மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மா பெரும் வெற்றி பெற்ற படங்களை பற்றிய தொகுப்பே இந்த பதிவு....
1999ம் ஆண்டு வெறும் 60,000 டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த The Blair Witch Project என்ற திரை படம் உலகம் முழுவதும் சுமார் 248.7 மில்லியன் டாலர்களை வசூலித்து.....
500,000 டாலர் பட்ஜெட்டில் 2008ம் ஆண்டு வெளிவந்த Fireproof என்ற திரை படம் சுமார் 33.4 மில்லியன் டாலர்களை வசூலித்து..
இதேபோல் 2004ம் ஆண்டு 400,000 டாலர் பட்ஜெட்டில் வெளிவந்த Napoleon Dynamite என்ற திரைபடத்தின் வசூல் 46.1 மில்லியன் டாலர்களாகும்.
2006ம் ஆண்டு இங்கிலாந்தில் வெளியான The Zombie Diaries எனும் திரைப்படம் 8,100பவுண்ட் செலவில் தயாரிக்கப்பட்டு 1 மில்லியன் டாலரை வசூலித்தது.
மேலும் 2007ம் ஆண்டு 7.5 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு வெளியான Juno எனும் திரைப்படம் 231.4 மில்லியன் டாலரையும் 2008 ம் ஆண்டு 15 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் வெளியான Slumdog Millionaire எனும் படம் 377.4 மில்லியன் டாலரயும் வசூலித்தன...
இனி ஆசிய படங்களை எடுத்து நோக்கினால் பிரபல நடிகர் புருஸ் லி நடித்து 1973 ம் ஆண்டு வெளியான Enter The Dragon எனும் திரைப்படம் 850,000 டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 90 மில்லியன் டாலரை வசூலித்து...இதேபோல் 2000ம் ஆண்டு வெளியான Crouching Tiger, Hidden Dragon எனும் சீன திரைப்படம் 15மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு 214 டாலரை வசூலித்தது...
இதே போல் 1975 ம் ஆண்டு வெளியான Sholay எனும் இந்திய திரைபடம் 2கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு 30கோடி ரூபா வசூலை பெற்றது....
இறுதியாக மேலே கூறிய எல்லா திரைப்படங்களையும் தூக்கி சாப்பிடும் வகையில் 2009 ம் ஆண்டு வெளியான Paranormal Activity எனும் திரைப்படம் வெறும் 15,000டாலர் பட்ஜெட்டில் வெளியாகி பிரமிக்க வைக்கும் அளவில் 192.7 மில்லியன் டாலர்களை வசூலித்தது..
Soure: www.boxofficemojo.com, www.wikipedia.org
No comments:
Post a Comment