Search This Blog

Monday, August 11, 2014

பணம்





நிலையற்ற வாழ்கையை ஆட்டிபடைக்கும் 
நிறையற்ற காகிதம் ...

பாதளம் வரை பாயும் பலம்மிக்க அஸ்திரம் 
கடவுளே ஆனாலும் கட்டிபோடும் மந்திரம்...

வந்தால் பாமரனை கூட  பல்லக்கில்  ஏற்றும் 
போனால் அரசனை கூட ஆண்டியாக்கும்..

மது தரும் போதை சில நிமிடம், மாது தரும் போதையோ சொற்ப தருணம் 
அனால் பணம் தரும் போதை அளவற்றது...

பலரை எட்டி பார்க்காது, சிலரை தொட்டு பார்க்கும் 
ஆனால் வெகு சிலரிடம் மட்டுமே கொட்டி கிடக்கும்....

பலநேரம் தேடினாலும்  விலகி ஓடும் 
சிலநேரம் ஒதுங்கினாலும்  விடாது துரத்தும்... 

இல்லாவிடில் நஷ்டம், அளவுக்கு மீறினால் கஷ்டம் 
அளவோடு இருந்தால் சுபீட்சம்...

இருப்பவன் இறந்தும் வாழ்வான் 
இல்லாதவன் வாழ்ந்துகொண்டே சாவான்...

சும்மாவா சொன்னார்கள் பணம் இல்லாவிடில் பிணம் என்று.... 


No comments:

Post a Comment