Search This Blog

Saturday, July 10, 2010

உலகிலேயே மிக வயதான மனிதர்?

தற்போது வாழும் மனிதர்களில் மிகவும் வயதானவராக ஜோர்ஜியா நாட்டை சேர்ந்த Antisa Khvichava என்பவரை ஜோர்ஜியா நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.July 8 1880 இல் பிறந்த இவருக்கு தற்போது 130 வயதாகிறது.இவருக்கு ஒரு மகன்,பத்து பேரப்பிள்ளைகள்,பன்னிரண்டு பூட்டப்பிள்ளைகள் மற்றும் ஆறு பேரப்பிள்ளைகளின் பேரப்பிள்ளைகள் உள்ளனர்.இவரது முதல் திருமணம் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகள் இரண்டாம் உலக போரின்போது பட்டினியால் இறந்ததாக இவர் கூறுகின்றார்.தற்போது நாற்பது வயதான அவரது பேரப்பிள்ளையுடன் வசித்துவரும் இவர் ஆரம்பகாலங்களில் தேயிலை பறிப்பவராக வேலை பார்த்துள்ளார்..உத்தியோக பூர்வ தகவல்களின் படி இவர் 1965ம் ஆண்டு தனது 85வது வயதில் அந்தவேளையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.வாழ்நாளில் பாடசாலையையே பார்த்திராத இவர் வட்டார மொழியையே பேசுகிறார்.தனது நீண்ட ஆயுளின் ரகசியம் சுறுசுறுப்பான வாழ்கை முறையே என்கிறார்..நிட்டிங் எனும் ஆடை நெய்தலை மிகவும் விரும்பும் இவர் இந்த வயதில் தன்னால் அதை தொடரமுடியவில்லையே என வருத்தப்படுகிறார்.ஆனால் இவரது வயதை ஆதார்வபூர்வமாக நிரூபிப்பதில் சில சிக்கல் நிலவுவதாக உலகின் மிக வயதானவர்களை பற்றி ஆய்வு செய்யும் ஓர் அமைப்பு தெரிவித்துள்ளது..இவரது பிறப்பு சான்றிதழ் தொலைந்ததால் இவரது வயதை அறிந்துகொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.ஆனாலும் ஜோர்ஜிய அதிகாரிகள் இரண்டு சொவியேத் ஜூனியன் காலப்பகுதில் வழங்கப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வழங்கியுள்ளனர்.தற்போது ஆதார்வ பூர்வமாக நிருபிக்கப்பட்ட உலகின் வயதான மனிதர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 114 வயதான Eugenie Blanchard என்பவராவர்.

No comments:

Post a Comment