என்னதான் மெகா பட்ஜெட்,தலைசிறந்த நடிகர்கள் நடித்த படமாக இருந்தாலும் படத்தின் கதை சொதப்பலாக இருந்தால் ரசிகர்கள் அந்த படத்தை தூக்கி வீசிவிடுவார்கள் என்பது சினிமா உலக நியதி.....இதற்கு எந்த மொழி படமும் விதி விலக்கல்ல....மெகா பட்ஜெட்டில் வெளிவந்து அட்டர் பிளாப் ஆன முதல் பத்து இடங்களில் உள்ள ஹோலிவூட் படங்களை பற்றியதே இந்த பதிவு..( படத்தின் தயாரிப்பு செலவு மற்றும் சந்தைபடுத்துதல் செலவையும் சேர்த்தே இந்த பதிவில் பட்ஜெட் கணக்கேடுக்கபட்டுள்ளது. வசூல் அனைத்தும் அமெரிக்க டாலர்களில் குறிபிடப்பட்டுள்ளது)
10.Around The World In 80 Days.
1956ம் ஆண்டு வெளிவந்த படத்தின் ரீமேக்கான இந்த படம் ஜாக்கிசானின் நடிப்பில் 2004ம் அண்டு வெளிவந்தது..சுமார் 140மில்லியன் டாலர் பட்ஜெட்டில் வெளிவந்த இந்த படம் வசூலித்தது வெறும் 72,178,895 டாலர்கள் ஆகும்..இதில் வட அமெரிக்காவில் வசூலித்தது 24,008,137 டாலர்கள் ஆகும்.சர்வதேச வசூல் 48,170,758 டாலர்கள் ஆகும். ஆக மொத்தம் தயாரிப்பாளர்களுக்கு 67,821,105 டாலர் நட்டத்தை ஏற்படுத்தியது இந்த படம்
9.A Sound Of Thunder
2005ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் பட்ஜெட் 80மில்லியன் டாலர்கள் ஆகும்..பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் படு தோல்வி அடைந்தது.வட அமெரிக்காவில் வெறும் 1,900,451டாலர்களையும்,சர்வதேச ரீதியாக 9,765,014 டாலர்களையும் வசூலித்து தயாரிப்பாளர்களுக்கு ஆப்படித்தது.இத மொத்த வசூல் வெறும் 11,665,465 டாலர்கள் ஆகும்.. தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நட்டம் 68,334,535 டாலர்கள் ஆகும் .
8.Treasure Planet
2002ம் ஆண்டு 180மில்லியன் டாலர் பட்ஜெட் செலவில் வெளிவந்த ஒரு கார்டூன் படம் இது...கிட்ட தட்ட ஒரு ஜேம்ஸ் கமேரூன் பட பட்ஜெட்டில் வெளிவந்த இந்த படம் வட அமெரிக்காவில் வெறும் 38,176,783 டாலர்களையே வசூலித்தது..சர்வதேச ரீதியில் வசூல் சற்று பரவாயில்லை ஏன்றாலும் தோல்வியை தவிர்க்கமுடியவில்லை...சர்வதேச வசூலான 71,401,332 டாலர்களையும் சேர்த்து இதன் மொத்த வசூல் 109,578,115 டாலர்கள் ஆகும்..ஆக மொத்தம் தயாரிப்பாளர்களுக்கு 70,421,885டாலர்கள் நாமம்....
7.The Final Fantasy: The Spirits Within
2001ம் ஆண்டு வெளிவந்த ஜப்பானிய அமெரிக்க கூட்டு தயாரிப்பான இந்த படம் 167மில்லியன் டாலர் பட்ஜெட்டில் வெளிவந்தது..முதலில் வீடியோ கேமாக வெளிவந்து பின்பு திரைப்படமான இந்த படம் விமர்சகர்களால் வெற்றி பெறாதேன்றே எதிர்வுகூறப்பட்டது..அவர்கள் சொன்னது போலவே படமும் படுதோல்வி அடைந்தது...வட அமெரிக்காவில் 32,131,830 டாலர்களையும்,சர்வதேச ரீதியில் 53,000,000டாலர்களையும் வசூலித்த இந்த படத்தின் மொத்த வசூல் 85,131,830 டாலர்கள் ஆகும்..ஆக மொத்தம் பட்ஜெட்டில் துண்டு விழும் தொகை 81,868,170 டாலர்கள் ஆகும்..
6.Town&Country
2001ம் ஆண்டு 105மில்லியன் செலவில் வெளிவந்த இந்த படத்தின் மொத்த வசூல் எவளவு தெரியுமா? வெறும் 10,372,291டாலர்கள் ஆகும்..இதில் வட அமெரிக்க வசூல் 6,719,973 டாலர்கள் ஆகும்.சர்வதேச வசூல் 3,652,318 டாலர்கள் ஆகும்..தயாரிப்பாளர்களுக்கு ஆப்படித்த தொகை 94,627,709 டாலர்கள் ஆகும்..இதோடு பார்க்கையில் நம்ம சுறா பரவாயில்லை...
