2010ம் ஆண்டு பிறந்து இதுவரை ஆறு மாதங்கள் கடந்துவிட்டன....இந்த
அரையாண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களை பற்றிய ஒரு பார்வையே இந்த பதிவு...
இந்த வருடம் பிறந்ததில் இருந்து இந்த பதிவு எழுதிக்கொண்டு இருக்கும்வரையில் மொத்தமாக 49 படங்கள் வெளியாகயுள்ளன... இந்த அரையாண்டு தமிழ் சினிமாவுக்கு சோதனை காலம் என்றே கூறலாம்....வெளிவந்த படங்களில் வெகு சில படங்களே வெற்றி படங்களாக அமைந்தன..முதலில் வெற்றி படங்களை பற்றி பார்ப்போம்...
செல்வராகவனின் இயக்கத்தில் கார்த்தி,ரிமா சென் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்....தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு புது முயற்சியாக இந்த படம் நோக்கப்பட்டது...எல்லோராலும் அதிகமாக விமர்சிக்கப்பட்ட இந்த படம் வியாபார ரீதியாக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கருதப்பட்டாலும்,தமிழ் சினிமாவின் மரபுகளை மாற்றி ஒரு புதிய தொடக்கமாக அமைந்த இந்த படம் என்னுடைய பார்வையில் ஒரு வெற்றிப்படம் தான்..
அடுத்து அமுதனின் இயக்கத்தில் தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் வெளிவந்த நகைச்சுவை திரைப்படம் தமிழ்படம்...இதுவரை காலம் தமிழ் சினிமாவில் இருந்து வந்த அத்தனை மரபுகளையும் நோண்டி நொங்கெடுத்த இந்த திரைபடம் பெரும் வெற்றி பெற்றது..வசூலிலும் நல்ல இலாபத்தை கொடுத்தது..
கவ்தம் மேனனின் இயக்கத்தில் சிம்பு,திரிஷா நடிப்பில் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளிவந்த படம்தான் விண்ணை தாண்டி வருவாயா...மிகவும் யதார்த்தமான ஒரு காதல் திரைப்படம்..வழக்கமான தமிழ் சினிமா பார்முலாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட திரைப்படமான விண்ணை தாண்டி வருவாயா சிம்புவின் சினிமா கேரியரில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது...ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு,யதார்ர்தமான கதை,கொள்ளை கொள்ளும் இசை..இவை மூன்றும் சேர்ந்ததால் படத்தின் ரிசல்ட் மெகா ஹிட்..தயாரிப்பளருக்கு நல்ல இலாபத்தை கொடுத்தது இந்த படம்....
வெங்கட்பிரபு,பிரேம்ஜி,ஜெய் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் கோவா.. சென்னை 600028,சரோஜா ஆகிய வெற்றி படங்களை கொடுத்த வெங்கட்பிரபுவிடமிருந்து மிகவும் ஆவலாக ஏதிர்பார்க்கப்பட்ட படம் கோவா..பல தடவை ரிலீஸ் தேதி தள்ளி போடப்பட்டு இறுதில் இந்த வருட ஆரம்பத்தில் வெளியான இந்த திரைப்படம்,ரிலீசுக்கு முதல் கொடுத்த பில்டப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம்...சென்சார் போர்டினால் ஏ சர்பிபிகட் வழங்கப்பட்ட இந்த திரைப்படம் பெரும்பாலும் இளவட்ட ரசிகர்களையே கவர்ந்தது...மேல் தட்டு ரசிகர்களினால்,அதாவது “A” கிளாஸ் ரசிகர்களினால் வெற்றி பெற்ற இந்த திரைபடம் ஓர் கமெர்சியல் சக்சஸ்..
அடுத்து லிங்குசாமியின் இயக்கத்தில் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில்,யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த திரைப்படம் தான் பையா..ஏற்கனவே பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமமாகி ஹிட் ஆக இருந்ததாலும்,லிங்குசாமி,கார்த்தி கூட்டணி இருப்பதாலும் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது..படம் வெளிவந்த பிறகு பலருக்கு படத்தின் கதை பிடிக்கவில்லை என்றாலும் படம் சூப்பர் ஹிட்..படத்தின் மூலம் கிடைத்த லாபம் நாற்பது கோடி என கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது..
இறுதியாக ஹரி இயக்கத்தில் சூர்யா,பிரகாஷ்ராஜ் மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளிவந்து கர்ஜனை செய்து கொண்டிருக்கும் படம் தான் சிங்கம்...அக்சன்,செண்டிமெண்ட்,லவ் இந்த மூன்றையும் மிக சரியான விகிதத்தில் கலந்து ஹரியினால் கொடுக்கப்பட்ட மசாலா தான் சிங்கம்..அதன் விளைவு ..படம் இன்ஸ்டன்ட் சக்சஸ்..இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலேயும் வசூலில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது சிங்கம்..
