரி.

ஆனால் படிக்காதவன் வெற்றிக்கு பிறகு தனுஷ§டன் ஜோடி சேர்கிற படமாச்சே. வேறு ஒரு நடிகைக்கு விட்டுக் கொடுக்கவும் மறுக்கிறார் தமன்னா. மாசத்துக்கு அறுபது நாளு இருந்தா நல்லாயிருக்குமே என்று இவரும் இவரது மேனேஜரும் காலண்டரை கசக்கிக் கொண்டிருக்க, கையை பிசைந்து கொண்டிருக்கிறார் ஹரி.
இவங்க பிரச்சனையை சமாளிக்க முடியாமல் சுள்ளிக்கட்டுல மாட்ன பல்லி மாதிரி ச்சொவ் ச்சொவ்னு புலம்பிகிட்டு இருக்கார் தனுஷ்.

Source:www.tamilcinema.com

No comments:

Post a Comment