Search This Blog

Wednesday, September 8, 2010

நடிகர் முரளி.....ஒரு பார்வை...



வைகாசி மாதம் பத்தொன்பதாம் திகதி 1964 ம் ஆண்டு கன்னட இயக்குனரான சித்தலிங்கையாவுக்கு மகனாக பிறந்த இவர் தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத கதாநாயகர்களில் ஒருவர்..1984ம் ஆண்டு தன்னுடைய இருபதாவது வயதில் பூவிலங்கு என்னும் படத்தில் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார்..குயிலியுடன் அவர் இந்த படத்தில் பாடிய ஆத்தாடி பாவாடை காத்தாட என்ற பாடல் இன்றும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம்...அடுத்து 1985ம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த பகல் நிலவு என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்தார்..ரேவதி மற்றும் பலர் நடித்த இந்த படம் அந்த காலத்தில் பெரிய ஹிட் ஆனது..முரளியின் சினிமா வாழ்கையில் முக்கிய மைல்கல்லாக இந்த படம் அமைந்தது...



இவரது சினிமா கேரியரிலேயே மெகா ஹிட்டாக அமைந்த படம் என்றால் அது இதயம் தான்..கதிரின் இயக்கத்தில் முரளி மற்றும் ஹீரா நடித்து 1991ம் அண்டு வெளிவந்த இந்த படம் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக இன்றும் நோக்கபடுகிறது..சிலருக்கு இதயம் முரளி என்றால் தான் இவரை தெரியும்..இன்றும் கூட காதலை சொல்ல தயங்குவோரை "என்ன இதயம் முரளி போல இருக்கிறாய்" என்று கிண்டல் செய்வது உண்டு...அந்த அளவிற்கு அவரின் கேரக்டர் ஒரு வாழ்வியல் தாக்கத்தை மக்கள் மத்தியில் உண்டு பண்ணியிருக்கிறது..



விஜயகாந்த்,பிரபு,சத்யராஜ்,பிரபுதேவா,சூர்யா,சரத்குமார்,சிவாஜி கணேஷன் போன்ற பிரபல நடிகர்களுடனும்,சிம்ரன்,ரோஜா,லைலா,தேவயாணி மற்றும் ரம்பா போன்ற பிரபல நடிகைகளுடனும் இவர் சேர்ந்துநடித்துள்ளார்..1997ம்ஆண்டு சேரனின் இயக்கத்தில் இவர்
நடித்து வெளிவந்த பொற்காலம் மிகப்பெரிய வெற்றி பெற்றது...தமிழ் சினிமாவில் வெற்றிக்கு சமமான தோல்வி படங்கள் கொடுத்த நடிகர்களில் இவரும் ஒருவர்..விரசங்கள் அற்ற குடும்பத்துடன் பார்க்ககூடிய படங்களில் நடிகர் முரளியின் படங்களும் அடங்கும்..



மேலும் இவர் நடித்த புதுவசந்தம்,காலமெல்லாம் காதல் வாழ்க,உன்னுடன்,வெற்றி கொடி கட்டு,சுந்தரா டிராவல்ஸ்,ஆனந்தம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.கடல் பூக்கள் என்ற படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது இவருக்கு கிடைத்தது.கிசுகிசுக்களில் பெரிதும் சிக்காத இவர் தமிழ் சினிமாவின் பன்ச் டயலாக் பேசாத நடிகர்களில் ஒருவராவர்.முரளிக்கு ஷோபா என்ற மனைவியும்,அதர்வா,ஆகா‌ஷ்‌ என்‌ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர்.அதர்வா சமீபத்தில் தான் “பாணா காத்தாடி” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்..இந்த படத்தில் முரளியும் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்..இறக்கும் போது இவருக்கு வயது 46.
இவரின் மரணம் தமிழ் சினிமாவுக்கும்,ரசிகர்களுக்கும் பெரிய இழப்பாகும்.

No comments:

Post a Comment