Search This Blog

Sunday, March 14, 2010

உலகின் மிகப்பெரிய விமானம்......

உலகின் மிகப்பெரிய விமானம் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது Airbus A380 தான்..ஆனால் அது தவறு...உலகின் மிகப்பெரிய விமானமானது பல பேரால் அறியபடாத அண்டோனொவ் An-225 என்பதாகும் ... உலகின் மிக பெரியதும் மிக பராமனதுமான இந்த விமானம் 1988ம் ஆண்டு சோவியத் ஜுநியனில் வடிவமைக்கப்பட்டது...இன்றும் பாவனையில் இருக்கும் இந்த விமானமானது ஏனைய விமானங்களால் காவிச்செல்ல முடியாத அதி பாரமான பொருட்களை காவிச்செல்லும் வல்லமை படைத்தது.... முதலில் சோவியெத் விண்வெளி ஆராய்ச்சிக்கு வடிவமைக்கபட்ட இவ் விமானம் பின்பு சரக்கு விமானமாக மாற்றியாமைகபட்டது...உள்ளே 250000Kg நிறையுள்ள பொருட்களையும் விமானத்தின் மேலே 200000Kg நிறையுள்ள பொருட்களையும் காவிச்செல்ல கூடியது இந்த அரக்க விமானம்....


இவ் விமானம் காவிசென்ற அதிகூடிய நிறை 253.82தொன்களாகும்.....இந்த அசுரனின் வடிவமைப்பை பற்றி சிறிது அலசுவோம்...ஆறு பேர் பணியாற்ற கூடிய இவ் விமானம் 84m நீளத்தையும் 18.1m உயரத்தையும் கொண்டது....இதன் இறக்கைகளுக்கு இடைப்பட்ட தூரம் 88.4 mஆகும்.. (A380 ஐ பார்த்தோமானால் 73m நீளத்தையும் 24.1m உயரத்தையும் இறக்கைகளுக்கு இடைப்பட்ட தூரமாக 79.75m ம் கொண்டுள்ளது) இறக்கைகளின் பரப்பளவு 905 m2 ஆகும்..36100 அடி உயரத்தில் பறக்க கூடிய இவ் விமானம் சராசரியாக 250000Kg எடையுள்ள பொருட்களை காவி செல்ல கூடியது.....இதன் தனி எடை மட்டும் 285000Kg ஆகும்...850Km வேகத்தில் பறக்க கூடிய இவ் விமானத்தின் அதிகூடிய பறக்கும் எடை 640000Kg ஆகும். ஆறு 229.5KN சக்தியுடைய இயந்திரங்களை கொண்ட இந்த அரக்கன் பறக்க 3500m நீளமான ஓடு பாதை தேவை படுகிறது.... முழு எரிபொருள் கொள்ளளவுடன் 15400Km உம் அதிகூடிய பறக்கும் எடையுடன் 4000Km உம் பறக்கும் வல்லமை படைத்தது... இதன் லேன்டிங் கியரில் 32 சக்கரங்கள் உள்ளன....முக்கியமான விடயம்....இந்த ராட்ஷச விமானம் உலகில் ஒன்றே ஒன்றுதான் உள்ளது....

No comments:

Post a Comment