Search This Blog

Sunday, September 5, 2010

என்னை பாதித்த சில படங்கள்-பகுதி1

உலகின் தலைசிறந்த பொழுதுபோக்கு சாதனங்களில் திரைப்படங்களும் ஒன்றாகும்.ஆயிரக்கணக்கில் படங்கள் வெளிவந்தாலும் வெகுசில படங்களே பார்போரின் மனதை ஆழமாக பாதிக்கும்.அந்த வகையில் நான் பார்த்ததில் என் மனதை ஆழமாக பாதித்த,என்னை சிந்திக்க வைத்த திரைப்படங்களை பற்றி ஒரு பகிர்வே இந்த பதிவு..

அந்தநாள் (1954)


தமிழ் சினிமா வரலாற்றிலேயே பாடல்கள் ஏதுமின்றி வெளிவந்த முழுநீள த்ரில்லர் படம் தான் அந்தநாள்...சிவாஜி கணேஷன் நெகடிவ் ரோலில் நடித்த படங்களில் இதுவும் ஒன்று...இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மெட்ராஸ் மீது குண்டுவீசும் காட்சியுடன் தொடங்கும் இந்தப்படம் இறுதியாக கொலையாளியை கண்டுபிடிக்கும் வரை என்னை இருக்கையின் நுனியில் இருக்க வைத்தது..அந்த காலத்திலேயே கிட்டத்தட்ட ஒரு நரேடிவ் ஸ்டைலில் இயக்கப்பட்ட ஒரு படம்...ஒரு படத்தில் குறைந்தது ஏழு அல்லது எட்டு பாடல்கள் வரை இருந்து வந்த காலகட்டத்தில் பாடல்களே இல்லாமல் ஒரு ஆங்கில படத்திற்கு இணையான திரைகதையுடன் வெளிவந்த ஒரு வித்தியாசமான படம்..ஆனால் எதிர்பார்பிற்கு மாறாக வியாபாரரீதியாக இந்த படம் தோல்வி அடைந்தது...இதற்கு கூறப்பட்ட காரணம் படத்தில் பாடல்களோ,சண்டைகாட்சிகளோ இல்லாதே ஆகும்...தமிழ் பட ரசிகர்களின் குறுகிய ரசிப்புத்தன்மை அந்த காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது என்பதற்கு அந்த நாள் நல்ல ஒரு உதாரணமாகும்..சிறந்த படங்களை பிளாப் ஆக்குவதும்,கண்ட குப்பைகளை ஹிட் ஆக்குவதும் ரசிகர்களின் குறுகிய ரசிப்புதன்மையே ஆகும்..ஆனால் தற்போது இந்த நிலைமை சற்று மாறி வருவது மனதுக்கு ஆறுதல்...


அலைகள் ஓய்வதில்லை(1980)


1980களில் வெளிவந்து சக்கை போடு போட்டது தான் அலைகள் ஓய்வதில்லை...தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இரண்டு சிறந்த நடிகர்கள் அறிமுகமானார்கள்..கார்த்திக் மற்றும் ராதா அறிமுகமான இந்தப்படம் அந்த காலகட்டத்தில் ஒரு வித்தியாசமான முயற்சியாகவே பார்க்கப்பட்டது..வேற்று மதங்களை சேர்ந்த இருவர் காதலிக்கும் போது சமூகத்தில் இயல்பாக எழும் அதிர்வலைகளை மிக துல்லியமாக இந்த படம் காட்டியது...இந்த மாதிரியான கதை களத்திற்கு அடித்தளமிட்ட படமும் இதுவே.அதாவது ஒரு டிரென்ட் செட்டர் படமாக இது உற்று நோக்கப்பட்டது..என்னை கவர்ந்த படங்களில் இந்த படம் முக்கியமானது..இந்த படத்தில் இடம்பெற்ற ஆயிரம் தாமரை என்ற அருமையான காதல் பாடலை யார் தான் மறக்க முடியும்...வாடி என் கப்ப கிழங்கே என்ற பாடலுக்கு நான் சின்ன வயதில் போட்ட ஆட்டத்தை நினைத்தால் இன்னமும் சிரிப்பு வருகிறது..மீசை இல்லாத கார்த்திக்கும்,ராதாவின் துரு துரு நடிப்பும் இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தவை...

மௌன ராகம்(1986)


கார்த்திக்,ரேவதி மற்றும் மோகன் நடிப்பில் வெளிவந்த மணிரத்னத்தின் மூன்றாவது தமிழ்படம் தான் மௌன ராகம் ..படம் வெளிவந்து பதினான்கு வருடங்களின் பின்பு தான் நான் முதல்தடவையாக பார்த்தேன்..ஓர் அழகிய சிற்பம் போல படத்தை ப்ரேம் ப்ரேமாக செதுக்கியிருந்தார் மணிரத்தினம்.ரேவதியை எனக்கு மிகவும் பிடித்த ஹீரோயின்களில் ஒருவராக மாற்றியதும் இந்த படம் தான்..கடந்த கால காதலை மறக்க முடியாமலும்,நிகழ்காலத்தில் கணவனுடன் வாழ முடியாமலும் இரு தலை கொள்ளி எறும்பாக தவிக்கும் ஒரு பெண்ணின் வாழ்வை கவிதை போல கூறிய ஒரு படம்..திரைகதையோடு என்னை மிகவும் கவர்ந்த விடயங்களில் பின்னணி இசையும் ஒன்று..இப்பொழுது கூட என்மனதில் எங்காவது ஒரு மூலையில் அந்த இசை ஒலிப்பதை என்னால் உணரமுடியும்..இசை ஞானி இளையராஜாவின் மாயஜலங்களில் இதுவும் ஒன்று..மன்றம் வந்த தென்றலுக்கு என்ற பாடல் நான் இன்னமும் மறக்காமல் கேட்கும் பாடல்களில் ஒன்று.. இப்பொழுது மணிரத்னம் நினைத்தால் கூட என்னுமொரு மௌன ராகத்தை கொடுக்க முடியாது..அவளவு தனித்துவம் வாய்ந்த படம்..

சிறைச்சாலை(1996)


ப்ரியதர்ஷனின் இயக்கத்தில் மோகன்லால்,பிரபு மற்றும் தபுவின் நடிப்பில் வெளிவந்த படம்தான் சிறைச்சாலை..பிரிட்டிஷ் காலத்து ஆட்சியில் நடந்த கொடுமைகளை பற்றிய படம்..அந்தமான்,நிக்கபோர் தீவுகளில் உள்ள சிறைச்சாலையில் பிரிட்டிஷ்காரர் செய்யும் கொடுமைகளை துல்லியமாக காட்டிய படம் என்ற படியால் படத்தில் வன்முறை காட்சிகள் மிக அதிகம்.இப்பொழுதும் என் கண்ணில் சில காட்சிகள் நிலைத்து நிற்கின்றன..உதாரணமாக மினளுத்தி மூலம் முதுகில் சூடு வைப்பது,மலக்கரைசலை கைதியின் வாயில் பலவந்தமாக ஊற்றுவது,இயந்திர துப்பாக்கி மூலம் கைதிகள் கொல்லுவது போன்ற காட்சிகள் இன்னமும் என் கண்ணை விட்டு அகலவில்லை..பிரிட்டிஷ் தளபதியாக வரும் அந்த வெள்ளைகாரனும்,கூடவே வரும் இந்திய அதிகாரியான அம்ரிஷ்பூரியும் சும்மா மிரட்டியிருந்தார்கள்..அதிலும் அம்ரிஷ் பூரியின் முழி கண்களையும்,மொட்டைதலையையும் நினைத்தால் இப்பவும் பயங்கரம்..இடையே பிளாஷ் பாகில் வரும் தபுவின் காதல் அழகிய கவிதை....பூவே செம்போவே பாடலை இன்று நினைத்தாலும் இனிமை..சந்தோஷ் சிவனின் ஒளிபதிவில் மீண்டும் பிரிட்டிஷ் காலத்து இந்தியாவுக்கு சென்ற ஓர் உணர்வு எனக்கு ஏற்பட்டது..ஓர் ஆங்கிலபடத்துக்கு இணையான விறுவிறுப்பையும்,வன்முறைகாட்சிகளில் உள்ள யதார்த்தத்தையும் கொண்ட படமான சிறைச்சாலை என்னால் மறக்கவே முடியாத ஒரு படம்...

