Search This Blog

Saturday, March 6, 2010

அவதார்2- பண்டோராவை தாண்டி வருவாயா

நியூயார்க் நகரம்.......மாலை நேரம்........ஹில்டன் ஹோட்டல் இன் ஒரு அறையில் James Cameroon,Steven Speilberg மற்றும் knight Shiyamalan ஆகியோர் டென்சனாக குறுகும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தனர்.யோ james கூடிக்கொண்டுவந்து ஒரு மணி நேரம் ஆகிறது இன்னும் வாயே திறகமட்டேன்கிறியே எண்டு கடுப்பான குரலில் கேட்டார் steve(அதாங்க நம்ம steven speilberg ). கொஞ்சம் பொறு Steve ப்ரோடுசெர் வரட்டும் என்று james சொல்லும்போது கதவு தட்டப்படும் சதம் கேட்டது.ஓடிபோய் கதவை திறந்தார்.வெளியில் bill gates brief கேஸ் உடன் நின்று கொண்டிருந்தார்... உள்ள வாங்க சார் என்று பணிவான குரலில் அழைத்தார் james...என்னையா james அவதார் பார்ட்2 எடுக்க போறியாமே,ஏற்கனவே அவதார் வசூலில் பின்னி பெடல் எடுக்கிறது,பார்ட்2 எடுத்து என்னை விட பணக்காரனாக பாக்கிறியா என்று சிரித்து கொண்டே கேட்டார் பில்.அப்படி எல்லாம் இல்லை சார் ஒரு சூப்பரான கதை சிக்கிச்சு அதுதான் கையோடு ஷூட்டிங்கை ஸ்டார்ட் பண்ணலாம் எண்டு உங்களை கூபிட்டனான்.....



சரி கதைய சொல்லு.....பார்ட்2 என்ன அக்சன் கதையா?இல்ல சார்,முழுக்க முழுக்க மென்மையான காதல் கதை..அட நல்லாருக்கே...கதையின் படி ஹீரோ ஒரு வேட்டைக்காரன் சார்.....என்னது வேட்டைக்காரன் பட கதையா?அடப்பாவி எனக்கு நாமம் போட்டு தெருவுக்கு கொண்டார ப்ளானா......இல்லை பில் ஹீரோ குரங்கை வேட்டை ஆடும் ஒரு வேட்டைக்காரன்....எல்லாம் சரி யாரு ஹீரோயின்?....உங்க பொண்ணுதான் சார்....என்னது என் பொண்ணா?என்னையா சொல்லுறாய்.....இல்ல சார் ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு உங்க பொண்ணுதான் சரியாய் இருக்கும்.....ஆஸ்கார் கூட கிடைக்கும்......ஓகே என்ன பொண்ணுகிட்ட பேசி பாகிறேன்..... படத்தின் பட்ஜெட் எவ்வளவு james?750 மில்லியன் டாலர் சார்....லோ பட்ஜெட் படம்தான்.....பரவாயில்லை சொல்லு......படத்தில ஹீரோ ஒரு பெரிய குரங்குடன் மோதும் பயங்கர சண்டை காட்சி ஒன்று இருக்கு சார்....அதற்கு கிராபிக்ஸ் செலவு மட்டும் 150 மில்லியன் டாலர் சார்.....இதுவரை அமைதியாக இருந்த ஷியாமளன் திடீரென்று james குரங்கிற்கு கிராபிக்ஸ் எல்லாம் வேணாம்,தத்துரூபமாக நடிக்க எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார்.....யார் என எல்லோரும் ஷியமலனை ஆவலுடன் கேட்டனர்.....

தொடரும்....

1 comment: