Search This Blog

Saturday, April 3, 2010

உலகின் மிக சிறிய நாடுகள்....

உலகின் மிக மிக சிறிய நாடுகளை பற்றிய ஒரு சுவாரசியமான தொகுப்பே இந்த பதிவு....

உலகின் மிக சிறிய நாடாக இருப்பது வத்திகான் ஆகும்..வத்திகான் வெறும் 110ஏக்கர் பரப்பளவை கொண்ட சுய ஆட்சியை உடைய நாடாகும்..இங்கு சுமார் 800பேர் வசிகின்றனர்..உலகம் முழுதும் வாழும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட கத்தொலிகர்களின் தலைமை பீடமாக வத்திகான் விளங்குகின்றது..1929ம் ஆண்டு உருவான இந்த நாட்டின் தலைவராக பாப்பரசர் விளங்குகிறார்...பெரும்பாலும் இலத்தின் மொழியே இங்கு பயன்படுத்த படுகிறது..பொருளாதாரம் என்று பார்த்தல் நிதி சேகரிப்பு,சுற்றுலா பயணிகள்,நினைவு சின்ன விற்பனை,அனுமதி கட்டணங்கள் என்பன மூலமே வருவாய் கிடைக்கப்பெறுகின்றது..

இங்கு நிரந்தர குடியுரிமை மத குருக்களுக்கு மட்டுமே உள்ளது..போக்குவரத்து என்று பார்த்தல் இங்கு பெருன்தெருக்களோ,விமான நிலையமோ,துறை முகமோ கிடையாது...ஒரு குறுந்தூர இரயில் சேவையும்,ஒரு ஹெலி தளமும் மட்டுமே உள்ளன.இதை தவிர தொலைபேசி,தபால்,வானொலி,வங்கி மற்றும் இணைய சேவைகளும் உள்ளன...உலகிலே இலத்தின் மொழியில் விளக்கங்களை கொண்ட ATM இயந்திரம் இங்குதான் உள்ளது..இந்த நாட்டின் தபால் சேவை உலகின் தலை சிறந்த தபால் சேவைகளில் ஒன்றாக கருதபடுகிறது. வத்திகான் நாட்டு இராணுவத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் சுவிஸ் நாட்டு பிரஜைகள்...வத்திகான் இராணுவத்தில் சேர சுவிஸ் கத்தோலிக்க பிரஜையாக இருக்கவேண்டியது கட்டாயமாகும்..இராணுவத்தின் முக்கிய பணி பாபரசரையும் ஏனைய குருகளையும் பாதுகாப்பது மற்றும் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாகும்..இன்னுமொரு சுவாரசியமான தகவல்,வத்திகான் நாட்டுக்கு தனியாக கால்பந்தாட்ட அணி கூட உள்ளது.,.,உலகின் மிக சிறிய நாடாக இருந்தாலும் உலகின் மிக பலம் வாய்ந்த ஒரு அரசியல் சக்திகளில் ஒன்றாக வத்திகான் விளங்குகின்றது..



இரண்டாவது இடத்தில இருப்பது மொனோகோ ஆகும்.மேற்கு ஐரோப்பாவில் பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு அருகில் அமைந்துள்ளது மொனோகோ.இதன் மொத்த பரப்பளவு சுமார் இரண்டு சதுர கிலோ மீட்டராகும்.இந்த சிறிய பரபளவுக்குள் சுமார் 33,000 பேர் வசிக்கின்றனர்..பொருளாதாரம் என்று பார்த்தல் சுற்றுலாதுறையே முதலிடம் வகிக்கின்றது..இந்த நாட்டில் வருமான வரி கிடையாது...ஏனைய நாடுகளில் இருந்து செல்வந்தர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய இதுவே காரணமாகும்..இராணுவம் இங்கு கிடையாது..சிறிய போலிஸ் படை உள்ளது..மொனோகோவின் பாதுகாப்புக்கு பிரன்ச்சே பொறுப்பாகும்..தனிநபர் வருமானத்தில் இந்த குட்டிநாடு உலகளாவிய ரீதியில் ஆறாவது இடத்தில உள்ளது..



