தமது நண்பர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படும் போது, மௌனம் காத்திருக்க முடியாது என பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது....இது அண்மையில் நான் படித்த செய்தி....காய்ச்சலும் தலைவலியும் அவனவனுக்கு வந்தால் தான் தெரியும் என்பது பழமொழி...ஆனால்
கிட்டதட்ட 50 வருடங்களாக ஈழ தமிழர்களைப் போல துன்பங்களை அனுபவித்து வரும் பலஸ்தீனதிடம் இருந்து வரும் இக் கூற்று அதிர்சிகரமாகவும் ஏமாற்றமளிப்பதாகவும் உள்ளது...இலங்கையை நண்பன் என்று கூறி வரும் பலஸ்தீனம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இலங்கை ஒரு பச்சோந்தி நாடு...சந்தர்பத்துக்கு ஏற்ற மாதிரி நண்பர்கள் ஆவதும் பின்பு கழற்றி விடுவதும் இவர்களுக்கு கை வந்த கலை...பலஸ்தீனம் பரம எதிரியாக நினைக்கும் இஸ்ரேலை விட ஆபத்தானது இலங்கை...தன் சொந்த குடிமக்களையே இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தி,ஆயிரகனக்கநோரை கொன்று குவித்து மகிழ்வடையும் இலங்கையை விட இஸ்ரேல் எவளவோ மேல்...
இஸ்ரேல் பாலஸ்தின மக்களின் சொந்த இடங்களில் அது மீறிய குடியேற்றம் செய்கிறது என்று இஸ்ரேலை வெறுக்கும் பலஸ்தின அதிகார வர்க்கம் காலம் காலமாக தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கும் இலங்கையுடன் நட்புடன் செயல்படுவது அதன் இரட்டை வேடத்தையே காட்டுகிறது....தனது சொந்த மக்களைபோலவே அடக்கி ஆளப்படும் தமிழினத்துக்கு எதிராக சிங்கள அரசுடன் கை கோர்த்து செயல் படும் பலஸ்தின அதிகார வர்க்கம் தனது சொந்த மக்களின் விடுதலையில் உண்மையான அக்கறை கொண்டுள்ளது என்பது சந்தேகதிட்குரியதகவே உள்ளது..
இஸ்ரேல் மீது போர்குற்ற விசாரணையை ஐநா தொடுத்த போது சந்தோஷ பட்ட பலஸ்தீனம் அதே போர்குற்ற விசாரணையை ஐநா இலங்கை மீது கொண்டுவர முயலும் போது அதை தடுப்பது ஏன்?தமிழர்களின் உயிர் அவளவு பெறுமதி அற்றதா?பாலஸ்தீன மக்கள் பாதிக்க படும் போதெல்லாம் ஈழ தமிழர்கள் கவலைபட்டர்கள்....நாங்கள் கேட்பதெல்லாம் எங்களுக்காக வேண்டி கவலைபடவிட்டாலும் பரவயில்லை ,எங்களை தொந்தரவு செய்யா விடுங்கள்....அந்த செய்தியில் நான் படித்த இன்னுமொரு விடயம் இலங்கை பயங்கரவாத்தில் இருந்து விடுதலை பெற்று அபிவிருத்தி கண்டு வரும் வேளையில் மேற்குலகம் இவ்வாறான தடைவிதிப்புகளை மேட்கொள்ளுகிரதாம்......பாலஸ்தின அதிகார வர்க்கத்தை பார்த்து நான் கேட்க விரும்புவது இதுதான்.....எது பயங்கரவாதம்?சொந்த இனம் கண்முன்னே அடக்கி ஒடுக்க படும் போது எந்த மானம் உள்ள மனிதனுக்கும் இரத்தம் கொதிக்க தான் செய்யும்...உறவுகள் கண்ணெதிரே வெட்டி சாய்க்கப்படும் போது இளைஞர்கள் மத்தியில் விடுதலை உணர்வு பிறப்பதை எவராலும் தடுக்க முடியாது.....தன் இனத்தின்,தன் சொந்தத்தின் விடுதலை மற்றும் பாதுகாப்பு கருதி ஆயுதம் ஏந்துவது பயங்கரவாதம் அல்ல,அது விடுதலை வேட்கை.....உங்களுடைய சுயலாபதிட்காக தமிழர்களின் விடுதலை போரட்டதிட்கு பயங்கரவாதம் என முத்திரை குத்துவது எந்த விதத்திலும் ஏற்று கொள்ள முடியாது.....
நீங்கள் இஸ்ரேலுக்கு ஏதிராக போர்புரிந்தால் அது விடுதலை போராட்டம் அதே நாங்கள் இலங்கைக்கு எதிராக புரிந்தால் பயங்கரவாதமா?யாசிர் அரபாத் உங்களுக்கு எவ்வளவு புனிதமனவரோ அந்தளவுக்கு புனிதமானவர் எங்கள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன்....உங்களை போலவே நாங்களும் பல காலமாக நசுக்கப்பட்டு வருகிறோம்.தயவு செய்து இரட்டை வேடம் போடுவதை நிறுத்துங்கள்...முடிந்தால் உதவி செய்யுங்கள்,இல்லையேல் ஒதுங்கி நில்லுங்கள்....
No comments:
Post a Comment