Search This Blog
Sunday, September 12, 2010
ஸ்வர்ணலதா-ஒரு இசை குயிலின் முடிவு
நடிகர் முரளியின் மரண செய்தி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளமுதல் அடுத்த அதிர்ச்சியாக வந்திருக்கிறது பிரபல தமிழ் பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் மரண செய்தி.சமீபகாலமாக நுரையீரல் கோளாறால் பாதிக்கபட்டிருந்த இவர் பாடல்களை பாடுவதை தவிர்த்துவந்தார்..செப்டெம்பர் 12ம் திகதி திடீரென கடுமையாக சுகவீனமுற்ற இவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..இறக்கும் போது இவருக்கு வயது 37
ஸ்வர்ணலதா 1973ம் ஆண்டு கேரளா பாலக்காட்டுக்கு அருகில் உள்ள அத்திகோடு எனும் இடத்தில் சேரன்குட்டி மற்றும் கல்யாணி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார்..இவரது தந்தையார் ஒரு சிறந்த ஹார்மோனிய கலைஞ்சரும் பாடகரும் ஆவார்..ஸ்வர்ணலதாவிட்கு ஹார்மோனியம் மற்றும் கிபோர்ட் என்பன வாசிக்க தெரியும்...1987ம் ஆண்டு இவர் சென்னைக்கு வசிக்க வந்தார்.. சென்னையில் எம்.எஸ் விஸ்வநாதனை சந்தித்தபோதுதான் இவரது இசை வாழ்க்கை ஆரம்பம் ஆகியது..நீதிக்கு தண்டனை எனும் படத்தில் ஜேசுதாசுடன் பாடிய சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா எனும் பாடலே இவரின் முதலாவது பாடல் ஆகும்..
இவரின் பிரபல பாடல்கள் இசை புயல் ரஹ்மான் மற்றும் இசைஞானி இளையராஜாவின் இசையிலேலே உருவாகின..மேலும் இவர் கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி மற்றும் உருது போன்ற மொழிகளிலும் பாடல்களை பாடியிருந்தார்..மேலும் 1991ம் ஆண்டு இவர் சின்னதம்பி படத்தில் பாடிய போவோமா ஊர்கோலம் என்ற பாடலுக்கு தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகி விருது கிடைத்தது..பின்பு 1994ம் ஆண்டு கருத்தம்மா படத்தில் பாடிய போறாளே பொன்னுதாயி என்ற பாடலுக்கு தமிழக மற்றும் தேசிய சிறந்த பின்னணி பாடகி விருது இவருக்கு கிடைத்தது... இதே ஆண்டில் தான் இவருக்கு கலைமாமணி விருதும் கிடைத்தது. இதே ஆண்டில் தான் இவருக்கு கலைமாமணி விருதும் கிடைத்தது
எவனோ ஒருவன் வாசிக்கிறான்,குச்சி குச்சி ராக்கம்மா,போவோமா ஊர்கோலம்,ஆட்டமா தேரோட்டமா,சொல்லிவிடு வெள்ளிநிலவே,மலை கோவில் வாசலில் போன்ற இவர் பாடிய பாடல்கள் இன்றும் செம ஹிட்...இந்த இசைக்குயிலின் பயணம் இவளவு சீக்கிரம் முடிவடைந்தமை தமிழ் சினிமாவுக்கும்,ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக மனம் கவர்ந்தவர்கள் மறைந்து கொண்டிருக்கிறார்கள்...என்ன செய்வது...
ReplyDelete