Search This Blog

Friday, September 17, 2010

கரடியனாறு வெடிப்பு சம்பவம்...பின்னணியில் இலங்கை அரசு?

மட்டகளப்பு கரடியனாறு போலிஸ் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 25 பேர் மரணமடைந்தது எல்லோருக்கும் தெரியும்..சிலர் இதை விபத்து என்கிறார்கள்..சிலர் இது றோவின் கைங்கரியம் என்கிறார்கள்..ஆனால் ஆழமாக சிந்தித்து பார்த்தல்தான் இந்த சம்பவத்தின் பின்னால் இருக்கும் மர்மம் புலப்படும்..இந்த சம்பவத்தின் பின்னால் இலங்கையின் கரங்கள் இருப்பதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன...


பிரித்தானியாவின் சனல் நிறுவனம் இலங்கை இராணுவம் அப்பாவி இளைஞர்களை சுட்டு கொல்லும் வீடியோ ஆதரத்தை வெளியிட்டதிலிருந்து ஆரம்பமாகியது பாசிச இலங்கை அரசின் கிலி...அதன் பின்னர் ஐரோப்பிய வர்த்தக சலுகை ரத்து,ஐநா சபை நிபுணர் குழு என்று இடி மேல் இடி விழுந்தது ராஜபக்சவிற்கு..போதா குறைக்கு புலம் பெயர் தமிழர்களின் போர்குற்ற விசாரணை நெருக்கடி..இந்த ஒரு இக்கட்டான நிலையில் தான் மகிந்தவிற்கு ஐநா சபையில் உரையாற்ற வேண்டி இருந்தது..மஹிந்த ஐநா சபைக்கு வருகிறார் என கேள்விப்பட்ட உடனேயே புலம் பெயர் தமிழர்கள் போர் குற்ற விசாரணை செய்ய என அமெரிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்...எங்கே தன்னை கைது செய்து விடுவார்களோ என்று பயத்தில் இருந்த மகிந்தவின் மாஸ்டர் பிளான் தான் இந்த வெடிப்பு சம்பவம்..

 முதலில் இது விபத்தாக இருக்கமுடியுமா என ஆராய வேண்டும்...இவளவு அபாயகரமான வெடிபொருள் போலிஸ் நிலையத்தின் முன்பு வெட்ட வெளியில் இருந்தது ஏன்?இரண்டு கண்டெய்னர் டைனமெட் எனும்போது கிட்ட தட்ட அரை டன்னாவது இருக்கும்...ஒரு இராணுவ ஆயுத களஞ்சிய சாலையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய அளவு டைனமைட்டை போலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கவேண்டிய தேவை என்ன?இதை வைத்து பார்க்கும் போது இது ஒரு திட்ட மிட்ட செயலாகவே தெரிகிறது..தான் அமெரிக்காவில் இருக்கும் போது இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றால் உலகின் கவனத்தை திசை திருப்பலாம் என்பதே மகிந்தவின் திட்டம்..இதற்கு ஆதாரமாக மகிந்தவின் ஒரு கூற்றே இருக்கிறது...ஒரு இணையதளத்தில் நான் படித்த செய்தி என்ன வென்றால் மஹிந்த இந்த விபத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறாராம்..எல்லோரும் விபத்திற்கு வருத்தம் தான் தெரிவிப்பர்..தாக்குதலுக்கு தான் கண்டனம் தெரிவிப்பது வழக்கம்..இது ஒரு தாக்குதல் போன்ற ஒரு மாயையை எல்லோர் மத்தியில் உருவாக்குவதே மகிந்தவின் கூற்றின் உள்நோக்கம் ஆகும்.... இந்த விபத்து நாடகத்தின் மூலம் மஹிந்த ஒரு கல்லில் பல மாங்காய்களை வீழ்த்த நினைக்கிறார்..

எல்லா சிங்கள தலைவர்கள் போலவே இவரும் புலிக்கதை கூறியே அரசியல் நடத்தி வந்தார்..போர் முடிந்து 14 மாதங்கள் ஆகின்ற வேளையில் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் புலி போதை மெதுவாக குறைந்து வருகிறது. தென்னிலங்கை சிங்கள மக்கள் பட்டாசு சத்தத்தை கேட்டாலும் புலிகள் குண்டு வைத்ததாக தான் அலறுவார்கள்....தானும் தான் சகோதர்கள் நடத்தும் ஊழல்கள் பற்றி சிங்களம் எங்கே கேள்வி கேட்டு விடுமோ என்ற பீதியில் மீண்டும் புலி பயத்தை ஏற்படுத்தும் முயற்சியே இந்த வெடிப்பு... அவசரகால சட்டத்தை நீக்க சொல்லி எழும் அழுத்தங்களையும் இந்த வெடிப்பு சம்பவம் மூலம் இல்லாமல் செய்வதே மகிந்தவின் கணிப்பாகும்.. மேலும் இந்த வெடிப்பு சம்பவத்திற்கு இந்திய உளவுபடையான ரோ தான் காரணம் என்றும் ஒரு செய்தி அடிபடுகிறது..இதை மெய்பிக்கும் வகையில் கடந்த வாரம் இரண்டு ரோ அதிகாரிகள் நாடுகடத்த பட்டதாக இலங்கை அரசு கூறியது..ஆனல் இங்கு நடந்தது வேறு..இந்த புனைகதையில் மகிந்தவின் தந்திர வியாபர உள்நோக்கம் அடங்கியிருப்பதை சற்று சிந்தித்தால் அறிந்து கொள்ளலாம்..

பிராந்திய ஆதிக்கத்திற்காக இந்தியாவும் சீனாவும் அடித்துகொள்வது உலகறிந்த விடயம்..இந்த ஆதிக்க போட்டியில் இலங்கையை பகடை காயாக பயன்படுத்த இரண்டு நாடுகளுமே முண்டியடிக்கின்றன..இதை அறிந்த மஹிந்த இந்தியாவையும் சீனாவையும் பயன்படுத்தி தனது கல்லாவை நிரப்ப பார்கிறார்..ஏற்கனவே பகையுடன் இருக்கும் சீனாவையும் இந்தியாவும் மோத விட்டு வேடிக்கை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தான் இந்த வெடிப்பு சம்பவத்தில் ரோவை இணைக்கும் முயற்சி..அதற்கு முன்னேற்பாடாக தான் ரோ உளவாளிகள் நாடு கடத்தல் என்று ஒரு செய்தியை வெளியிட்டது இலங்கை அரசாங்கம்..அந்த சூட்டோடு சூடாக இந்த வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு பழியை "ரோ" மேல் போடநினைகிறது மஹிந்த அரசு...சீன அரசின் ஒரு கட்டுமான திட்டத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது..இதை இந்திய உளவு பிரிவு தான் செய்தது என்று கூறினால் உலகம் நம்பிவிடும் என்பதே மகிந்தவின் கணிப்பு... ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் இந்தியம் சீனாவும் மோதிக்கொண்டால் அவர்கள் ஏட்டிக்கு போட்டியாக தனக்கு உதவி செய்வார்கள் என்பதே இலங்கை அரசின் திட்டம்..

அடுத்து வரப்போவது தான் மகிந்தவின் நாடகத்தின் உச்ச கட்டம்...அதாவது ஊடகங்களில் அரசல் புரசலாக ஒரு செய்தி பரவி வருகிறது...அதுதான் பிரித்தானியாவில் பரவி வரும் குறுஞ்செய்தி(SMS)..அப்படி என்னதான் உள்ளது அந்த செய்தியில்?"புலிகளின் முன்னால் தளபதி ராம் வெற்றிகரமாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளாரம்..." முதலில் யார் இந்த ராம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..யுத்தம் முடிவடைந்த பின்பு இலங்கையின் கிழக்கு பகுதில் மறைந்துள்ளதாக நம்பப்பட்ட ராம் அரசின் கைக்கூலியாக மாறியது கடந்த வருடம் மாவீரர் தின உரையின் போது வெளிப்பட்டது..விடுதலை புலிகளின் அடுத்த தலைவர் ராம் எனும் மாயையை ஏற்படுத்த முயன்ற மகிந்தவின் முயற்சி புலம் பெயர் தமிழர்களால் முறிய்யடிக்கபட்டது..அதன் பின்பு காணமல் போன ராமை தூசி தட்டி திரும்பவும் உயிர்பிக்க முயல்கிறார் மஹிந்த..இதன் ஓர் அங்கமாக ராம் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக ஒரு வதந்தியை பிரித்தானியாவில் இருக்கும் தனது கைகூலிகள் மூலம் பரப்ப முயல்கிறது சிங்கள இனவெறி அரசு..இதன் மூலம் தமிழர்களை குழப்பி,மகிந்தவை கூண்டில் ஏற்றும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் புலம்பெயர் தமிழர்களை திசை திருப்பும் தந்திரமே இந்த குறுஞ்செய்தி(SMS)முயற்சி..

புலிகள் இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறார்கள் எனும் மாயையை உலகத்திற்கு ஏற்படுத்தி மேலும் தமிழர் மீதான அடக்குமுறையை கொண்டுசெல்வதற்கான ஒரு முயற்சியை தான் மஹிந்த கரடியனாற்றில் செய்திருக்கிறார்... மகிந்த விரித்த வலையில் விழாமல் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை மேலும் உறுதியுடன் முன்னெடுக்க வேண்டும்...

1 comment:

  1. சிங்களவன் செய்த காரியத்திற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் அவர்கள் நிம்மதியாய் வாழ முடியாது.

    ReplyDelete