எல்லோருக்கும் வணக்கம்....இது உங்கள் குஜய் டிவியின் கட்டிங் வித் கண்ணாயிரம்..புத்தம் புது நகைச்சுவை நிகழ்ச்சி....
என்பேரு கட்டிங் கண்ணாயிரம்...நான் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போறேன்..என்ன பேரே வித்தியாசமாக இருக்கு எண்டு பாக்கிறிங்களா??..மணிக்கொரு குவாட்டர் அடிப்பதால் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து வைச்ச அடைமொழிதான் கட்டிங் கண்ணாயிரம்....சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்...
இன்றைக்கு நிகழ்ச்சியில் என்னோடு சேர்ந்து கட்டிங் அடிக்க மூன்று கெஸ்ட் வந்திருக்காங்க...வெல்கம் மிஸ்டர் விஜய்,கப்டன் அண்ட் டி.ஆர்....
(முதலாவதாக விஜய் உள்ளே வருகிறார்.....)
விஜய்- "அண்ணா வணக்கமுங்கன்னா".....
கட்டிங் கண்ணாயிரம்-வாங்க விஜய் சார் உக்காருங்க....நிகழ்சிக்கு வந்ததுக்கு நன்றி....என்ன சாப்பிடுரிங்க...ஓல்ட் மாங்...கிங் பிஷர்..கல்யாணி....
விஜய்- "சாரிங்க...மோர்னிங் பத்தில இருந்து பதிநொண்டு வரை நான் கட்டிங் அடிகிறதில்லை..."
கட்டிங் கண்ணாயிரம்-சரி அடுத்ததாக கப்டன் உள்ளவரட்டும்....வணக்கம் கப்டன்...
கப்டன்-ஆங்...வணக்கம்..இப்பதான் பாகிஸ்தான் தீவிரவாதி வாசிம்கானை உள்ள தூக்கி போட்டு நாலு மிதி மிதிச்சிட்டு வாறன்...
கட்டிங் கண்ணாயிரம்-உக்காருங்க கப்டன்..என்ன சாபிடுரிங்க...ஸ்காட்ச்..பீர்???....
கப்டன்- ..."என்னது காய்சினதா?..."
கட்டிங் கண்ணாயிரம்-சாரி கப்டன்...இங்க காய்சினதெல்லாம் இல்ல...ஸ்காட்ச் மட்டும் தான் இருக்கு....(கடைசியாக டி.ஆர் உள்ளே வருகிறார்..)
டி.ஆர்-டாஸ்மாக்குக்கு போனா கட்டிங்....பான்ட் வாங்கினா பிட்டிங்...சிம்பு படமெல்லாம் ஹிட்டிங்......
கட்டிங் கண்ணாயிரம்-வணக்கம் டி.ஆர் சார்...உக்காருங்க...என்ன சாப்பிடுரிங்க...
டி.ஆர்-ஓல்ட் மாங்கில ஒரு பெக்கு...கிங் பிசரில ஒரு பெக்கு...கல்யாணில ஒரு பெக்கு....மூணையும் மிக்ஸ் பண்ணி ஒரு கிளாஸ்.....
கட்டிங் கண்ணாயிரம்-சரி மூன்று பேரும் உள்ளே வந்திட்டாங்க..இனி நிகழ்ச்சியை ஆரம்பிப்போம்....நிகழ்ச்சியில் முதலாவதாக ஒரு நேயர் போன் செய்கிறார்..
நேயர்-விஜய் சார்கிட்ட ஒரு கேள்வி...சமீப காலமாக உங்கள் படங்களை பற்றி எல்லோரும் பிரிச்சு மேய்கிராங்களே,,,இதை பற்றி உங்கள் கருது என்ன..
விஜய்- ..இப்ப இண்டஸ்ட்ரி எண்டு பார்த்தா நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்..இத அந்த ஆண்டவனால் கூட மாத்த முடியாது....ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் படம் என்றால் மாசாலா அதிகமாக தான் இருக்கும்...
