Search This Blog

Sunday, October 3, 2010

எந்திரன்- ஓர் ஆழமான அலசல்..

இந்திய சினிமா வரலாற்றில் மிக அதிக பொருட்செலவில் தயாரான படம் தான் எந்திரன்..செக்கு மாடு போல திரும்ப திரும்ப ஒரே கதை அம்சங்களை கொண்ட படங்களை தயாரிக்கும் இந்திய சினிமாவில் இது ஒரு புதிய தொடக்கம்..இந்தியாவில் பல மொழிப்படங்கள் வெளிவருகின்றன..எல்லாவற்றிலும் மிக முக்கிய கரு காதல்,மசாலா,செண்டிமெண்ட்..இந்த மூன்றுமே இந்திய சினிமாவின் முக்கிய  "Generes" ஆகும்..ஹாலிவூடில் உள்ள "Generes" களை ஆராய்ந்தால் ஒரு Encyclopedia வே தயாரிக்கலாம்..அந்த அளவுக்கு மிகவும் பரந்த ஒரு சினிமா களம் ஹாலிவூட்..தமிழ் சினிமாவை ஹோலிவூட் தரத்துக்கு கொண்டுபோகிறோம் என கூறி எத்தனையோ படங்கள் வெளிவந்தன..ஆனால் அவை தமிழ் சினிமாவை நாறடித்தது தான் மிச்சம்..ஆனால் இந்த எந்திரன் இந்திய சினிமாவின் முதலாவது True Science Fictionபடமாக வெளிவந்திருக்கிறது..குண்டு சட்டியில் குதிரை ஓடிகொண்டிருந்த தமிழ் திரையுலகம் விழித்து கொண்டதற்கான முதல் அறிகுறி இந்த எந்திரன்..தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வராதா என ஏங்கியோரின் கனவை நனவாகியிருக்கிறது இந்த படம்.. குறிப்பாக அந்த கடைசி 45 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகளில் அப்படி ஒரு ஹாலிவூட் தரம்..ஒரு Iron man,Terminator  படம் பார்ப்பது போல மிகவும் தரமான கிராபிக்ஸ் சண்டை காட்சிகள்..

தென் இந்திய சினிமாவின் கடவுளாக போற்றப்படும் ரஜனியின் ஆர்ப்பாட்டமில்லாத அறிமுக காட்சி நிச்சயம் யாரும் சற்றும் எதிர் பார்கத்துதான்..ஆனால் இன்றைய கால கட்டத்தில் அது மிக முக்கியமான ஒன்று..உலகின் வேறு எந்த சினிமாக்களிலும் ஹீரோவுக்கும் ஆர்ப்பாட்ட அறிமுகம் கொடுப்பதில்லை..இதை உணர்ந்து அறிமுக அலபறைகளை தவிர்த்த சங்கருக்கு ஒரு சபாஷ்..(விஜய் சார்..இதுக்கு பிறகாவது உங்களின் ஒபெநிங் சாங் அலபறைகளை நிறுத்துவீர்களா? ) படத்தின் நிறைகள் என்று பார்த்தல் ரஜனிகாந்தின் ஆர்ப்பாட்டமில்லாத அதிரடியான நடிப்பு,புதிய கதை களம்,ஐஸ்வர்யாராயின் அழகு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள்..பின்னணி இசையில் ரசூல் பூக்குட்டி மிரட்டியிருக்கிறார்..வசீகரனாக வரும் ரஜினியில் வயது ஆங்காங்கே தெரிகிறது..ஆனால் நடிப்பில் மனுஷன் பின்னிஎடுதுவிட்டார்..குறிப்பாக அந்த வில்லன் ரஜினி செம மிரட்டல்.. மேலும் நிஜ வில்லனாக வரும் ரஜினியின் ப்ரோபெசரின் நடிப்பு அபாரம்..கண்களாலேயே மிரட்டுகிறார்...

படத்தின் இன்னுமொரு பலம் சாபு சிறில்..ஒரு ஹை டெக் நகரத்தையே படைத்திருக்கிறார்..படத்திலும் சில காட்சிகளில் வந்து போகிறார்.. எல்லாவற்றையும் சரியாக செய்த சாபு சிறில் விஞ்ஜான ஆய்வுகூடத்தை வடிவமைப்பதில் கோட்டை விட்டுள்ளார் என்றே கூறலாம்..சாதாரண வீட்டின் அளவை ஒத்த ஒரு ஆய்வு கூடத்திலா ரோபோக்களை உருவாகுவார்கள்? மனிதன் உருவாக்கிய ரோபோ மனிதகுலத்துக்கு எதிராக மாறுவது என்ற சாத்தியமான கதையை கையில் எடுத்த சங்கர் திரை கதையில் சிறிது சறுக்கி  விட்டார்..படத்தில் ரஜினி சொந்தமாக லேப் வைத்து ரோபோவை கண்டுபிடிப்பதாக காட்டுகிறார்..மிகவும் அதி நவீன ரோபோவை தயாரிப்பது பொம்மை செய்வது போல இலகுவானதொன்றா?அதற்கு எவளவு பணம் செலவாகும்..எவ்வளவு மனித,இயந்திர வளங்கள் தேவைப்படும்..இதை எல்லாம் விடுத்து ரஜினி சிறிய ஒரு ஆய்வுகூடத்தில் இரண்டே இரண்டு உதவியாளர்களை வைத்துகொண்டு ரோபோ கண்டுபிடிப்பதேல்லாம் நடக்காத ஒன்று..ஒரு பெரிய நிறுவனத்தில் ரஜினி வின்ஜானியாக இருந்துகொண்டு ரோபோவை உருவாகுவதாக காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. Science Fiction கதையில் பாடல்கள் எதற்கு?உண்மையிலேயே பாடல்கள் விறுவிறுப்பான திரைக்கதைக்கு வேகத்தடையாக அமைகின்றன..படத்தில் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரும் பாடல்களுக்கு பதிலாக ரோபோவின் சீன்களை சேர்த்திருக்கலாம்..தமிழ் சினிமாவில் இந்த பாடல்களை எப்போது தான் நிறுத்துவார்களோ தெரியவில்லை... மேலும் சந்தானம்,கருணாஸ் பாத்திரங்களை வேஸ்ட் செய்திருக்கிறார் சங்கர்..ஆனால் சிட்டியின் சில்மிசங்கள் அதிரவைகின்றன..சிட்டி செய்யும் கூத்துகளுக்கு கலவரமாகிறது தியேட்டர்..

இப்போது டைரக்டர் சங்கரிடம் சில கேள்விகள்..

உறுதியளிதபடியே ஹாலிவூட் தரத்துக்கு இணையான படத்தை தந்தமைக்கு மிக்க நன்றி..ஆனால் ஹாலிவூட் ஐடியாக்களை பயன்படுத்தியது ஏன்?நீங்கள் ஒரு பேட்டியில் சொன்னிர்கள் என்திரனில் ஹாலிவூட் சாயல் இருக்கவே இருக்காதென்று,ஆனால் ரோபோவின் டிசைன் ஹாலிவூட் I Robot மற்றும் Terminator ஐ நினைவூட்டுகின்றன..குறிப்பாக அந்த டீ கொண்டுவரும் ரோபோ Star wars படத்தில் வரும் R2D2ரோபோவின் அப்பட்டமான கொப்பி...பாடல் காட்சி ஒன்றிலும் Star wars strom troopers போல ஆட்களை உலாவ விட்டிருந்தீர்கள்..மேலும் சிட்டி செய்யும் சில்மிசங்கள் 1999ம் ஆண்டு வெளிவந்த Bicentannial Man எனும் திரைப்படத்துடன் ஒத்து போகின்றது . மேலும் நீங்கள் சிவாஜி திரைபடத்தில் ஒரு பாடலை Desparado பட சாயலில் எடுத்திருந்தீர்கள்..அந்நியன் படத்தில் Matrix பட சண்டை காட்சியை கொப்பி அடித்தீர்கள்..ஹாலிவூட் பட தாக்கம் இல்லாமலே ஹாலிவூடுக்கு இணையாக தமிழில் படமே எடுக்க முடியாதா? இன்னும் கொஞ்சம் மினக்கட்டிருந்தால் ஹாலிவூடையே மிஞ்சும் வகையில் எந்திரனை உருவாக்கியிருக்கலாம்.. தமிழ் சினிமாவில் ஒரு புதிய களத்தை திறந்தமைகாக எந்திரனுக்கு நன்றிகள்..சங்கர் சார் அடுத்த படத்திலாவது தவறாமல் சொந்த ஐடியாக்களை பயன்படுத்துங்கள்..உங்கள் ஐடியாக்களை ஹாலிவூட் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை இருக்கவேண்டும் என்பதே எல்லோரினதும் ஆசை..

இந்த Trailorஐ பாருங்கள்...சிட்டியின் ரகசியம் புரியும்..

2 comments:

  1. மிக நல்ல பதிவு


    http://denimmohan.blogspot.com/

    ReplyDelete
  2. Bicentennial Man actually taken from the book Bicentennial Man written by Issac Asimov. Sujatha is inspired from Issac Asimov's novels on Robotics. Obviously there must be resemblance of Bicentennial Man in Endhiran.
    http://en.wikipedia.org/wiki/Bicentennial_Man

    ReplyDelete