Search This Blog

Saturday, March 6, 2010

அவதார்2- பண்டோராவை தண்டி வருவாயா!-2

அவர் ஒரு அவதார புருஷர் சார்...கடந்த வருடம் Arizona zoo இல் ஓர் கொரில்லா குட்டி பிறந்தது சார். மூன்று மதம் கழித்து அதன் அப்பா குரங்கு செத்து போச்சு சார்..அப்பா குரங்கு செத்து போனதில் இருந்து அக் குட்டி சாப்பாடு,தண்ணி எதுவும் வாயில் வைப்பதில்லை.மிருக வைத்தியர்கள் எல்லா வைத்தியமும் செய்து பார்த்தார்கள்...ஒரு முன்னேற்றமும் இல்லை...அம் மருத்துவ குழுவில் ஒரு தமிழரும் இருந்தார்.....அவர் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் காரணமாக அவதார புருஷராகிய T.R நடித்த வீராசாமி படம் பார்க்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது...படத்தை பார்த்ததும் அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது... ஒவொரு முறையும் குட்டிக்கு சாப்பாடு கொடுக்க முதல் வீராசாமி பட ட்ரைலரை போட்டு காட்டினர்...தன் அப்பா தான் ட்ரைலர் இல தெரிகிறார் என நினைத்து குட்டி சாப்பிட ஆரம்பித்தது...இப்போ அந்த Zoo இல் T.R சிலையே இருக்கு என்றல் பாருங்களேன்... அது எல்லாம் சரி அவளவு பெரிய பிசியான நடிகர் என்னைபோல சின்ன டிரெக்டர் இயக்கும் லோ பட்ஜெட் படத்தில் எல்லாம் நடிப்பார?என் படத்தில் அவர் நடிப்பது நான் செய்த பாக்கியம்...அதைபத்தி நீ கவலை படாதே James...ஒபாமாவிடம் பேசி தூது அனுப்புகிறேன் என்றார் பில் ..


சரி கதைக்கு வருவம்....படத்தில ஹீரோவின் குலத்தொழில் குரங்கு வேட்டையாடுவது..ஆனால் அவருக்கு அந்த தொழில் பிடிக்காது....அவருடைய லட்சியம் எல்லாம் தெருகூத்து இயக்குவது.....ஹீரோயின் குடும்பம் சொந்தமாக பெரிய மரம் வைத்துள்ளனர்....அம் மரத்தின் கீழ் கிளையை ஹீரோவிற்கு வாடகைக்கு விடுகின்றனர்...ஹீரோவிற்கு மேல் கிளையில் வசிக்கும் ஹீரோயினை கண்டதும் காதல்....உடனடியாகவே காதலை ஹீரோயினிடம் சொல்கிறார்....ஆரம்பத்தில் மறுக்கும் ஹீரோயின் பின்பு அவரையே காதலிக்கிறார்.... வழக்கம் போல ஹீரோயின் அப்பா மூலம் ஏதிர்ப்பு கிளம்புகிறது...இதனிடையே பிரபல தெருகூத்து இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக சேர்கிறார் ஹீரோ.......நம்ம steve தான் அந்த இயக்குனர்...அடப்பாவி james பண்டோரா முழுக்க என்னை ஒரு பரதேசி ரேஞ்சு இக்கு ஆலயவிடப்போறிய எண்டு steve கேட்க எல்லோரும் சிரிகின்றனர்.......

james என்னை காரணத்துக்காக ஹீரோயின் அப்பா காதலுக்கு நோ சொல்லுகிறார்?....கதையின் படி ஹீரோயின் குடும்பம் பெரிய வால் கோத்திரத்தை சேந்தவர்கள்...ஹீரோ சிறிய வால் கோத்திரத்தை சேந்தவர்.....ஹீரோயின் வலை விட ஹீரோ வால் ஒரு அடி சின்னது......இதனால் பொன்னை கட்டி குடுத்தால் குடும்ப மானம் போய்விடும் எண்டுதான் ஹெரொயிந்ஹ அப்பா காதலுக்கு நோ சொல்லுறார்.....இதை கேட்டதும் பில், ஆஹா என்னை ஒரு சிந்தனை.....காதலுக்கு ஜாதி,மதம்,இனம் மூலம் ஏதிர்ப்பு வருவதை பாத்திருகிறோம் ஆனால் வால் மூலம் ஏதிர்ப்பு வாறது உலக சினிமாவிலே இதுதான் முதல் தடவை.......பில் இந்த படத்துக்கு ஆஸ்கார் கிடைக்கபோர்ரதுக்கு இதுவும் ஒரு கரணம் ......உடனே சியாமளன் குறுக்கிட்டு முக்கிய காரணம் நம்ம T.R தான் என்றார்.