(விஜய் போனில் கதைதுக்கொண்டிருக்கும் போது மறுபுறத்தில் கப்டனும் டி.ஆரும் எதோ கிசுகிசுதுகொண்டிருன்தனர்.. மசாலா அதிகமாக இருந்தாலும் பரவாய் இல்ல..படம் முழு மொக்கயாவெல்ல இருக்கு)
விஜய்-(உரத்த குரலில்)....சைலென்ஸ்... இங்க பேசிக்கிட்டு இருக்கிறது தெரியலையா...
(சிறிது நேர நிசப்ததிட்க்கு பின்பு தொலை பேசி நேயர் இரண்டாவது கேள்வியை தொடர்கிறார்...)
நேயர்-படத்தை விடுங்க சார்,உங்க நடிப்பை பத்தி பேசுவோம்...நானும் பாக்கிறேன்,உங்கட முதல் படத்தில இருந்து சுறாவரை உங்க நடிப்பில சரி பாடி லான்கிவிஜில சரி ஒரு வித்தியாசமும் இல்லையே?..
விஜய்-ஏன் இல்லை....குருவி படத்தில பில்டிங்கில இருந்து பாலத்துக்கு பாஞ்சிருக்கேன்...வேட்டைக்காரன் படத்தில அருவில இருந்து குதிச்சிருக்கேன்...கடைசியா சுறாவில கடலுக்குள்ள இருந்து டைவ் அடிச்சிருக்கேன்....படத்துக்கு படம் ரொம்ப வரைடியா நடிச்சிருக்கேன்..
நேயர்-இந்த சுறா படம் கதை டிஸ்கசனில் நீங்க என்ன கண்டிஷனில இருந்தீங்க?
விஜய்-வேட்டைக்காரன் பட முன்னூறாவது நாள் வெற்றி விழா பார்டிக்கு போயிருந்தேன்..அங்க ராவா ரெண்டு பெக் அடிச்சதில ஒரே மப்பு....காலைல ஒரே தலை வலி...தலை வலியோட தான் கதை கேட்டேன்...தலை வலியோட கதை கேட்டே படம் மாபெரும் வெற்றி...தலை வலி மட்டும் இல்லாட்டி சூப்பர் டூப்பர் ஹிட்டுதான்....
(நிலைமை விபரீதமாவதை உணர்ந்த கட்டிங் கண்ணாயிரம் நைசாக போனை கட் செய்தார்...)
கட்டிங் கண்ணாயிரம்-ஆம் அந்த நேயர் போனை வைத்து விட்டார்....சரி...டி.ஆர் சார்..உங்க அடுத்த படத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்க...
டி.ஆர்-என்னோட அடுத்த படம் முழுக்க முழுக்க மென்மையான ஒரு காதல் கதை....விண்ணை தாண்டி வருவாயா பகுதி ரெண்டு.....முதல்ல சிம்புவை வைச்சு தான் எடுக்க இருந்தேன்...ஆனா அவன் ஷூடிங்கில பிசியா இருக்கிறபடியா நானே நடிச்சு இயக்கலாம் என்று முடிவுசெய்திட்டன்..சிம்பு வேற சொன்னான்.."இளமை துள்ளளோட இருக்கிற நீங்க தான் நடிக்கவேணும்...அப்பா இந்த படத்துக்கு நீங்க தான் இன்னும் பொருத்தமாய் இருபிங்க..."
கட்டிங் கண்ணாயிரம்- ...கிழிஞ்சுது போ....
டி.ஆர்-என்ன கிழிஞ்சுது?
கட்டிங் கண்ணாயிரம்-இல்ல...கையில இருந்த பேப்பர்...
விஜய்- யாரு ஹீரோயின்?...
டி.ஆர்-வேற யாரு....மும்தாஜ்தான்...எப்படியும் இந்த படம் மெகா ஹிட்தான்...வீரசாமிய மிஞ்சிடும்.....
கட்டிங் கண்ணாயிரம்-சரி..இப்ப இரண்டாவது அழைப்பு வருகிறது.....ஹலோ...
நேயர்-கப்டன் கிட்ட ஒரு கேள்வி....சார்..உங்களுக்கு கப்டன் என்று எப்படி அடைமொழி வந்தது?...
கப்டன்-அதுவா..நான் நடிக்க வரமுதல் எங்க ஊர் கிட்டிபுள் டீம் கப்டனா இருந்தனான்....அதால தான் எல்லோரும் என்னை செல்லமாய் கப்டன் கப்டன் என்று கூபிடுகினும்....
கட்டிங் கண்ணாயிரம்- ..(பேசாம கிட்டிபுள் டீம் காப்டனாகவே இருந்திருக்கலாம் )
நேயர்-ஓகே...இது ரெண்டாவது கேள்வி சார்...கிட்டத்தட்ட பத்து வருசமாக வாசிம் கானை பிடிக்க திரியிரிங்களே...எப்ப பிடிக்க போறிங்க?
கப்டன்-நானும் எவ்வளவோ ட்ரை பண்ணுறன்..ஆனா மேலிடத்து சப்போர்டை வைத்து எஸ்கேப் ஆகிடுறான்...முதல்ல என்னை சுத்தி இருக்கிற கருப்பு ஆடுகளை பிடிக்கோணும்..தமிழ் நாட்டில ஒரு லட்சம் கான்ஸ்டபிள்,இருபத்திறேண்டாயிரம் சப் இன்ஸ்பெக்ட்டர்...(நேயர் கடுப்பாகி அய்யா சாமி தெரியாம கேட்டிட்டான் என்று போனை அடித்து வைத்தார்)
கட்டிங் கண்ணாயிரம்-சரி இப்ப முக்கியமான விஷயத்துக்கு வருவோம்....உங்கட கட்டிங் அடிக்கிற பழக்கத்தை பத்தி சொல்லுங்க...விஜய் சார் நீங்க ஆரம்பியுங்க....
விஜய்-பொதுவா நான் கட்டிங் அடிகிறதில்ல..ஆனா இப்ப ஒரு ரெண்டு வருசமா என் படம் ரிலீஸ் ஆகி ரிசல்ட் கேட்டவுடன் டாஸ்மாக் தான்...எல்லாம் பட வெற்றிய கொண்டாடத்தான்..(கப்டன் மனசுக்குள்ள..."இத நாங்க நம்பணும்...")..கடைசியா சுறா பட வெற்றி ரிசல்டை கேட்டு அடிச்ச தண்ணீல மப்பு தெளிய மூன்று நாள் ஆச்சு....
கட்டிங் கண்ணாயிரம்-அடுத்து....கப்டன் நீங்க சொல்லுங்க..
கப்டன்-விஜய் மாதிரி நானும் கட்டிங் அடிகிறதில்லை...அப்பப்போ டைரக்டர் கேட்டா மட்டும்...
விஜய்-அதென்ன டைரக்டர் கேட்டா மட்டும்?
கப்டன்-பொதுவா என் படத்தில பாத்திங்கலண்டா நான் கோவப்படும் பொது என் ரெண்டு கண்ணும் ரெட் சிக்னல் லைட் மாதிரி தெரியும்..ஆரம்பத்தில கிளிசரின் ட்ரை பண்ணி பாத்தோம்,சரியா வரல...பிறகு தான் எனக்கு ஒரு ஐடியா வந்திச்சு...ஒரு குவாடரை எடுத்து ராவ அடிச்சிட்டு குப்பற படுத்து அடுத்த நாள் எழும்பிபார்தேன்...கண்ணு ரெண்டும் சும்மா சூரியன் மாதிரி தக தக என்று தெரிஞ்சிச்சு....
கட்டிங் கண்ணாயிரம்-அடுத்து டி.ஆர்..நீங்க சொல்லுங்க..
டி.ஆர்-அது ஒரு சோக கதை சார்...நயன் தாரா சிம்புவ கழட்டி விட்ட பிறகு எங்க குடும்பத்தில நிம்மதியே போச்சு....எங்க சிம்பு தண்ணி அடிச்சு கெட்டு போயிருவானோ என்று பயந்து அவனுக்கு பதிலா நான் கட்டிங் அடிசுகிட்டிருக்கேன்...
கட்டிங் கண்ணாயிரம்-போதும் சார்..போதும்....இதோ ஒரு நேயரின் அழைப்பு...
நேயர்-வணக்கம் கப்டன் சார்...உங்கட அடுத்த படத்தை பற்றி சொல்லுங்க..
கப்டன்-என்னோட அடுத்த படமும் தீவிரவாதிய பிடிக்கிற கதை தான்...படத்திட பெயர் வாசிம் கான்.
நேயர்-என்னது...பெயரே வாசிம் கானா?..கோவிந்தா...கோவிந்தா...
கட்டிங் கண்ணாயிரம்-சரி அந்த நேயர் படத்தின் ரிசல்டை கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.....
கட்டிங் கண்ணாயிரம்-நிகழ்ச்சியின் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டோம்..இறுதியாக ஒரு வி.ஐ.பி இப்போது போன் பண்ணி பேசுவார்..
டிரிங்...டிரிங்....
கட்டிங் கண்ணாயிரம்-ஹலோ....வணக்கம் பேரரசு சார்.....தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரமாகிய நீங்கள் எங்களோடா கதைகிறது எங்களுக்கு ரொம்ப பெருமையாய் இருக்கு....
பேரரசு-வணக்கம் விஜய்..கப்டன் அண்ட் டி.ஆர் சார்....
மூவரும் கோரசாக வணக்கம் பேரரசு சார்...
கட்டிங் கண்ணாயிரம்-பேரரசு சார்...உங்கட நெக்ஸ்ட் பிராஜெக்டை பத்தி கொஞ்சம் சொல்லுங்க...
பேரரசு-நான் ஒரு அருமையான கதையாய் ரெடி பண்ணி வைச்சுக்கொண்டு,கதைக்கு பொருத்தமான ஹீரோக்களை தேடிகொண்டிருந்தேன்...என் தேடல் வீண்போகவில்லை...
கட்டிங் கண்ணாயிரம்-என்ன சொல்லறிங்க பேரரசு சார்?
பேரரசு-விஜய்,கப்டன் அண்ட் டி.ஆர்..மூவரையும் ஒரே படத்தில் நடிக்க வைத்து இயக்க போறேன்...மூவருக்கும் சம்மதமா?
மூவரும் கோரசாக..உங்க படத்தில நடிக்க நாங்க கொடுத்து வைதிருக்கவேனும்...
டி.ஆர்-படத்திட பெயர் என்ன சார்?
பேரரசு-மூன்று முட்டாள்கள்....நான் தமிழ்ல எடுக்க முதல் என்கதையை சுட்டு இந்தியில் த்ரீ இடியட்ஸ் என்று ரிலீஸ் பண்னிட்டாங்க..
கட்டிங் கண்ணாயிரம்-பொருத்தமான தலைப்பு...
கட்டிங் கண்ணாயிரம்-சரி நேயர்களே...இத்துடன் கட்டிங் வித் கண்ணாயிரம் நிகழ்ச்சி நிறைவடைகிறது...மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம்...
உங்கள் குஜய் டிவியின் கட்டிங் வித் கண்ணாயிரம்....ஒளி பரப்புவது நாங்கள்...ஆப் செய்வது நீங்கள்....
மேல்குறிப்பிட யாவும் கற்பனையே..எந்த ஒரு தனி நபரையோ...நிறுவனத்தையோ குறிப்பிடுவன அல்ல....
சிரிச்சு மாளல... சூப்பருங்கோ ..
ReplyDeleteவலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
ReplyDelete