Search This Blog

Monday, October 11, 2010

சினிமா சினிமா சினிமா...

லேடஸ்ட் நிலவரங்கள்,கிசுகிசுக்கள்...

நயன்தாரா விவகாரம்...மனம் திறந்த ரமலத்!

பேட்டி கொடுக்காமல் சற்று ஒதுங்கியே இருந்த ரமலத், நீண்ட இடைவெளிக்கு பிறகு 'குங்குமம்' இதழுக்காக வாயை திறந்திருக்கிறார். மக்கள் மத்தியில் ரமலத்துக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கும் இந்த நிலையில் ரமலத்தின் ஒருவனுக்கு ஒருத்தி பேட்டி சூடாகதான் இருக்கிறது. என்ன சொல்லியிருக்கிறார் அதில்? இதோ-


சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் எங்க வீட்டுக்கு வந்தாலும் ஒரு பாசத்தோடதான் உபசரிப்பேன். எங்களுக்கு சோறு போடுற தொழிலாச்சே. அந்த மாதிரிதான் அந்த பெண்ணையும் ஆரம்பத்துல பார்த்தேன். வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவரை சார்னும் என்னை அக்கான்னும் கூப்பிடும். ஆனா அது மனசுல இந்த மாதிரி நியாயத்துக்கும் தர்மத்துக்கும் புறம்பான ஒரு ஆசை இருக்குதுங்குறது எனக்கு தெரியாம போச்சு. இல்லாட்டி என் வீட்டுக்கே வந்து என் புருஷனை விட்டு தரச்சொல்லி கேக்குற வரைக்கும் அதை நம்பியிருப்பேனா? உலகத்துல ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணுகிட்ட கேட்க கூடாததை எங்கிட்ட கேட்டுச்சு. அன்னைக்குதான் வாழ்க்கையிலேயே நான் து£ங்காத முழு ராத்திரி.

மூத்த பையன் விஷால் கேன்சர்ல இறந்த துக்கத்துல இருந்து முழுசா மீண்டு வராத நிலையில எங்கிட்ட வந்து இப்படி கேட்டாங்க. விஷால் விஷயத்துல கூட அவருக்கு எங்க இருந்துச்சு அக்கறை? உடலை அடக்கம் பண்ணிட்டு வந்ததோட சரி. மறுநாள் அந்த பொண்ணோட கிளம்பிட்டார். பையன் போயிட்டானே என்ற கவலையெல்லாம் நயன்தாரா வந்ததும் ரெண்டாந்தரமா போச்சு. மொத்தத்துல அக்கான்னு சொல்லி வீட்டுக்குள்ளே வந்தவங்களை நம்புனதாலதான் இப்ப சக்களத்தி சண்டை போட வேண்டியிருக்கு. வர்றபோதெல்லாம் சாக்லெட், டிரஸ்னு வாங்கிட்டு வந்ததால பசங்களும் ஆன்ட்டின்னு பிரியா பழகுனாங்க. எல்லாம் வேற நோக்கம்னு அந்த பிஞ்சுகளுக்கே இன்னிக்கு தெரிஞ்சுருச்சு.

அந்த பொண்ணு போட்டோவை பார்த்தா கிழிச்சு போடுறாங்க. டிவியில அவங்க நடிக்கிற படம் வந்தா ஆஃப் பண்ணிடுறாங்க. ராத்திரி து£க்கத்துல பாதியில எழுந்து அப்பா எங்கம்மான்னு கேக்குறான் கடைசி பையன் ஆதித். மன ரீதியா அவங்க பாதிக்கப்பட்டிருக்காங்க.இப்படி என் பிள்ளைகளுக்கும் எனக்கும் மன உளைச்சலை தந்துட்டு அவரை எங்ககிட்ட இருந்து பிரிச்சுட்டு போய் சந்தோஷமா வாழ நினைக்குது அந்த பொண்ணு.

இப்படியெல்லாம் அந்த பேட்டியில் குமுறியிருக்கிறார் ரமலத். பதில் சொல்ல வேண்டிய பிரபுதேவாவும் நயன்தாராவும் காளகஸ்தி கோவிலுக்கு போய் பரிகார பூஜை செய்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள். முக்'கண்'ணுடைய பரமேஸ்வரன் தனது எந்த கண்ணை திறக்கப் போகிறாரோ, பார்க்கலாம்!

த்ரிஷா இடத்தில் எமி...கவுதம் மேனன் அதிரடி முடிவு!

இங்கிலாந்து -இந்திய கூட்டுத் தயாரிப்பு போல இருப்பதுதான் எமியின் விசேஷம்! வெளிநாட்டு அழகிகளை மட்டுமல்ல. அப்படியே கொஞ்சம் கழுத்தை நீட்ட்ட்ட்ட்டி எட்டிப்பார்த்து கூட ஒரு உதாரணம் சொல்லாம். அண்டை மாநிலமான பாலிவுட் குயின்களை கூட 'உவ்வே' என்று ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள் நமது ரசிகர்கள். பாலிவுட்டில் கொண்டாடப்பட்ட பிபாபாஷா பாசு தமிழில் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்த போது என்னவானார்? ஆனால் எமியை பொருத்தவரை எந்த பக்கம் திருப்பினாலும் அழகு!