பிறகு திடீரென்று ஒருநாள் ஹீரோயின் எல்லாம் முடிந்து விட்டது என்று ஒரு SMS ஐ ஹீரோவிற்கு அனுப்பிவிட்டு மறைத்துவிடுகிறார்...இதனால் நொந்து நூலாபோன ஹீரோ தான் கதையையே தெருக்கூத்தாக எடுக்கிறார்.....நெஞ்சை பிழிய வைக்கும் கிளைமாக்ஸ் உடன் படம் முடியுது சார்.....ஒ.கே யார் இசை அமைப்பது,படத்தின் பாடல்கள் பத்தி கொஞ்சம் சொல்லு James....இசை ஹான்ஸ் சிம்மர் சார்....ஜஸ்டின் timberlake மட்டும் செலின் டியன் பாட்டு பாடுகினும்...எமினம் ஒரு பாட்டுக்கு ராப் செய்கிறார்......படத்தில நாலு பாடல்கள் பண்டோரவில சார்.....கிளைமாக்ஸ் பாடல் செவ்வாய் கிரகத்தில......எப்படியும் படத்திற்கு ஆஸ்கார் நிச்சயம்.......


சிறிது நேரம் ஜோசித்து விட்டு.....ஹேய் கொஞ்சம் பொறு...இது கவ்தமின் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் காப்பி அல்லவே,யாருகிட்ட ரீல் விடுகிறாய் என்று டென்சனாக கத்தினர் பில்....கூல் டவுன் பில்....இது காவதம் படத்தின் கொப்பி தான் ஆனால் ஹாலிவுட் ரீமேக்.......தமிழ் சினிமாவில் எத்தனையோ ஆங்கிலபடங்களை கொபி அடிகிறார்கள்...நான் ஒரே ஒரு படத்தை தானே கொப்பி அடித்தேன்.....நம்ம ஜனங்க ஒரே கிராபிக்ஸ் படமா பாத்து ரொம்ப போர இருக்கிறாங்க....அதனால் தான் ஒரு மென்மையான காதல் கதை.....ஒ.கே james..கதை சூப்பர்..வர்ற 31ம் திகதி பட பூஜை ஆரம்பம்....ஒபாமா சீப் கெஸ்ட்..ஒ.கே.....ரொம்ப நன்றி சார்.....ஒரு விஷயத்தை சொல்ல மறந்திட்டன்.....படத்தில பிரிட்னி ஸ்பியர்ஸ் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுறாங்க.....அட டபுள் ஒ.கே....ஹேய் james படத்தோட ஹீரோ யாரென்று சொல்லவே இல்லையே....அதுவா நம்ம இளைய தலைவலி சாரி இளைய தளபதி விஜய் சார்.....இதை கேட்டதும் பில் காக்கா வலிப்பு வந்தவர் போல வாய் எல்லாம் நுரை தள்ளி மயங்கி கீழே விழுகிறார்......ஏனையோர் அவசரமாக 911 இக்கு call பண்ணுகின்றனர்....

ஐந்து நிமிடத்தில் அம்புலன்ஸ் வண்டி வருகிறது.....பில்லை strecher இல் வைத்து தூக்கிகொண்டு செல்கின்றனர்.....அப்போது பில் ஒரு வாக்கியத்தை திரும்ப திரும்ப கூறிகொண்டிருந்தார்.....உலகத்தில் எவளவோ ஹீரோக்கள் இருகின்றனர் james,நீ ஏன் விஜயை ஹீரோவா செலக்ட் பண்ணினாய்......இந்த கேள்விக்கு விடை அந்த ஆண்டவனுக்கே தெரியாது.................

முற்றும் ...

எல்லாம் கற்பனை............

No comments:

Post a Comment