Search This Blog

Wednesday, July 28, 2010

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.....

சமீபத்தில் சில சஞ்சிகைகளில் நான் படித்த ஜோக்குகளின் தொகுப்பே இந்த பதிவு...


1."பயந்தவன் சொல்லுவான் அந்த பிகரோட அண்ணன் ஒரு ரவுடின்னு...
துணிந்தவன் சொல்லுவான் அந்த ரவுடியோட தங்கச்சி சூப்பர் பிகருன்னு.....'"

2."மன்னா எதிரிநாட்டு மன்னர் அனுப்பும் புறாக்களை சமைத்து சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் கேட்டீர்களா?..."
ஏன்,என்னாச்சு?...
புறாத்தொல் போர்த்திய காகம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளான் என்றால் பாருங்களேன்.."

3."கட்சிக்கொடி ஏன் அரைக்கம்பத்தில பறக்குது?
கட்சில இருந்த இறுதி தொண்டரும் ஏதிர்கட்சிக்கு போய்ட்டாராம்.."

4."கண்களை மூடிப்பார்தேன் கனவில் வந்தாள்....
கண்களை திறந்து பார்த்தேன்..நாசமப்போறவா..கணவனோட வந்தாள்..."

5."கபாலிக்கு பாராட்டுவிழா நடத்துறாங்களே...எதுக்கு?..
மாமூல் கொடுக்கிறவங்க பட்டியல்ல தொடர்ந்து 25 வருஷமா முதலிடதில இருக்கானாம்..."

6."இந்த விலைவாசியில தலைவருக்கு இவ்வளவு பெட்ரோல் எங்கேருந்து கிடைச்சுது...
தீக்குளிக்க போறேன்னு அறிக்கை விட்டாராம்.."

7."இப்ப நீங்க ரொம்ப கிரிடிகலான நிலைமைல இருக்கீங்க....
நான் என்ன செய்யனும் டாக்டர்?...
உடனே புல் பில்லையும் செட்டில் பண்ணிடனும்!..."

8."நமது கட்சி எம்-எல்-ஏ-க்கள் விலை போவதை நான் குறைகூற விரும்பவில்லை.அது அவர்களின் ஜனநாயக உரிமை.அதே நேரத்தில் அவர்களுக்கு கிடைக்கும் பணத்தில் பாதியையாவது வளர்த்து ஆளாக்கிய கட்சிக்கு வழங்கும்படி தலைவர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.."

9."கூட்டணிக்காக நம்ம தலைவர் இப்படியா அலைவார்?..""
என்ன பண்ணினார்?..
கூட்டணிக்கு கட்சிகள் தேவைன்னு விளம்பரம் பண்ணியிருக்காறேன்னா பாரேன்.."

10."தலைவரை குழந்தைகளுக்கு பெயர் வைக்க சொன்னது ரொம்ப தப்பபோச்சு..
ஏன்?..
காதலிச்சு கைவிட்ட பொண்ணுகள் பெயரா வைசுகிட்டு இருக்கார்.."

11."டாக்டருக்கு ஏதோ வேண்டுதலாம்....
அதற்காக பேஷண்டுக்கு ஆபரேஷன் பண்ணிட்டு 108 தையல் போடுறதெல்லாம் ரொம்ப ஓவர்!.."

12."மாப்பிள்ளை பாரின் ரிடர்ன் என்று சொன்னதை நம்பி பொண்ணு கொடுத்தது தப்பாப்போச்சு....
ஏன் என்ன ஆச்சு?..
இப்பதானே தெரியுது..மாப்பிள்ளை பாரின் போக புறப்பட்டு பாதியிலேயே திரும்பி வந்தவர் என்று..."

4 comments: