Search This Blog

Saturday, September 4, 2010

பூண்டு பருப்பு ரசம்..

தேவையானவை

புளி -நெல்லிக்காய் அளவு
பூண்டு -10 பல்(தட்டியது)
துவரம் பருப்பு- ஒரு கை
தக்காளி-2
வெங்காயம்-1
மிளகு பொடி -1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி -1/4 ஸ்பூன்
சீரகப்பொடி- 1/2 ஸ்பூன்
தேங்காய் துறுவல் -சிறிதளவு
புதினா,கொத்தமல்லி,கறிவேப்பிலை-சிறிதளவு
வறுத்து பொடி செய்ய:-
மல்லி- 1 மேசை கரண்டி
கடலை பருப்பு-1/2 மேசை கரண்டி
பூண்டு-10 பல்
வரமிளகாய்-1
வெந்தயம்-1/4 ஸ்பூன்

செய்முறை

•புளியை வெண்ணீரில் ஊறவைக்கவும்.துவரம் பருப்பை குழைய வேகவைக்கவும்.

•சிறிது எண்ணெயில் மல்லியை தவிர வறுத்து பொடிசெய்ய கொடுத்தவற்றை வறுத்து கடைசியில் மல்லியை அந்த சூட்டிலெயே வறுத்து ஆற வைத்து பொடிக்கவும்.

•புதினா,கொத்தமல்லி,கறிவேப்பிலை,பூடு இவற்றை லேசாக அம்மியில் தட்டி வைக்கவும்.

•கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

•பின் அம்மியில் தட்டியவற்றை சேர்த்து கிளறவும். அதன் பின் எல்லா தூளையும் சேர்க்கவும்.

•இப்போது தக்காளி சேர்த்து வதக்கிவிடவும். நன்கு குழைந்ததும் வறுத்த பொடித்தவற்றை சேர்த்து வதக்கவும்.

•அதன்பின் புளிகரைத்த நீரில் வேகவைத்த பருப்பையும் கரைத்து அதில் சேர்க்கவும்.

•நுரைத்து வரும் போது தேங்காய் துறுவல் தூவி உடனே இறக்கவும்.

இந்த ரசத்தை கொதிக்கவைக்க கூடாது. அதில் உள்ள சத்துக்கள் முறிந்துவிடும் என்பதால். மல்லியை தீயில் வைத்து வறுக்க கூடாது. இல்லையேல் கசப்புதன்மை கொடுக்கும். தேவைக்கு ஏற்ப காரத்தை மாற்றிக்கொள்ளலாம்.இன்னும் அதிகமாக காரம் வேண்டுமென்றால் ஒரு பச்சை மிளகாய் அம்மியில் தட்டி வதக்கலாம். வாசனையும் கொடுக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஏற்றது.

Source:www.arusuvai.com/

No comments:

Post a Comment