சேவிங் பிரைவேட் ரயன்(1998)


இரண்டாம் உலகப்போரில் நோர்மண்டி தரையிறக்கதின்போது போது நிகழும் ஒரு சம்பவமே இந்த படத்தின் கதை..அமெரிக்காவில் ஒரு பெண்ணின் நான்கு மகன்களும் இராணுவத்தில் உள்ளனர்...அவர்களில் மூவர் ஒரே நாளில் சண்டையில் இறந்துவிடுகின்றனர்..அந்த தாயின் பரிதாப நிலையை உணர்ந்த அமெரிக்க ஜெனரல் அந்த பெண்ணிற்கு கடைசியாக உயிருடன் இருக்கும் அந்த மகனாவது மிஞ்சவேண்டும் என இரக்கப்பட்டு களத்தில் இருக்கும் அந்த இராணுவ வீரனை எப்படியாவது தேடி கண்டுபிடித்து வீடிற்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்...இதற்காக ஒரு கப்டன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அந்த இராணுவ வீரனை தேடும் பணியை ஆரம்பிக்கிறார்..(அமெரிக்காவில் பிரைவேட் என்றால் இராணுவத்தில் கடைநிலை வீரராகும்) பிரைவேட் ரயனை தேடி செல்லும் அந்த குழு வழியில் சந்திக்கும் பிரச்சனைகள்,இழப்புக்கள்,சுவாரசியங்களே மீதிகதை...இறுதியில் ரயனை கண்டுபிடித்து அந்த முயற்சியில் வீரசாவடைகிறார் அந்த கப்டன்... தனக்காக உயிர் நீத்த அந்த கப்டனை நினைத்து பலவருடங்களுக்கு பின்பு அவர் கல்லறையின் முன்பு நின்று ரயன் கண்கலங்கும் காட்சியுடன் நிறைவடைகிறது படம்..மிகவும் யதார்த்தமான காட்சியமைப்புடன் உருவாக்கப்பட்ட திரைகதையே இந்த படத்தின் பெரும் பலம்...இப்படத்தில் என்னை மிகவும் பாதித்த காட்சிகள் பல..இதோ சில உதாரணங்கள்...சக வீரனை கொன்ற ஜேர்மனிய வீரரை கொல்ல துடிக்கும் நண்பர்களிடம் இருந்து அவனை காப்பாற்ற நினைக்கும் துப்பாக்கி சுட பயந்த அந்த இராணுவ தொழிநுட்பவியலாளர்...கண்முன்னேயே சகவீரனை கொல்லும்போது கையில் துப்பாக்கி இருந்தும் தனுடைய பயத்தால் சுட முடியாமல் கதறும் அந்த தொழில்நுட்பவியலாளர் இறுதியில் தான் காப்பாற்றிய அதே ஜேர்மனிய வீரர் தனது கப்டனை சுட்டு கொன்றதும் வெகுண்டெழுந்து துப்பாக்கி எடுத்து அந்த ஜேர்மனிய வீரரை நெற்றியில் சுடும் காட்சி பசுமரத்தாணி போல என் மனதில் ஆழப்பதிந்து விட்டது..காப்டனாக வரும் டோம் ஹான்க்ஸ் மற்றும் ரயனாக வரும் மேட் டேமன் ஆகியோர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்...

மின்னலே (2001)


இயக்குனர் கவ்தம் மேனனின் முதல் தமிழ் படம்..பாடசாலை மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள் என்று எல்லோரையும் தியேட்டர் பக்கம் அலைமோத வைத்த இந்த படம் தான் எனக்கு காதலின் இனிமையை எனக்கு உணரவைத்தது...கவிதை போன்ற காட்சியமைப்புக்கு மணிரத்தினத்துக்கு அடுத்தபடி கவ்தம் மேனன்தான்..காதல்,செண்டிமெண்ட்,
நகைச்சுவை,இசை என ஒரு பொழுதுபோக்கு படத்தின் அனைத்து உள்ளடக்கங்களையும் சரிவர கலந்து அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்து ஒரு ட்ரென்ட் செட்டர் படமாக இது அமைந்தது...ரீமா சென்னின் அறிமுககாட்சி கொள்ளை அழகு...இப்போது அந்த காட்சியை நினைத்தால் எனக்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படும்..நான் எனது வாழ்நாளில் வெறித்தனமாக ரசித்து கேட்ட பாடல் என்றால் அது வசீகர உன் நெஞ்சினிக்க என்ற பாடலாகும்..இப்போதும் காரோட்டும் போது கேட்கும் ஆஸ்தான பாடல்களில் இதுவும் அடங்கும்..இது வரைக்கும் இந்த மின்னலே படத்தை சுமார் இருபது தடவை பார்த்துள்ளேன்..ஒவொருமுறை பார்க்கும் போதும் புதிதாக பார்ப்பது போன்ற ஒரு உணர்வு என்னுள்....இப்பொது கூட இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்தால் முதல் ஆளாக சென்று பார்க்க நான் ரெடி..

2 comments:

  1. yah man!! saving private ryan is my one of the classic collection..my favorite part is Vin Diesel's death..

    Srinath...

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி ஸ்ரீநாத்..

    ReplyDelete