சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் இந்த நூற்றாண்டின் காவிய படம்தான் சுறா..படத்தின் கதை என்று பார்த்தல் ஒரே வரிதான்.."படத்தில் மொக்கை இருக்கலாம்,ஆனால் படமே மொக்கையாக இருந்தால்"...இது தான் சுறா படத்தின் கதை..இனி இந்த கலை பொக்கிசத்தை பற்றி அலசுவோம்...
படத்தின் பெயரை கேட்டவுடனேயே முதுகுதண்டு விறைப்பது வெகு சில உலக படங்களால் தான்...சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த வீராசாமி படத்தின் பெயரை கேட்டாலே இன்றும் பலர் திகிலில் உறைவதுண்டு..அந்த வரிசையில் வெளிவந்த வீர காவியம்தான் சுறா...( வீராசாமி பார்ட்-2 கதையை தான் ராஜ்குமார் சுட்டதாக வெளியில் பேச்சு அடிபடுகிறது....சுறா படம் பார்த்த பல டி ஆர் ரசிகர்கள் இது வீராசாமி பார்ட்-2 தான் என்று கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்ததாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன)சுறா விஜயின் 50வது படமாம்..இது வரை அவர் நடித்த 49 படங்களின் ஒட்டு மொத்த வசூலையும் வெளியாகி நான்கு நாட்களில் சுறா முறியடிதிருகிரதேன்றல் பாருங்களேன்...வெகு விரைவில் வசூலில் வீராசாமியை முந்திவிடுமென்று நிபுணர்கள் கணித்துள்ளனர்
பல வருடங்களாக மாறாத அதே மசாலா பார்முலா...........சிறிதும் வித்தியாசம் இல்லாத விஜயின் நடிப்பு...........பன்ச் என்ற போர்வையில் தற்பெருமை....ரசிகர்களுக்கு ஒட்டு மொத்த ஆப்பு ஏன்று வெற்றி நடை போடுகிறது சுறா.....படத்தில் விஜயின் ஒபெனிங் சீனை வைத்தே அடுத்த வருட ஆஸ்கார் சுறாகுதான் என்பது தெளிவாக தெரிகிறது.....விஜய் படங்களில் புதுசு புதுசாக வில்லன்களை காட்டினாலும் எல்லோருக்கும் ஒரே வேலைதான்...படம் முழுக்க வாய் கிழிய கத்துவது,இறுதியில் விஜய் கையாலேயே சாவது....எல்லா படங்களிலேயும் ஒரே மாதிரி நடிப்பது,நடப்பது,பேசுவது என்று விஜய் எங்காவது சத்தியம் செய்திருப்பர் போல.....எப்பதான் அந்த நிலை மாறுமோ...
சுறாவில் இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்,ஈழ தமிழர் பிரச்சனையை வேறு எந்த படத்தில் இல்லாதவாறு தெளிவாக காட்டியது..உதாரணம் யாழ் நகர் என்ற பெயர் மற்றும் இந்திய மீனவர் பிரச்னை பற்றிய உரையாடல்..(இங்க பார்ரா இவர் இலங்கை அரசுக்கு ஏதிராக படத்தில அறிக்கை விடுறாராம்.....காங்கிரசுடன் கூட்டு....வெளிநாட்டில் படத்தை ஓட்ட இப்படி ஒரு பிட்டா)
கீழ்பாக்கத்தில் இருந்து விடுதலைஆனவர் போல வலம் வருகிறார் தமன்னா...இருந்தாலும் அழகாக இருக்கிறார்..மூன்று மணிநேர நரகவேதனய்க்கு மத்தியில் ஆறுதலாக அமைந்தது வடிவேலின் காமடியும் தஞ்சாவூர் ஜில்லக்காரி பாடலும் தான்..
கடந்த சிலவருடங்களாக வெளிவந்த விஜயின் படங்கள் அவருடைய கிரீடத்தில் நவரதினங்களாக உள்ளன..அவருடைய கிரீடத்தில் வைரமாக ஜொலிப்பது சுறா என்றால் அது மிகை ஆகாது....
ஆதி- பார்த்தோருக்கு பேதி
அழகிய தமிழ் மகன்-வேணா அழுதிருவன்.....
குருவி- சிறகு ஒடிஞ்சு போச்சு
வில்லு- முறிஞ்சு போச்சு
வேட்டைக்காரன்- எதையுமே பிளான் பண்ணி செய்யாட்டா இப்படிதான்
சுறா- மாப்பு...வச்சுடாண்டா ஆப்பு
சுறாவின் மாபெரும் வெற்றியை பார்த்து விஜயின் தந்தை அதன் பகுதி இரண்டான நெத்தலியை இயக்க உள்ளதாக படித்தேன்....தாங்குமா உலகம்...விஜய் அவர்களே...தயவு செய்து உங்கள் பாணியை மாற்றுங்கள்....இல்லையேல் உங்கள் சினிமா வாழ்க்கை கேள்விகுறி தான்....
பிந்தி கிடைத்த முக்கிய தகவல்: சுறா படம் ரிசல்டின் பின்பு இயக்குனர் ராஜ்குமார் அவர்கள் ஒரு வேளை சாப்பாடுக்கே கஷ்டபடுவதாகவும்..குடும்பத்துடன் வீதி வீதியாக சென்று பேனை விற்ட்பதாகவும் தெரிவிக்க படுகிறது..இதே வேளை சன் டிவி சுறா படத்தின் 50வது நாள் போஸ்டரை ஓட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன.
No comments:
Post a Comment