Search This Blog

Saturday, June 12, 2010

பரிதாப இங்கிலாந்தும் ,அதிர்ஷ்டகார அமெரிக்காவும்...

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடர் ஜூன் 11ம் தேதி ஆரம்பமாகியது எல்லோருக்கும் தெரியும்..இன்று C பிரிவில் இங்கிலாந்திற்கும் அமெரிகாவிட்கும் இடையில் முதல் போட்டி ஆரம்பமானது...கால்பந்தாட்டத்தை
வேதமாக நினைக்கும் இங்கிலாந்துக்கும்,கால்பந்தாட்டம் பெரிதும் விளயாடப்படாத அமெரிகாவிட்கும் இடையே நடைபெற்ற இன்றைய போட்டி மிகவும் சுவாரசியமாக இருந்தது..போட்டி ஆரம்பமாகுமுன்பே அமெரிக்காவை காட்டிலும் மிகப்பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியே வெல்லும் என பரவலாக எதிர்வு கூறப்பட்டது....போட்டி ஆரம்பமாகி நாலு நிமிடங்களிலேயே இங்கிலாந்து அணி கப்டன் ஸ்டீவன் ஜெராட் அசத்தலான ஒரு கோலை போட்டு இங்கிலாந்தின் ஆதிக்கத்தை ஆரம்பித்தார்.....




ஆரம்பத்திலேயே அடி வாங்கிய அமெரிக்க அணி மும்முரம்மாக ஒரு கோலை போடும் முயற்சியில் இறங்கியிருந்தனர்...ஆனாலும் இங்கிலாந்தின் தடுப்பாட்டத்தின் மூலம் அவர்களின் முயற்சி கை கூடவில்லை..
போட்டியின் நாற்பதாவது நிமிடத்தில் இங்கிலாந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது...அமெரிக்க வீரர் கிளின்ட் தேம்ப்ஸ்கி இங்கிலாந்து கோல் கீப்பர் ராபர்ட் கிரீனை நோக்கி பந்தை அடிக்கிறார்...மிகவும் மெதுவான அடி...பந்து மிதமான வேகத்துடன் கிறீனை நோக்கி செல்கிறது...அவரும் லாவகமாக பந்தை பிடிக்கிறார்..கையில் பட்ட பந்து மெதுவாக நழுவி கிறீனை கடந்து கோல் போஸ்ட்டை தண்டி செல்கிறது...கிறீனும் படாத பாடு பட்டு பாய்ந்து பந்தை பிடிக்க முயல்கிறார்...ஆனாலும் பந்து உள்ளே சென்று அமரிகாவிட்கு ஒரு கோலாக மாறுகிறது.....மிகவும் அனுபவம் வாய்ந்த கோல் கீப்பரான கிரீன் பந்தை நழுவவிட்டதை யாரும் ஏதிர்பாக்கவில்லை...போட்டியில் கமெண்ட்ரி சொல்ல்வோர் சுமார் பத்து நிமிடமாக கிறீனை காய்ச்சி எடுத்து விட்டனர்..

அதன் பிறகு இரண்டு அணிகளும் வெற்றி கோலை பெற கடுமையாக முயற்சித்தன...அதன் விளைவு இரு அணிகளுக்கும் தலா மூன்று மஞ்சள் அட்டைகள் கிடைத்தன....விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டி இறுதியில் சமநிலையில் நிறைவு பெற்றது..வெல்ல வேண்டிய போட்டியை அநியாயமாக டிரா செய்து விட்டார்களே என்று கடுப்புடன் இங்கிலாந்து ரசிகர்களும்,தோல்வியில் இருந்து தங்கள் அணியை காப்பாற்றிய ராபர்ட் கிரீனுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டு அமெரிக்க ரசிகர்களும் மைதானத்தை விட்டு வெளியேறினர்...

சரி விடுங்கப்பா பங்காளி சண்டையில் இதெல்லாம் சகஜம்....

No comments:

Post a Comment