Search This Blog

Sunday, April 18, 2010

அமெரிக்கா VS ரசியா

இது ஒரு வில்லங்கமான பதிவு...

ரசியா மற்றும் அமெரிக்கா இடையே காலம் காலமாக போட்டி நிலவி வருவது எல்லோரும் அறிந்த விடயம்...இவ்விரு நாடுகளுக்கு இடேயிலான ஆயுத போட்டி மிக பிரபலமானது...இப்போட்டி மூலம் உருவானது தான் உலகின் இரு தலை சிறந்த தன்னியக்க துப்பாகிகள்...ரஷ்ய தயாரிப்பானAK47 மற்றும் அமெரிக்க தயாரிப்பான M16 ஆகிய துப்பாக்கிகள் உலகின் சிறந்த துப்பாகிகளாக கருத படுகின்றன....இத் துப்பாக்கிகள் பற்றிய ஒரு சிறிய அலசலே இந்த பதிவு

முதலில் AK47 பற்றிய ஒரு பார்வை

உலகில் மிக அதிகமாக பாவிக்கப்படும் துப்பாக்கியாக AK47 விளங்குகிறது...இதுவரை நூறு மில்லியனுக்கும் அதிகமான AK47 துப்பாக்கிகள் தயாரிகபட்டுள்ளன...உலகிலேயே மிக அதிகமானோரால் அடையாளம் காணக்கூடிய துப்பாக்கியும் இதுவாகும்..AK47இக்கு இருக்கும் என்னுமொரு சிறப்பு என்னவென்றால் உலகின் ஆயுத போராட்டங்களின் சின்னமாக இது கருத படுகிறது.....தீவிரவாதிகள் முதல் இராணுவம் வரையில் விரும்பப்படும் ஆயுதமாக இது விளங்குகிறது...மொசாம்பிக் நாட்டின் தேசிய கொடியில் AK47 இடம் பிடித்திருகிரதென்றால் பாருங்களேன்....

1947ம் ஆண்டு சோவியத் ஜுநியனை சேர்ந்த Mikhail Kalashnikov என்பவரால் வடிவமைகபட்டதே AK47 ஆகும்.(இத்துப்பாக்கியின் முதல் இரு எழுத்துகள் வடிவமைத்தவரின் பெயரையும் இலக்கம் வடிவமைக்கபட்ட ஆண்டையும் குறிக்கின்றது) இதன் இயக்கத்தை பார்ப்போமானால் இது உயர் அமுக்கத்தை உடைய வாயுவால் (Highly Pressurized Gas) இயங்கும் துப்பாக்கியாகும்..நிமிடத்துக்கு 600 ரவைகள் வரை சுடக்கூடிய இந்த துப்பாக்கி 4.3Kg நிறை உடையதாகும்...AK47 துப்பாகிக்கு 7.92x39mm அளவுடைய ரவைகள் பயன்படுத்த படுகின்றன..இதன் ஒரு மகசீனில் 20-30 வரையான ரவைகள் உள்ளன...இதனால் சுடும்போது அதன் தாக்கம் ஆகக்கூடியது 400m வரையே காணபடுகிறது... இத்துப்பாக்கியிலிருந்து புறப்படும் ஒரு குண்டின் சராசரி வேகம் 715m/s ஆகும்..

அடுத்து அமெரிக்க தயாரிப்பான M16ஐ பற்றி பார்த்தால் இது 1964 ம் ஆண்டு வியட்நாம் போர் காலபகுதியில் அறிமுகபடுத்த பட்டது..அன்று முதல் இன்று வரை அமெரிக்க துருப்புகளின் பிரதான ஆயுதமாக இது விளங்குகிறது..M16 பெரும்பாலும் மேலைத்தேய மற்றும் ஐரோப்பிய நாடுகளால் பயன்படுத்த படுகிறது...AK47 பெரும்பாலும் ஆசிய,ஆபிரிக்க நாடுகளால் பயன்படுதபடுகின்றது..

இன் இயக்கத்தை பார்த்தல் இதுவும் AK47 ஐ போல உயர் அமுக்கத்தை உடைய வாயுவால் இயங்குகிறது...நிமிடத்துக்கு 700-950 குண்டுகளை சுடவல்ல இந்த துப்பாகிக்கு 5.56x45mm அளவுடைய ரவைகள் பயன்படுத்த படுகின்றது... இத்துப்பாகியிலிருந்து வெளிப்படும் குண்டானது 975m/s வேகத்தில் பயணிக்கிறது..இதன் அதிகூடிய சுடுதூரம் 550m ஆகும். வழமையாக இதன் ஒரு மகசீனில் 20-30 ரவைகள் இருக்கும்..


இனி இவ்விரு துப்பாக்கிகளையும் ஒப்பிட்டு பார்த்தல் இரண்டுமே தனித்தன்மை உடையதாக காணபடுகிறது.M16 ஐ எடுத்து நோக்கினால் அதன் சுடுதிறன் AK47 ஐ காட்டிலும் அதிகமாக உள்ளது..காரணம் பாவிக்கப்படும் குண்டு AK47 ரவையில் காட்டிலும் பாரமானது,மற்றும் சிறந்த துப்பாக்கி குளிர்விக்கும் செயல்முறை என்பனவாகும்.. மேலும் M16 இன் மூலம் AK47 ஐ காட்டிலும் துல்லியமாக இலக்குகளை தாக்க முடியும்.AK47 இன் அனுகூலங்களை பார்த்தல் பாவிப்பதற்கு மிகவும் இலகுவானது....மேலும் M16 ஐ போல அடிக்கடி சுத்தம் செய்ய தேவை இல்லை(வியட்னாம் போரில் சுத்தம் செய்யாமல் போனதால் செயல் இழந்த M16 துப்பாக்கிகளினால் இறந்த வீரர்கள் பல) மேலும் இன் நம்பகத்தன்மை மிக வியப்பிற்குரியது. AK47 துப்பாக்கிகள் செயல் இழப்பது மிகவும் அரிது..இதனாலேயே எல்லோராலும் விரும்பி பயன்படுத்த படுகிறது.....எவளவு துப்பாகிகள் வந்தாலும் AK47இக்கு எப்பவுமே தனி மரியாதை உண்டு

ஐயோ சாமி நான் தீவிரவாதி இல்லிங்கோ

No comments:

Post a Comment