ஆட்டமா மட்டை ஆட்டமா..நோட்டமா சூதாட்டமா..
வெகுநாளாக பணத்தைத்தான் எண்ணித்தான் பண்ணி நான்
ஆடுறன்..வலை போடுறேன்
தேடுறேன்...டீலரை தேடுறேன்....
ஏ..சலீம் மாலிக் வக்கார் தான்..
அடுத்து இந்த சல்மான் தான்..
வக்கார் சலீம் மாலிக் தான்...
அடுத்து இந்த சல்மான் தான்...ஹோய்..
(ஆட்டமா)
தேறாத கேப்டனாக நானும் இங்கே மாறி..
ஆடாத சூதாட்டம் எனக்காக ஆடி..
யாருக்கும் புரியாத நான் ஒரு கேடி...
அம்மாடி வளைத்தேனே தரகர்களை தேடி ...
ஐ.சி.சி ஆப்படிக்குது-என் ராசாவே
ஊரெல்லாம் என் பெயர் நாறுது..
பேராசை நெஞ்சை தொட்டது-டீலர் என்னை தேட
ஸ்பாட் பிக்சிங் கையை சுட்டது..
மன்னிப்பும் துள்ளி துள்ளி என்னைத்தேடி வாராதோ..
பஞ்சரான என்கேரியரை மெல்ல தூக்கி நிறுத்தாதோ...
பண்ணியின் எண்ணம் முழுவதும் வன்மம்..வா வா வா...
(ஆட்டமா)
யாருக்கும் தெரியாமல் நான் போட்ட முடிச்சு
மீடியா வந்து படம்பிடித்து எல்லாமே ஆப்பு..
டீம் தன்னில் இடம் தேடி நூலாக இளைச்சு
புக்கி செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு
கை நீட்டி காசு வாங்கவா... அட கோச்சுக்கு என்
கையாலே ஆப்பு வைக்கவா..
நோ பால்தான் போடச்சொல்லவா... அட நல்ல கிரிகெட்டை
மறந்து செல்லவா..
சூதாட்டம் மெல்ல செய்து கிரிகெட்டை சிதைப்போமா..
கேரியரை தொலைத்து விட்டு உக்கார்ந்து அழுவோமா...
பண்ணியின் எண்ணம் முழுவதும் வன்மம்..வா வா வா...
(ஆட்டமா)
.
சூதாட்டம் மெல்ல செய்து கிரிகெட்டை சிதைப்போமா..
ReplyDeleteகேரியரை தொலைத்து விட்டு உக்கார்ந்து அழுவோமா...
நல்ல மெட்டில் அப்படியே பொருந்தி வருதுபா....
நல்ல இருக்கு ...
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...
ReplyDelete