Search This Blog

Thursday, March 11, 2010

ஆன்மிக வியாபாரிகள்........

ஆன்மிகம் என்பது மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஒரு பாலமாக தொன்று தொட்டு விளங்கி வருகின்றது....தமிழ் கலாச்சாரத்துடனும் தமிழ் மக்களுடனும் பின்னி பிணைந்த ஒரு பிரிக்க முடியாத சக்தியாக ஆன்மிகம் விளங்குகிறது...உயிரிலும் மேலாக மதிக்கப்பட்டு வந்த ஆன்மிகத்தின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமானது....அகத்தியர், வசிட்டர்,விசுவாமித்திரர் போன்ற புண்ணிய ரிஷிகள் வாழ்ந்த இந்த பூமியில் இன்று பிரேமனந்தகளும்,நித்தியானந்தகளும் பெருகி கட்டுபாடின்றி ஆட்சி செய்கின்றனர்.இன்றைய திகதியில் மிகவும் இலாபகரமான தொழில் என்று பார்த்தால் இந்த சாமியார் வேசம்தான்..இந்த சாமியார் வேடம் பூண்டால் ஒரு பைசா முதலீடு இல்லாமல் கோடி கணக்கில் சுருட்டி கொள்ளலாம்..அரசிற்கு வரி கட்ட தேவை இல்லை....எதிர்த்து கேள்வி கேட்க யாருமில்லை.....சம்பளம் இல்லாமல் தொன்று செய்ய அப்பாவி பக்தர்கள் கூட்டம்.......இவை எல்லாம் தான் இன்று போலி சாமிகள் அதாவது ஆன்மிக வியாபாரிகள் பெருக காரணம்.....


துறவி என்ற வார்த்தையின் அர்த்தமே முற்றும் துறந்தவர் என்பதாகும்...மண் ஆசை,பெண் ஆசை பொன் ஆசை அனைத்தையும் துறந்தவன் தான் துறவி....அந்த காலத்திலே துறவிகள் இடுப்பில் கட்டிய துண்டோடு குகைகள்,காடுகள்,மலைகள் போன்ற ஆள் அரவமற்ற இடங்களில் தனிமையில் இறைவனோடு ஒன்றிக்க தவம் புரிந்தனர்...ஐம் புலன்களையும் அடக்கி மனக்கண் மூலம் இறைவனை கண்டார்கள்..அவர்கள் ஆசிரமம் அமைத்ததில்லை,அவர்கள் பின் பக்தர் கூட்டமும் அலைந்ததில்லை..அவர்கள் தாங்கள் இறைவனுடன் ஒன்றிகவே துறவியானர்கள் ஒழிய இறைவனை காட்டுகிறேன் என்று மக்களுக்கு வகுப்பெடுக்கவில்லை....ஆனால் இன்று நிலைமையே தலைகீழ்...இன்றைய ஆன்மீகவாதிகளில் பெரும்பாலானோர் நாங்களே இறைவனின் தூதுவர்,வாருங்கள் இறைவனை காட்டுகிறேன் என்று தங்களை தாங்களே விளம்பரபடுத்தி கொள்கிறார்கள்....இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் நானே இறைவனின் அவதாரம் என்கின்றனர்.....துறவி என்று சொல்லிக்கொண்டு பலகோடி மதிப்புள்ள ஆசிரமங்களில் வசித்துக்கொண்டு சொகுசு வாகனங்களில் உலா வருகின்றனர்....காவி உடை தரித்து அரசனை விட சொகுசாக வாழும் கேடிகள் இந்த ஆன்மிக வியாபாரிகள்....

கடவுள் இருக்கு என்பவனையும் நம்பலாம்,இல்லை என்பவனையும் நம்பலாம்,ஆனால் நான் தான் கடவுள் என்று சொல்பவனை நம்பவே கூடாது....இது கமல் ஒரு படத்தில் சொல்லும் வசனம்......உயிருடன் இருக்கும் எந்த ஒரு சாமானியனும் கடவுள் ஆக முடியாது....இந்த போலிகளால் முடிந்தது வாயில் இருந்தது லிங்கம் வரவைப்பது மட்டும் தான்..இவர்களால் மரணத்தை வெல்ல முடியுமா?,நேரத்தை நிறுத்த முடியுமா? ஏன் இயற்கை உபாதைகளை தான் கட்டு படுத்த முடியுமா?....ஆன்மீகம் என்பது ஒவொருவரும் சொந்தமாக தேடிக்கொள்ள வேண்டிய விடயம்....எந்த பாதை மூலம் இறைவனை அடையவேண்டும் என்பதை நாங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்....இறைவனுக்கும் மக்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாக இந்த போலிகள் ஏதற்கு?இறைவனை அடைய வழிசொல்லி தருகிறேன் காசு கொடு,தியானம் சொல்லி தருகிறேன் காசு கொடு என்று இவர்கள் கூவுவது அப்படி இருக்கிறது தெரியுமா.....தெருவோரம் நின்று உடம்பை தருகிறேன் காசு கொடு என்று விபசாரம் செய்வதை விட கேவலமாக உள்ளது.....மக்களாகிய நாங்களும் வெக்கமில்லாமல் இந்த ஆன்மிக விபசாரிகளிடம் சென்று வருகிறோம்.....இறைவனை அடைய கட்டணம் செலுத்த தேவை இல்லை...அதற்கு பல வழிகள் உள்ளன....உதாரணமாக துன்பப்படும் ஒருவனுக்கு நீங்கள் உதவி செய்யும் போது அவன் கண்களுக்கு நீங்கள் கடவுளாகவே தெரிவீர்கள்......அன்பே சிவம்...அடுத்தவனை நேசித்தால் எல்லோரும் கடவுள் தான்.


சும்மா இருபவனுக்கு விளம்பரம் கொடுத்து அவனை பெரியவனாக்குவதும் இந்த மீடியாக்கள் தான்,போலி என்று தெரிந்ததும் சேறை வாரி இறைப்பதும் மீடியாக்கள் தான்..ஏனவே மீடியாக்கள் தங்கள் தார்மீக பொறுப்பு உணர்ந்து செயற்பட வேண்டும்.....தங்களை தாங்களே இறைவன் என்று கூறுவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படவேண்டும்....மக்களே தயவே செய்து சிந்தியுங்கள்...ஒருவன் ஒன்றை கூறினால் அதன் உண்மை தன்மையை கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்தியுங்கள்...ஒரு விசயத்தின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைப்பது மிகவும் அபத்தமானது.....நம்பிக்கை என்பது மிகவும் சக்திவாய்ந்தது...தயவு செய்து உங்கள் நம்பிக்கையை இந்த போலிகள் மூலதனமாகுவதட்கு இடமளிக்காதீர்கள்....சாமானியனை கடவுள் ஆக்குவதை விட அறியாமை வேறு எதுவும் இல்லை.....இந்த மாதிரி போலிகளால் உண்மையாகவே இறைவனை அடைய முயற்சி செய்வோருக்கும் கேட்ட பெயர்....இறுதியாக நான் கேட்க விரும்புவது ஒன்றுதான்....இந்த சாமியார்களுக்கு ஆயிரகணக்கில் பணம் செலுத்தி அவர்களின் கால்களை கழுவ துடிக்கும் நீங்கள் உங்கள் வீட்டு கதவை பசியோடு தட்டும் பிச்சைகாரனுக்கு ஒரு ரூபாய் குடுக்க யோசிப்பது ஏன்?.......

No comments:

Post a Comment