தேவையானவை...
பீர்க்கங்காய் - 200 g
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - 1 அங்குல துண்டு
பூண்டு - 3 பல்
தேங்காய் துருவல் - 2 tbsp
கடலை பருப்பு - 2 tbsp
துவரம் பருப்பு - 2 tbsp
பாசி பருப்பு - 2 tbsp
எண்ணெய் - 2 tsp
கடுகு - 1/4 tsp
சீரகம் - 1/4 tsp
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - தாளிக்க
கொத்தமல்லி - அலங்கரிக்க
செய்முறை...
•பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
•வெங்காயம் மற்றும் தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
•எல்லா பருப்பையும் கழுவி மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவேண்டும். பருப்பு ரொம்பவும் குழைய தேவையில்லை.
•வானலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் சீரகம் சேர்த்து வெடிக்க விட்டு பெருங்காயம் காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பில்லை சேர்க்கவும்.
•இப்போ வெங்காயம் சேர்த்து வதங்கியதும், இஞ்சி பூண்டு நசுக்கி சேர்க்கவும்.
•பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளி சேர்க்கவும்.
•தக்காளி குழைந்து வந்ததும் பீர்க்கங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி பருப்பை சேர்க்கவும்.
•உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி மூடி வைத்து 8 நிமிடம் வேக விட்டு இறக்கி தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
தேவைகேற்ப மிளகாய் சேர்த்து கொள்ளலாம். பீர்க்கங்காய் தோல் இளசாக இருந்தால் புதினா சேர்த்து துவையல் செய்யலாம்.
Source:www.arusuvai.com
No comments:
Post a Comment