Search This Blog

Sunday, July 25, 2010

பயன் தரும் மருத்துவ குறிப்புக்கள்-3

1.இல‌ந்தை‌யி‌ன் ப‌ண்புக‌ள்

இல‌ந்தை பழ‌ம் ம‌ற்ற பழ‌ங்களோடு ஒ‌ப்‌பிடு‌ம்போது விலை மலிவு. ஆனால் அது தரும் பலன்களோ அரிது. 4000 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானதுதான் இந்த இலந்தை.

இதன் தாயகம் சீனா. வெப்பம் அதிகமாக உள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும் எனப்படுகிறது. அ‌வ்வளவு ‌சி‌ன்ன பழமாக இரு‌ந்தாலு‌ம் அ‌தி‌ல் அட‌ங்‌கி‌ய்ளள ‌வி‌ட்ட‌மி‌ன்க‌ள் ஏராள‌ம்.

கி இலந்தையில் கிடைக்கும் கலோரி 74. இதில் 17 சதவீதம் மாவுப் பொருளும், 0.8 சதவீதம் புரதமும், கொண்ட இதில் விட்டமின் ஏ-வும், கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் இரும்பு சத்தும் கூட அடங்கியுள்ளன.

இது உடலு‌க்கு சூ‌ட்டை த‌ணி‌த்து கு‌ளி‌ர்‌ச்‌சியை‌‌த் தர‌க் கூடியது. கு‌ளி‌ர்‌ச்‌சியான உட‌ல் வாகு கொ‌ண்டவ‌ர்க‌ள் ம‌திய வேளை‌யி‌ல் ம‌ட்டு‌ம் இதனை உ‌ண்ணலா‌ம்.


2.நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் காய்கறிகள்

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். அந்த வகையில் காய்கறிகளில் நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான விட்டமின், கனிமச் சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன.

அதேநேரத்தில் காய்கறிகளை உண்பதால், உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளால் கலோரி அளவும் குறைவாகவே இருக்கும்.

பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோடின், உடலுக்கு விட்டமின் ஏ சத்தினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பீட்டா கரோடினானது புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும்.

நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.

மிளகு, முட்டைக்கோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பச்சை நிறை காய்கறிகள் அனைத்திலுமே வைட்டமின் சி உள்ளது. இவற்றை உண்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

வேறு சில காய்கறிகளில் இரும்புச் சத்துகள் அதிகம் இருக்கும். இவற்றால்
உடலின் இரத்தம் தூய்மையாவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிகக் குறைவான இரும்புச் சத்து இருப்பின் அனீமியா எனப்படும் இரத்த சோகை நோய் ஏற்படும்.

பட்டாணி, கொண்டைக் கடலை உள்ளிட்ட பயறு வகைகள், பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது.

முட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை வண்ணத்திலான காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால், ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது.

அனைத்து காய்கறிகளுமே நார்ச்சத்தினைக் கொண்டிருக்கின்றன. தவிர அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவனாய்ட்ஸ் காணப்படுகிறது,

தவிர மிளகாய், பூசணி, கத்தரிக்காய், காரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சைக் கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது.

உடலின் பொட்டாசியம் அளவு சக்தி தேவைக்கு முக்கியப் பங்காற்றக் கூடிய நிலையில், பழங்கள், காய்கறிகளில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. தவிர, பழங்கள், காய்கறிகளில் அமினோ அமிலங்களும் உள்ளதால். உடலின் சுரப்பி செயல்பாடுகளை பராமரிக்க ஏதுவாகிறது.

எனவே அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்.


3.அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட் களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

Source:www.pathivu.com

1 comment:

  1. பயந்தரும் தகவல்கள். நன்றி

    ReplyDelete