வண்ணார பேட்டை ரசிகனுக்கும் பிடிக்கும். மைலாப்பூர் ரசிகனுக்கும் இனிக்கும். அப்படி ஒரு முகம் அவருக்கு. இந்த முக லட்சணம்தான் த்ரிஷாவை ஒரு ஸ்டெப் பின்னுக்கு தள்ளிவிட்டிருக்கிறது! ஹையோ... அது எப்போ?

தமிழில் சூப்பர் ஹிட் ஆன விண்ணை தாண்டி வருவாயா படத்தை இந்தியில் எடுக்க வேண்டும் என்று விரும்பினார் கவுதம் மேனன். இதன் மூலம் இந்திக்கும் போகலாம் என்று நினைத்திருந்தார் சிம்பு. ஆனால் அது நடக்கவில்லை. தமிழில் நடித்த அதே கேரக்டரில் நடிக்கிற அதிர்ஷ்டம் த்ரிஷாவுக்கு மட்டும் வாய்த்தது. இப்போது அதிலும் திடீர் மாற்றம். த்ரிஷாவுக்கு பதிலாக எமியை புக் பண்ணிவிட்டார் கவுதம் மேனன்.உமியாயிருந்தா ஊதி தள்ளிடலாம். எமியாச்சே? இதயத்துல ஒரு கர்சீப் போட்டு வைங்கப்பா...

கதை கேட்கிறார் அஜீத்....கதறும் 'கப்சா' இயக்குனர்கள்

எப்பவோ போயிருக்க வேண்டிய 'மங்காத்தா' ஷ§ட்டிங் திடீர்னு நின்னு போச்சு! மீண்டும் தொடருவாங்களா, அல்லது....? இப்படி ஒரு கேள்வியோடு டென்ஷன் கிளப்புகிறார்கள் கோடம்பாக்கத்தில். அதை உறுதி செய்வது போல அஜீத்தும் புது இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார். ஆச்சர்யம் என்னவென்றால் அவர் கதை கேட்பது நடிப்பதற்காக அல்ல. தானே தயாரிக்கும் படத்திற்காக.


ஒரிஜனல் கதையோடு அவரை சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் சிலர். ஒட்டு வேலை, கட்டு வேலை போட்டு ஹாலிவுட் கதைகளை சுட்டு சொல்கிறார்கள் சிலர். கதை கேட்கும் போதே இந்த சீன் இந்த படத்தில வந்திருச்சே. அந்த சீன் அந்த கொரியன் படத்துல இருக்கே என்று எந்த காட்சியை சொன்னாலும் சரியாக கண்டு பிடித்துவிடுகிறாராம் தல.

மனுஷன் எல்லா படத்தையும் பார்த்திருக்காரு போலிருக்கு. எந்த கதையையும் சுட்டு ஒப்பேற்ற முடியலையேப்பா என்று வழிகிறார்கள் கதை சொல்லப் போன 'கப்சா' இயக்குனர்களில் சிலர். அப்படியும் மீறி அவரை இம்ப்ரஸ் பண்ணிய இயக்குனர்களுக்கு தனது புதுக் கம்பெனியில் வாய்ப்பு கொடுக்கப் போகிறாராம் அஜீத்.

சூர்யாவுக்காக உருவான முகமூடி.....அணிந்து கொள்கிறார் ஆர்யா!

நினைவுகளை 'ரீவைண்ட்' செய்கிறவர்களுக்கு ஒரு பழைய செய்தி! சூர்யா நடிக்கும் 'முகமூடி' என்ற படத்தை மிஷ்கின் டைரக்ட் செய்யப் போவதாக கிசுகிசுக்கப்பட்டது. பட்ஜெட் 35 கோடி என்றும், இப்படத்தை தயாரிப்பது ஐங்கரன் நிறுவனத்தினர் என்றும் அப்போது செய்திகள் றெக்கை கட்டின. என் அடுத்தப்படத்தின் பட்ஜெட் 35 கோடி. அதில் ஹாரிஸ்தான் இசையமைப்பாளர் என்று பேச்சு வாக்கில் இளையராஜாவிடமே சொல்லி, அவரது தவுலுக்கு சவுண்டாகவும் ஆனார் மிஷ்கின். (அது நந்தலாலா நேரம்)


இப்போது மீண்டும் முகமூடியை து£சு தட்டி எடுத்திருக்கிறாராம். இதில் நடிக்கப் போவது சூர்யா அல்ல, ஆர்யா! யுத்தம் செய் படத்தை முடித்துவிட்ட மிஷ்கின், இந்த முகமூடி கதையை ஆர்யாவிடம் சொன்னாராம். அவருக்கும் பிடித்துப் போய்விட இப்போது நடித்துக் கொண்டிருக்கும் லிங்குசாமியின் சொந்த கம்பெனியிலேயே கேட்கலாம் என்று யோசித்தாராம்.

ஆர்யாவின் ஆர்வத்திற்கு லிங்குசாமியும் உடன்பட்டு விட்டதாக தகவல். விரைவில் முகமூடியை துவங்குகிறார்கள். ஆர்யாவை நடிக்க வைத்து முப்பது கோடிக்கு படம் எடுப்பதென்பது உரலுக்குள் விரல் வைத்த கதையாகிவிடும் என்பதால், பிசினஸ்சை பல மடங்கு கூட்டுகிற அம்சங்களை சேர்க்கிறார்களாம். அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பெரிய ஹீரோயின், முன்னணி இசையமைப்பாளர் என்று வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றி:www.tamilcinema.com

No comments:

Post a Comment