Search This Blog

Saturday, June 19, 2010

ராவணன்- திரை விமர்சனம்..


புதுமையான சிந்தனைகள் மூலம் சிறந்த படைப்புக்களை தந்து தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்தவர்களில் இயக்குனர் மணிரத்னமும் ஒருவர்..இந்த கலை சிற்பியின் இயக்கத்தில் வெளிவந்த நவீன ராமாயணம் தான் இந்த ராவணன்..சீயான் விக்ரம்,ஐஸ்வர்யா ராய்,பிரிதிவிராஜ்,பிரபு,பிரியாமணி,கார்த்திக் என ஒரு நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில் வெளிவந்த ராவணனின் கதை என்று பார்ப்போமானால்,காட்டில் வாழும் தாழ்த்த பட்ட இன மக்களின் விடுதலை வீரனாக மக்களால் போற்றப்படும் வீரய்யா எனும் வீராவை பிடிக்க போலீஸ் அதிகாரியான எஸ்.பி தேவ் பிரகாஷ், மனைவி ராகினியுடன் வீராவின் ஊருக்கு வருகிறார்..வீராவின் தங்கை வெண்ணிலா கல்யாணத்தில் புகுந்து வீராவை சுடுகிறார் தேவ் பிரகாஷ்..வீரா தப்பி செல்ல அந்த கடுப்பில் மணகோலத்தில் இருந்த வெண்ணிலாவை இழுத்து சென்று போலீஸ் நிலையத்திலேயே வைத்து கற்பழித்து விடுகின்றனர் சில போலிஸ் அதிகாரிகள்..இதை வீராவிடம் கூறிவிட்டு தற்கொலை செய்கிறாள் வெண்ணிலா..வெண்ணிலா மரணத்திற்கு பழிவாங்கும் முகமாக தேவ் பிரகாஷ் மனைவி ராகினியை கடத்திவிடுகிறான் வீரா...ராகினி தப்பித்தாளா?வீராவின் கதி என்ன?இந்த கேள்விகளுக்கான விடையே மீத கதை..


வீராவாக விக்ரமும்,ராகினியாக ஐஸ்வர்யா ராயும்,தேவ் பிரகாஷாக பிரிதிவிராஜும்,வெண்ணிலாவாக ப்ரியாமணியும் நடித்துள்ளனர்.. வீராவாக விக்ரம் வாழ்ந்தே உள்ளார் என கூறலாம்..பேச்சு,பாடி லாங்குவிஜ் கன கச்சிதம்..கோபம்,காதல்,சோகம்,வெறுப்பு என பல்வேறுபட்ட உணர்சிகளை தத்துரூபமாக வெளிகொனர்ந்துள்ளார்.சில காட்சிகளில் கண்களாலேயே பேசி மிரட்டுகிறார் மனுஷன்....ராகினியாக ஐஸ்வர்யா அற்புதமாக நடித்துள்ளார்...இன்னமும் மாறாத அதே அழகு..அந்த அழகின் ரகசியம் என்னவோ...பல காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா..அடுத்து ஆங்கில பட ஹீரோக்களை போல கம்பீரமாக அறிமுகமாகிறார் பிரிதிவிராஜ்...கூர்மையான பார்வை,விஷமம் கலந்த சிரிப்புடன் வலம்வருகிறார்..நல்லவரா?கெட்டவரா?என்று ரசிகர்களை குழப்பும் வகையில் அமைத்துள்ளது இவரது பாத்திரம்....வீராவை பிடிக்க போகும்போது காட்டும் ஆக்ரோஷம்,மனைவியை பிரிந்த போது காட்டும் தவிப்பு என நடிப்பில் நன்கு ஸ்கோர் பண்ணுகிறார் பிரிதிவிராஜ்..கொஞ்சநேரம் திரையில் வந்தாலும் வெண்ணிலாவாக வரும் ப்ரியாமணி எல்லோருடைய மனதிலும் நிற்கிறார்..இவர்களை தவிர விக்ரமின் அண்ணன் பாத்திரத்தில் வரும் பிரபுவும்,பாரெஸ்ட் அதிகாரியாக வரும் கார்த்திக்கும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.."நித்தியானந்தா"புகழ் ரஞ்சிதா வரும் காட்சிகளில் தியேட்டரில் கைதட்டல் பலம்...

படத்தின் இன்னுமொரு பலம் ஏ.ஆர்.ரஹ்மான்..ரஹ்மானின் இசையில் உசிரே போகுதே பாடல் இனிமை..பாடல்கள் அனைத்தும் படத்தின் கதையுடன் இணைந்தே வருவதால் ஏதோ ஒரு வித்தியாசம் உணரப்படுகிறது...பின்னணி இசையில் மிரட்டுகிறார் ரஹ்மான்..சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டனின் ஒளிப்பதிவு மிகப்பிரமாண்டம்..ஐஸ்வர்யா ராய் விக்ரம் க்ளோசப் ஷோட்கள் அருமை...கிளைமாக்ஸ் சண்டைகாட்சியில் ஒளிப்பதிவு வாயை பிளக்க வைக்கின்றது...இவை அத்தனையும் ஒருங்கிணைத்த ஆசான் மணிரத்தினம்....சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்கையை பிரதிபலிப்பது போன்று அமைகப்பட்டிருக்கிறது வீரா கதாபாத்திரம்..வீரப்பனின் வாழ்கையையும் ராமாயணத்தையும் கலந்து ஒரு நவீன இதிகாசத்தை படைக்க மணிரதினத்தால் தான் முடியும்..இந்த நவீன ராமாயத்தில் அனுமார் வேடத்தில் கார்த்தி வருகிறார் என்பதற்காக அவரை மரத்திற்கு மரம் தாவ விட்டிருப்பது கொஞ்சம் ஓவர்..படத்தில் சில குறைகள் இருந்தாலும் அவை கண்ணனுக்கு பெரிதாக தெரியாதபடி மறைக்கிறது திரைக்கதை..முன்பாதியிலும் பார்க்க பின்பாதி திரைக்கதை கொஞ்சம் வேகம் குறைவுதான்..ஆக மொத்தம் ஒரு ராபின் ஹூட் பிளஸ் ராமாயணம் ஹைப்ரிட் தான் இந்த ராவணன்...

1 comment:

  1. so Seetha slept with other guys too? (as per story Ramayan also not real story) is in it

    ReplyDelete