5.The 13Th Warrior
1999ம் ஆண்டு 160மில்லியன் செலவில் வெளிவந்த இந்த படத்தின் மொத்த வசூல் 61,698,899டாலர்கள் ஆகும்..இதில் வட அமெரிக்க வசூல் 32,698,899 டாலர்கள் ஆகும்.சர்வதேச வசூல் 29,000,000 டாலர்கள் ஆகும்..இந்த படம் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்திய நட்டம் 98,301,101 டாலர்கள் ஆகும்..கேட்கவே தலை சுற்றுகிறது...
4.Cutthroat Island
1995ம் ஆண்டு 115மில்லியன் செலவில் வெளிவந்த இந்த படம் ஒரு காலத்தில் உலகின் மிக மோசமான தோல்வி படமாக கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டிருந்தது..வட அமெரிக்காவில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த படத்தின் வசூல் வெறும் 10,017,322 டாலர்கள் ஆகும்..தயாரித்த கம்பனியையே திவாலாக்கிய இந்த படம் ஏற்படுத்திய நட்டம் 104,982,678 டாலர்கள் ஆகும்..
3.The Adventures Of Pluto Nash
எடி மர்பி அமெரிக்காவின் பிரபல நடிகர்களில் ஒருவர்..நகைச்சுவை நடிகரான இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்...ஷ்ரெக் படத்தில் வரும் அந்த கழுதையின் குரலுக்கு சொந்தகாரர் இவர்தான்..இப்படி புகழ் பெற்ற இவர் தான் அமெரிக்காவின் படு மோசமான தோல்வி படத்துக்கு சொந்த காரர்..2002ம் ஆண்டு 120 மில்லியன் டாலர்கள் செலவில் வெளிவந்த இந்த படம் வரலாறு காணாத தோல்வி கண்டது..இதன் மொத்த வசூல் வெறும் 7,103,973 டாலர்கள் ஆகும்..அதில் வட அமெரிகாவில்ன் வசூல்
4,420,080 டாலர்.சர்வதேச வசூல் 2,683,893டாலர் ஆகும்..தயரிபாளர்களுக்கு இந்த படம் வைத்த ஆப்பு 112,896,027 டாலர்கள் ஆகும்..படத்தில் கதை இல்லாவிட்டில் எந்த சூப்பர் ஸ்டார் நடித்தாலும் படம் கோவிந்தா என்பதற்கு இந்த படம் நல்ல ஒரு உதாரணம்..
2.The Alamo
2004ம் அண்டு 145மில்லியன் டாலர் பட்ஜெட்டில் வெளிவந்த ஒரு வார் பில்ம் இது...மெகா பட்ஜெட்டில் வந்து மெகா தோல்வியடைந்த படம் இது.இதன் மொத்த வசூல் டாலர்கள் 25,819,961 ஆகும்...வட அமெரிக்காவில் 22,414,961 டாலர்களையும்,சர்வதேச ரீதியில் 3,405,000 டாலர்களையும் வசூலித்தது இந்த படம்..இந்த படத்தால் ஏற்பட்ட மொத்த நட்டம் 119,180,039 டாலர்கள்..
1.Sahara
ஹாலிவுட் வரலாறில் வியாபார ரீதியாக படு தோல்வி அடைந்த படங்களில் முதலிடத்தில் இருப்பது இந்த படம் தான்..2005ம் ஆண்டு மலைக்க வைக்கும் 241மில்லியன் டாலர் பட்ஜெட்டில் வெளிவந்த இந்த படம் ஏற்படுத்திய நட்டம் 121,730,514 டாலர்கள்..இதன் மொத்த வசூல் 119,269,486 டாலர்கள் ஆகும்..வட அமெரிக்காவில் இதன் வசூல் 68,671,925 டாலர்கள் ஆகும்..சர்வதேச வசூல் 50,597,561 டாலர்கள். இந்த படம் ஏற்படுத்திய நட்டம் எந்திரன் பட பட்ஜெட்டிலும் பார்க்க இரண்டரை மடங்கு அதிகம்..
முதல் பத்து இடங்களில் உள்ள படங்களால் ஏற்பட்ட நட்டம் எவளவு தெரியுமா?940,163,763 டாலர்கள்..கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்கள்.ஒரு வருடத்தில் இந்தியாவில் எடுக்கப்படும் எல்லா படங்களின் பட்ஜெட்டை சேர்த்தாலும்
அவளவு தொகை வராது.. ஹாலிவூடில் பட்ஜெட்டும் பிரமாண்டமாய் தான் இருக்கும்,அதே போல் ஏற்படும் நட்டமும் பிரமாண்டமாய் தான் இருக்கும்..
டிஸ்கி: இந்த அரிய சாதனையை முறியடித்து அனைத்து தயாரிப்பளர்களையும் திவாலாக்கும் இரகசிய பொறுப்பை நம்ம இளைய தலைவலி ஏற்று இருப்பதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன..ஏற்கனவே A.T.M,குருவி,வேட்டைக்காரன்,சுறா மூலம் பாதி சாதனையை நெருங்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
Source:www.Boxofficemojo.com,www.wikipedia.org
நீங்க சொல்றது சரிதான்...
ReplyDeleteகடைசியில் சொல்லி இருக்கிற தகவல்கள் மிகவும் உண்மை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன
ReplyDelete