மூன்றாவது இடத்தில இருப்பது Pitcairn தீவுகளாகும்...எரிமலை சீற்றத்தால் உருவான இந்த தீவு கூட்டத்தில் நான்கு தீவுகள் உள்ளன..ஆனால் ஒரே ஒரு தீவில் மட்டுமே மக்கள் வசிகின்றனர்....தென் பசிபிக் கடலில் அமைந்துள்ள இந்த தீவு கூடத்தின் மொத்த பரபளவு 47சதுர கிலோமீட்டர் ஆகும்..மக்கள் வசிக்கும் தீவின் மொத்த பரபளவு வெறும் 5 சதுர கிலோமீட்டர் ஆகும்...பிரித்தானியாவின் கட்டுபாட்டில் உள்ள இந்த தீவில் வெறும் 50 பேரே வசிகின்றனர்..இத்தீவின் தலைவராக தீவு மேயரே உள்ளார்..பொருளாதாரம் என்று பார்த்தல் பெரும்பாலும் மரக்கறி மற்றும் பழவகைகளே பயிரிடபடுகின்றன..சிறிய அளவில் மீன்பிடி மற்றும் கைப்பணி பொருட்கள் உற்பத்தி என்பன உள்ளன..விமான நிலையமோ,துறை முகமோ இல்லாத இந்த தீவில் ஏற்றுமதி,இறகுமதி என்பன முடியாத காரியமாகும்...தீவை தாண்டி செல்லும் கப்பல்களில் இவர்கள் தங்களின் உற்பத்திகளை படகுகளில் ஏற்றி சென்று விற்பனை செய்கின்றனர்..உலகின் மிகவும் தனிமை படுத்த பட்ட தீவாக இருந்தாலும் இங்கு தொலைபேசி,இணையம் மற்றும் செய்மதி தொலைகாட்சிகள் இருப்பது வியபிட்குரியதாகும்..வெறும் 50 பேரை கொண்ட இந்த தீவில் 2004ம் ஆண்டு நடந்த கற்பழிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...இவ்வழக்கில் அத்தீவின் மேயர் உட்பட ஆறு பேர் குற்றவாளியாக காணப்பட்டனர்.....இத்தீவின் பாதுகாப்பிற்கென இரண்டு போலீசார் நான்கு மாத சுழற்சி முறையில் பணி புரிகின்றனர்..


நான்காவது இடத்தில் உள்ள நாடு Gibraltar ஆகும்.6.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட இந்த நாடு lberian வளைகுடாவின் தென் பகுதியில் அமைந்துள்ளது..மேற்கு எல்லையில் ஸ்பெயின் உள்ளது.. பிரித்தானியாவின் கட்டுபாட்டில் உள்ள இந்த நாடு இரண்டாம் உலக போரின் போது பிரித்தானிய படைகளின் முக்கிய தளமாக விளங்கியது..சுமார் 30,000 பேர் வசிக்கும் இந்தநாட்டின் பொருளாதாரம் நிதிசேவை மற்றும் சுற்றுலா பயணிகளிலேயே பெரும்பாலும் தங்கியுள்ளது.. இங்கு பொருட்கள் சேவைகளுக்கு வரி அறாவிடபடுவதில்லை..வங்கிகள் என்று பார்த்தல் பல பிரித்தானிய மற்றும் சர்வதேச வங்கிகள் இயங்குகின்றன..பெரும்பாலனவர்கள் கதொலிகர்களாக உள்ளவேளை இஸ்லாம் மற்றும் ஜூதர்கள் சிறுபான்மையாக உள்ளனர்..உத்தியோகபூர்வ மொழியாக ஆங்கிலம் உள்ளவேளை ஸ்பநிஷும் பாவனையில் உள்ளது..இங்கு சுகாதார சேவைகள் இலவசமாக வழங்கபடுகின்றன..பிரித்தானிய கடவுசீட்டு வைத்திருப்போர் இங்கு தங்கும் காலபகுதியில் அவர்களுக்கும் வைத்திய சேவை இலவசமாக வழங்கபடுகின்றது.. இந்த நாட்டின் பாதுகாப்பு பிரித்தானியாவின் பொறுப்பாகும்..

No comments:

Post a Comment