உலகளாவிய ரீதியில் வசூலில் சக்கை போடு போட்ட படங்களில் முதல் பத்து இடங்களை பெற்ற படங்களை பற்றிய சிறு தொகுப்பே இந்த பதிவு.....
இதுவரை வெளிவந்த படங்களிலேயே அதி கூடிய வசூலை பெற்ற திரைப்படமாக அவதார் விளங்குகின்றது..2009ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் இதுவரை சுமார் 2.67 பில்லியன் டாலர்களை உலகம் முழுவதும் வசூலித்துள்ளது...237 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் வெளிவந்த இந்த படம் வட அமெரிக்காவில் மட்டும் 737மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளதுஇந்த படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கமேரூன் ஆவார்..
இரண்டாம் இடத்தில உள்ள படம் டைடானிக் ஆகும்....இதுவும் ஜேம்ஸ் கமேரூன் இயக்கத்தில் வெளிவந்த படமாகும்...200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் 1997ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் வசூல் 1.84பில்லியன் டாலர்கள் ஆகும்..வட அமெரிக்காவில் மட்டும் 600 மில்லியன் டாலர் வசூல் ஆகிஉள்ளது...
மூன்றாவது இடத்தில் பீட்டர் ஜாக்சனின் இயக்கத்தில் 2003 ம் ஆண்டு வெளிவந்த லார்ட் ஒப் தி ரிங்க்ஸ்- ரிடர்ன் ஒப் தி கிங்க்ஸ் என்ற திரைப்படமாகும்...உலகம் முழுக்க 1.12 பில்லியன் டாலர்களை வசூலித்த இந்த திரை படத்தின் பட்ஜெட் 94 மில்லியன் டாலர்களாகும்....வட அமெரிகாவில் மட்டும் இந்த படம் 377 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது....
நாலாம் இடத்தில் இருப்பது 2006 ம் ஆண்டு வெளிவந்த தி பைரட்ஸ் ஒப் தி கரிபியன்- டேட் மான்ஸ் செஸ்ட் என்ற திரை படமாகும்..225 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் Gore Verbinski ன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 1.07 பில்லியன் டாலர்களை வசூலித்து...வட அமெரிகாவில் மட்டும் இதன் வசூல் 423 மில்லியன் டாலர்களாகும்...
ஐந்தாம் இடத்தில் இருப்பது கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளிவந்த தி டார்க் நைட் எனும் படமாகும்.. 185 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூலித்த தொகை 1பில்லியன் டாலர்களாகும்....இதில் வட அமெரிகாவின் வசூல் 533 மில்லியன் டாலர்களாகும்..
க்றிஸ் கொலம்பஸின் இயக்கத்தில் 2001 ம் ஆண்டு வெளிவந்த ஹர்ரி போட்டர் அண்ட் தி சொசெறேர்ஸ் ஸ்டோன் எனும் படம் ஆறாம் இடத்தில் உள்ளது...125 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் வெளிவந்த இந்த படத்தின் வசூல் 974 மில்லியன் டாலர்களாகும்...வட அமெரிகாவில் மட்டும் இதன் வசூல் 317 மில்லியன் டாலர்களாகும்..
ஏழாம் இடத்தில் பைரேட்ஸ் ஒப் தி கரிபியன்ஸ்-தி வேர்ல்ட்ஸ் எண்ட் என்ற படம் உள்ளது..2007ம் ஆண்டு Gore Verbinski ன் இயக்கத்தில் 300 மில்லியன் டாலர் செலவில் வெளிவந்த இந்த படம் வசூலித்த தொகை 960 மில்லியன் டாலர்களாகும்...வட அமெரிகாவில் மட்டும் 309 மில்லியன் டாலர் வசூல்..
ஏட்டாம் இடத்தில் ஹரி போட்டர் அண்ட் தி ஆர்டர் ஒப் தி பீனிக்ஸ் எனும் திரை படம் 938 மில்லியன் டாலர் வசூலுடன் உள்ளது...2007ம் அண்டு 150 மில்லியன் டொலர் செலவில் டேவிட் யேட்ஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தின் வட அமெரிக்க வசூல் மட்டும் 292 மில்லியன் டொலர்களாகும்...
ஒன்பதாம் இடத்தில் ஹரி போட்டர் அண்ட் தி ஹாப் ப்ளட் பிரின்ஸ் எனும் திரை படம் உள்ளது..250 மில்லியன் டொலர் செலவில் வெளிவந்த இந்த படத்தின் வசூல் 933 மில்லியன் டொலர்களாகும்...2009ம் ஆண்டு டேவிட் யேட்ஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் வட அமெரிக்காவில் 301மில்லியன் டொலர் வசூலை பெற்றது..
பத்தாம் இடத்தில் தி லோர்ட் ஒப் தி ரிங்க்ஸ்-தி டூ டவர்ஸ் எனும் படம் உள்ளது...பீட்டர் ஜாக்சனின் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் வசூல் 925 மில்லியன் டொலர்களாகும்..வட அமெரிக்காவில் மட்டும் 341 மில்லியன் டொலர் வசூலித்த இந்த படம் 94 மில்லியன் டொலர் செலவில் தயாரிக்க பட்டது
உங்களது அருமையான தொகுப்புக்கு எனது வாழ்த்துக்கள்,
ReplyDeletethanks bro....
ReplyDeleteikade chuudu
ReplyDelete