2ஆம் உலக போரின் பின்பு 1945 முதல் 1991வரை ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளினிடையே இடம்பெற்ற பொருளாதார, அரசியல், தொழில்நுட்ப, இராணுவ போட்டி நிலைமையே பனிப்போர் என அழைக்கப்பட்டது....இப்போர் பற்றிய ஒரு சிறு அலசலே இந்த தொடர்.......
2ஆம் உலக போரிலே ரஷ்யாவும் அமெரிக்காவும் நேச நாடுகளாக தான் முதலில் இருந்தன.ஹிட்லரின் மரணத்திற்கு பின்பும் இறுமாப்புடன் துள்ளிகொண்டிருந்த ஜப்பானை யாரும் கற்பனை கூட பண்ணி பாத்திராத வகையில் உலகின் அதி சக்தி வாய்ந்த ஆயுதத்தை கொண்டு அடக்கியது அமெரிக்கா...ஆம் 1945 ஆண்டு உலகின் முதலாவது அணுகுண்டு வெடிப்பு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இடம்பெற்றது...நொடிபொழுதில் நகரமே சுடுகாடாக மாறி லட்ச கணக்கானோர் மாண்டனர்..ராணுவ பலத்தில் ரசியாவை விட சற்று மேலோங்கி இருந்த அமெரிக்கா அனுகுண்டின் மூலம் ஒரே இரவில் உலகின் அதி சக்தி வாய்ந்த இராணுவமாக மாறியது.2ஆம் உலக போரின் முடிவு உலகின் முதலாவது வல்லரசின் பிறபிட்டிக்கு வித்திட்டது எனலாம்....
அமெரிக்கா வல்லரசானதை தொடர்ந்து அமேரிக்க ரசிய உறவில் விரிசல்கள் விழ தொடங்கின..இரு நாடுகளுக்குமிடையில் ஒருவித ஈகோ தோன்றி ஒரு பெரும் நிழல் போர் ஆரம்பமானது.சுமார் 45 ஆண்டுகள் நீடித்த இந்த போர் மிகுந்த சுவாரசியங்களையும்,ஆச்சரியங்களையும் எதிர் பாரத பல திருப்பங்களையும் கொண்டது...கிட்டத்தட்ட 3ஆம் உலகபோரை ஆரம்பிக்க இருந்த பனிப்போர் மூலம் தான் உலகின் மிகப்பெரிய தொழிநுட்ப புரட்சிகளில் ஒன்று உருவானதென்பது பலபேருக்கு தெரியாத ஒன்று.....
போர் தொடரும்......
will the next part come ?
ReplyDelete