காலம் காலமாக மாறாத தமிழ் சினிமா.....
1. ஹீரோவுக்காக ரூம் போட்டு எழுதப்படும் கதை.
2.தொண்டை கிழிய சம்பந்தம் இல்லாமல் கத்தும் வில்லன்கள்.
3.90 kg வில்லனை ஒரே உதையில் பத்து அடி தூரம் பறக்க செய்து transformer இல மோத செய்யும் ஹீரோவின் பவர்.(காமடி என்னவென்றால் வில்லன் எழும்பி திரும்பி அடிப்பது.)
4. நாலு நிமிட கேப் இல 40 costume இல் duet பாடும் ஹீரோ அண்ட் ஹீரோஇன்
5. கட்ட பஞ்சயதிட்காக தண்ணி ஊத்தி வளர்க்கப்படும் கிராமத்து ஆல மரங்கள்.
6. வெள்ளை சேலை,கொலுசு சத்தம்,தூரத்தில் கேட்கும் நாயின் ஊளை சத்தம்,அநியாயத்துக்கு ஒரு பாடல்....காலம் காலமாக தமிழ் பேய் படத்தின் trademarks......
7. முழு ஊரையே ஆட்டி படைக்கும் வில்லன்கள்.....போலீஸ் ஸ்டேஷன் இல போலீஸ் ஐ வெட்டும் வில்லன்..(போலீஸ் என்ன காதில் பூவா சுற்றி உள்ளனர்?)
8. ஹீரோயினுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் கரெக்ட் ஆக ஆஜர் ஆகும் ஹீரோகள்..(ஹெரோஇனை GPS வைத்து track பண்ணுவார்களோ?)
9. சீரியஸ் ஆன காட்சிகளை கூட காமடி ஆக்கும் ஹீரோவின் பன்ச் டாயலோகுகள்.
10.CIA அண்ட் FBI கூட்டாக தேடினாலும் கிடைக்காத திரைகதை.
11.பள்ளம் தோண்டி கமரா வைத்து ஹீரோவின் பாதத்தை காட்டும் பில்டப்கள்....
12.வில்லன் டீ கடைக்கு போகும்போது கூட வில்லன் காருக்கு முன்னால் பத்து டாட்டா சுமோ,பின்னால் பத்து ஜிப்சி ஜீப்.....
13.ஹீரோ அறிமுக பாடல் அலப்பறைகள்.....
14.அம்மா செண்டிமெண்ட்,அக்கா செண்டிமெண்ட்,ஆச்சி செண்டிமெண்ட்,ஒண்ணு விட்ட சித்தப்பா செண்டிமெண்ட் என்று மணிகணக்கில் அறுக்கும் மொக்கைகள்
அருமை... அருமை...
ReplyDeletesupparrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDelete