Search This Blog

Sunday, April 11, 2010

பெர்முடா முக்கோணம்


உலகின் புரிந்து கொள்ள முடியாத ஒரு மர்மங்களில் பெர்முடா முக்கோணமும் ஒன்று..பெர்முடா,ப்ளோரிடா மற்றும் போர்டேரிகோ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட முக்கோண வடிவ கடல் பகுதியே பெர்முடா முக்கோணம் எனபடுகிறது.. இந்த பகுதியினூடாக செல்லும் கப்பல் மற்றும் விமானகளில் பல மாயமாக மறைவதும்,விபத்துகுள்ளவதும் புரிந்து கொள்ளமுடியாத புதிராக உள்ளது..


இந்த மர்மம் வெளிச்சத்துக்கு வந்தது ம் 1945 ஆண்டு நடந்த ஒரு சம்பவம் மூலம் ஆகும்..1945ம் ஆண்டு பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற அமெரிக்க கடற்படையை சேர்ந்த flight19 எனும் விமானம் மாயமாக மறைந்து போனது...முதலில் காலநிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளகியிருக்கலாம் என்றே கருதப்பட்டது..ஆனால் ஆய்வுகளின் படி அன்று வானிலை மிக அமைதியாக இருந்ததாகவும்,விமானத்தை ஒட்டிய விமானி மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவர் என்றும் கூறப்பட்டது..காணாமல் போன விமானத்தை தேடி 13 பேர் கொண்ட ஓர் மீட்பு குழு இன்னுமொரு விமானத்தில் புறப்பட்டது....ஆனால் பயிற்ச்சி விமானம் போலவே மீட்பு விமானமும் மாயமாக மறைந்து போனது..இன்று வரை அந்த இரு விமானங்களுக்கும் அதில் பயனித்தவர்களுகும் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது..மூன்று வருடங்கள் கழித்து 32 பயணிகளுடன் போடேரிகோவிலிருந்து மியாமி நோக்கி புறப்பட விமானம் மாயமாக மறைந்தது..இன்றுவரை அதன் சிதைவுகள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை..இதே வருடம் அசாரோசில் இருந்து பெர்முடா நோக்கி புறப்பட்ட விமானம் மாயமாக மறைந்து போனது..பின்பு 1949 ம் ஆண்டு பெர்முடாவில் இருந்து ஜமெயக்கா நோக்கி புறப்பட்ட விமானம் காணாமல் போனது...இதே போல் 1963ம் ஆண்டு 39 பேருடன் சென்ற கப்பல் ஒன்று இந்த பகுதியில் மாயமாய் மறைந்தது...பின்பு 1969 ம் ஆண்டு இந்த முக்கோணத்தின் மீது பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தின் ரேடியோ தொடர்பு அறுந்து போய் பின்பு அதன் கெதி யாருக்கும் தெரியாமல் போனது..




இந்த மர்மங்களுக்கு பலர் பலவிதமான விளக்கம் கொடுத்தனர்..சிலரின் கருத்துப்படி இந்த கடல் பகுதியில் ராட்சச சுழிகள் இருப்பதாகவும் அவைதான் கப்பல்களை விழுங்குவதாகவும்,வேறு சிலரோ இந்த பகுதியில் எதோ ஒரு அமானுஷ்ய சக்தி உலாவுவதாகவும் அவைதான் இந்த கானாமல்போதல்களுக்கு காரணம் எனவும் கூறுகின்றனர்...ஆனால் ஆராய்சியாளர்களின் கருத்து வேறுமாதிரி உள்ளது....சில இயற்கை நிகழ்வுகள் தான் இதற்கு காரணம் என்பதே இவர்களின் வாதமாகும்..இந்த முக்கோண பகுதியில் மின்காந்த புலம் ஏனைய இடங்களை விட வலுவாக இருப்பதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்....வலுவான மின்காந்த புலத்தால் கப்பல் மற்றும் விமானங்களின் திசையறி கருவிகள் குழப்பமடைந்து அவை வேறு திசையில் பயணித்து விபத்துக்குள்ளவதாக விஞ்ஜானிகள் தெரிவிகின்றனர்..மேலும் கடலுக்கு அடியில் இருந்து வெளிப்படும் மெதேன் வாயு காரணமாக தண்ணீரின் அடர்த்தி குறைவடைந்து கப்பல்கள் மூழ்குவதாகவும் தெரிவிக்க படுகிறது....யார் என்ன கூறினாலும் பெர்முடா முக்கோணம் பல மர்மங்களை கொண்ட பயங்கர இடமாகவே இன்றும் கருத படுகின்றது....அந்த பகுதில் என்ன நடக்கிறதென்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...

பின் குறிப்பு: அமானுஷ்ய சக்திகள் உலாவும் என நம்பப்படும் இடங்களில் மின்காந்த புலம் வலுவாக இருக்கும் என்பது விஞ்ஜான ரீதியாக நிருபிக்கப்பட்ட ஒன்று...

No comments:

Post a Comment