இது வரை சூப்பர் ஹிட் படங்களை பற்றி அலசினோம்...இனி மிதமான வெற்றியை பெற்ற அதாவது போட்ட முதலுக்கு மோசம் இல்லாமல் போன படங்களை பற்றி பார்ப்போம்..
அஜித் குமார் நடிப்பில் சரணின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் அசல்..அஜித்,சரண் கூட்டணியில் மிகுந்த ஏதிர்பார்புடன் வெளிவந்த அசல் திரைப்படம் பில்லா பட சாயலில் இருந்தபடியால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்த முடியவில்லை..எப்படியோ "தல" ரசிகர்களால் படம் தயாரிப்பாளருக்கு நட்டத்தை ஏற்ட்படுத்தவில்லை...
வசந்தபாலனின் இயக்கத்தில் புது முகங்களான மகேஷ் மற்றும் அஞ்சலி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அங்கடிதெரு.."ரங்கநாதன் தெரு" கடைகளில் வேலை செய்வோரின் வாழ்கையை அப்படியே படம்பிடித்து காட்டி இருக்கிறது இந்த படம்.எல்லோராலும் பெரிதும் பாராட்டப்பட்டது அங்கடிதெரு..நல்ல கதை இருந்தும் ஏனோ பெரிய வெற்றியை பெற முடியவில்லை...பெரிய ஹீரோ...சண்டை..டூயட் ..மசாலா...இவை படத்தில் இல்லையென்றால் எவ்வளவு நல்ல கதை உள்ள படமென்றாலும் பெரிதாக எடுபடாதென்று இயக்குனர் வசந்தபாலனுக்கு தெரிந்தபடியால் தான் படத்தின் வசூலைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை போலும்..
இதைவிட தனுஷ் நடிப்பில் வெளிவந்த குட்டி,விசாலின் தீராத விளையாட்டு பிள்ளை,ஜீவாவின் கச்சேரி ஆரம்பம்,லாரன்சின் இரும்புகோட்டை முரட்டு சிங்கம் மற்றும் அவள் பெயர் தமிழரசி,மாஞ்சா வேலு,கோரிப்பாளையம் ஆகிய படங்கள் சுமாரான வெற்றியை பெற்று தயாரிபாளர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தவில்லை...
அடுத்து இந்த அரையாண்டில் வெளிவந்த "அட்டர் பிளாப்" படங்களைப் பார்போம்..
விஜய்,தமன்னா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த விஜயின் ஐம்பதாவது படம் தான் சுறா..ஏற்கனவே பலர் இந்த படத்தை பிரிச்சு மேய்ஞ்சு தொங்கப்போட்டு விட்டார்கள்..ஒரு படத்துக்கு திரைகதை எவ்வளவு முக்கியம் என்பதை எல்லோருக்கும் உணர்த்திய படம் தான் சுறா....விநியோகிஸ்தர்கள்,திரையரங்கு உரிமையாளர்கள் என பலர் விஜயிடம் நட்ட ஈடு கேட்கும் அளவுக்கு பலரை நோகடிச்ச சுறா தான் விஜய் படங்களிலேயே அட்டர் பிளாப்..வழமை போல திரைகதையை நம்பாமல் சண் டிவியின் விளம்பரத்தை நம்பி படம் நடிச்சார் விஜய்....விளைவு....படம் கோவிந்தா கோவிந்தா...
பல களேபரங்களுக்கு மத்தியில் வெளிவந்த ஜக்குபாயும் பெரிதாக சோபிக்கவில்லை...இதை தவிர ஸ்ரீகாந்தின் ரசிக்கும் சீமானே,பரத்தின் தம்பிக்கு எந்த ஊரு,புதுமுகங்களின் மாத்தியோசி,மற்றும் மேல் குறிப்பிட்ட லிஸ்டில் இல்லாத ஏனைய படங்களும் தோல்வியையே தழுவிக்கொண்டன..
மேலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ட்படுத்தியுள்ள ராவணா மற்றும் ஏந்திரன் ஆகிய திரைப்படங்கள் இனிமேல்தான் வெளிவர உள்ளன..பொறுத்திருந்து பார்ப்போம் இனிவரும் படங்களாவது நன்றாக ஓடுகின்றனவா என்று?இதுவரை வந்த 49 படங்களில் பத்துக்கும் குறைவான படங்களே வெற்றிபெட்டுள்ளன..எப்போது ஹீரோக்களுக்காக கதை செய்வது நிறுத்தப்படுகிறதோ அப்போதுதான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு விலகும்..
wrong data.. sir.. கேபிள் சங்கரின் ரிப்போர்டை பார்க்கவும்
ReplyDelete