Search This Blog

Thursday, April 1, 2010

தற்கொலை செய்து கொண்ட பிரபல இந்திய நடிக நடிகைகள்-2

கடந்த பதிவின் தொடர்ச்சி...



பிரபல நடிகை சிம்ரனின் தங்கை மோனல்..இவர் பார்வை ஒன்றே போதுமே படம் மூலம் அறிமுகமானவர்..தொடர்ந்து சமுத்திரம்,பத்ரி போன்ற படங்களில் நடித்தவர்....2002 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திடீரென்று அவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..இவரின் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...மோனல் பிரபல நடன இயக்குனர் ஒருவரின் நெருங்கிய உறவினர் ஒருவருடன் காதல் கொண்டிருந்ததாகவும்,மோனலின் தற்கொலைக்கு அவரே காரணம் எனவும் குற்றசாட்டுகள் எழுந்தன..இறக்கும் போது இவருக்கு வயது 21.


அடுத்ததாக நடிகை விஜி இன் தற்கொலை குண்டைத்தூக்கி போட்டது...கோழி கூவுது படத்தின் மூலம் அறிமுகமாகிய விஜி 2001-2002 காலபகுதியில் தற்கொலை செய்து கொண்டார்...முழங்காலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சினிமாவில் இருந்து வெகு காலம் ஒதுங்கியே இருந்த இவர் சத்திரசிகிச்சையின் பின் குணமடைந்து மீண்டும் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்..அப்போது தான் விஜிக்கு இயக்குனர் ரமேஷ் மீது காதல் ஏற்பட்டது...ஏற்கனவே திருமணமாகி குழந்தையும் உள்ள ரமேஷ் காதலை ஏற்க மறுத்ததும் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கபடுகின்றது....


மன்மதன்,ரெயின்போ கொலனி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மயூரி.இவரை ஷாலினி என்றும் அழைப்பதுண்டு.2005ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்...இறக்கும் போது வாழ்கையில் நம்பிக்கை இழந்து விட்டேன் என்று எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்..


சன் டிவியில் கொண்டாட்டம் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை வைஷ்ணவி..பாபா படத்தில் மனிஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்தவர்...மனைவி,அண்ணி போன்ற சீரியல்களில் நடித்து வந்த வேளை சக நடிகரான தேவ் ஆனந்த் மீது காதல் ஏற்பட்டது..ஏற்கனவே திருமணமான தேவ் ஆனந்த் காதலை மறுக்க மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கபடுகிறது...இது நடந்தது 2006ம் ஆண்டு..

கல்கி,கோலங்கள் போன்ற தொடர்களில் நடித்த சாரதா 2006 ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இறக்கும் போது தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்தார்.. நடிகை வைஷ்ணவி இறந்து சில வாரங்கள் கழித்து இடம்பெற்றது இவரின் மரணம்..



நடிகைகளின் தற்கொலைகளுக்கு மத்தியில் அதிர்ச்சிகரமான வரவாக இருந்தது நடிகர் குணாலின் தற்கொலை..காதலர் தினம் படம் மூலம் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர் குணால்..அந்த படத்தில் அவரின் ஹேர் ஸ்டைல் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது...ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் சொந்த வீட்டிலேயே தூக்கில் தொங்கி மரணத்தை தழுவி கொண்டார்...இறக்க முன்பு இவர் கடும் மன அழுத்தத்துக்கு உட்பட்டிருந்ததாக கூறபடுகின்றது..

1 comment:

  1. later they found out that KUNAL was murdered by a TV actress.

    ReplyDelete