வருகின்ற ஒக்டோபர் முதலாம் திகதி உலகம் முழுவதும் 3000இக்கு மேற்பட்ட திரையரங்குகளில் எந்திரன் திரையிடபடுகிறது.முதல்வார வசூல் கனடாவில் எப்படி இருக்கும் என்று ஒரு சிறிய அலசல்.
டொரோண்டோ நகரில் எந்திரன் நான்கு மிக முக்கிய திரையரங்குகளில் வெளியிடபடுகின்றது..முதல் எழு நாட்களில் மட்டும் 111காட்சிகள் திரையிடப்படவுள்ளன..ஒரு தமிழ் படம் கனடாவில் இந்த அளவு திரையிடபடுவது இதுவே முதல் முறை..கிட்ட தட்ட ஒரு ஹாலிவூட் படத்துக்கு கிடைக்கும் ஒபெனிங் எந்திரனுக்கு கிடைத்திருக்கிறது..ஒரு தியட்டரில் முதல் நான்கு நாட்களும் தினசரி எட்டு காட்சிகள் திரையிடபடுகின்றன..கடைசியாக அவதார் படத்துக்குதான் தினசரி எட்டு காட்சிகள் திரையிடப்பட்டன..
முதல மூன்று நாட்கள வசூல் எப்படி இருக்கபோகின்றது என்று பார்ப்போம்..இந்த தியட்டர்கள் சராசரியாக 400 இருக்கைகளை கொண்டன.ரஜனி மற்றும் சங்கர் இணையும் படம் என்றபடியால் முதல் மூன்று தினங்களும் அணைத்து காட்சிகளும் நிச்சயம் ஹவுஸ் புல்லாகவே இருக்கும்..முதல் மூன்று தினங்களிலும் சராசரியாக 59 காட்சிகள் திரையிடபடுகின்றன..வயதுவந்தோருக்கான டிக்கட் ஒன்றின் விலை $10.75 ஆகும்.சிறுவர்களுக்கான டிக்கட் விலை $7.99 ஆகும்..படம் பார்க்கவரும் ரசிகர்களில் 90 வீதம் வளந்தவர்கள் எனவும்,10 வீதம் சிறுவர்கள் எனவும் வைத்துகொள்வோம்..
வயது வந்தவர்களுக்கான டிக்கட் விற்பனை மூலம் கிடைக்கும் வசூல் $228330(59x400x0.9x10.75) ஆகும்..சிறுவர்களுக்கான டிக்கட் விற்பனை மூலம் கிடைக்கும் வசூல்
$18857(59x400x0.1x7.99) ஆகும்.எனவே மொத்த வசூல் $247187 ஆகும்..இது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூபாய் 98,87,480(247187x40)..முதல் மூன்றுநாள் வசூலே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் ஆகும்..எந்தவொரு தமிழ் படத்துக்கும் கனடாவில் இவளவு வசூல் கிடைத்ததில்லை..
இனி முதல் எழுநாள் வசூலை பற்றி சிறிது அலசுவோம்..சூப்பர் ஸ்டார் படம்,ரகுமான் இசை,சங்கர் கொடுத்த பில்டப் என அதீத எதிர்பார்ப்பை உலக தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது எந்திரன்..இதற்கு கனடா வாழ் தமிழ் மக்களும் விதிவிலக்கில்லை..ஏற்கனவே சிவாஜி இரண்டுவாரம் ஹவுஸ் புல்லாக ஓடியது..முதல் வாரத்தில் திரையிடப்படவுள்ள காட்சிகளில் 75 வீதமானவை ஹவுஸ் புல் காட்சிகள் என வைத்து கொள்வோம்..மீதிகாட்சிகளுக்கு 75 வீதமான டிக்கட்டுகள் வில்படுவதாக வைத்துகொள்வோம்..மேலே கூறியது போல படம் பார்க்க வருவோரில் வீதமானோர் பெரியவர்கள் எனவும் வீதமானோர் சிறுவர்கள் என்றும்
வைத்து கணகிட்டால் ஹவுஸ் புல் காட்சிகள் மூலம் கிடைக்கும் வசூல் $347737
{(83x400x0.9x10.75)+(83x400x0.1x17.99)} ஆகும்..மீதிகாட்சிகள் மூலம் கிடைக்கும் வசூல் $87982 {(28x400x0.9x0.75x10.75)+(28x400x0.1x0.75x7.99)} ஆகும்..எனவே முதல் வாரத்தின் மொத்த வசூல் $435719 ஆகும்..இந்திய மதிப்பில் இது சுமார் ரூபாய் 1,74,28,760 ஆகும்..கிட்ட தட்ட ஒன்றே முக்கால் கோடி ரூபாய்களை முதல் எழு நாட்களில் கனடாவில் எந்த ஒரு இந்திய படமும் வசூல் செய்ததில்லை..
இது டொராண்டோவில் உள்ள முக்கி நான்கு திரையரங்குகளை வைத்து கணிக்கப்பட்ட வசூல் ஆகும்..இதில் ஏனைய நகரங்களோ,சிறிய திரயரன்குகளோ உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நான்கு தியேட்டர்களில் எழு நாட்களில் ஒன்றே முக்கால் கோடி வசூல் என்றால் உலகம் முழுவதும் 3000தியேட்டர்களில் எழு நாட்களில் வசூல் எவளவு இருக்கும்? ..படம் வெற்றியோ,தோல்வியோ,எந்திரன் வசூல் மழையில் நனையபோவது மட்டும் உறுதி..
No comments:
Post a Comment