Search This Blog

Monday, August 9, 2010

பர்சனல் பயோடேட்டா-3

பிரபலங்களின் பயோடேட்டா...ஒரு நகைச்சுவை கலந்த கற்பனை...



பெயர்:முத்துவேல் கருணாநிதி

பட்ட பெயர்:கலைஞர் ஐயா,பா(நா)சத் தலைவன்

தொழில்: அரசியல் மகா நடிகன்

கொள்கை: அடிக்கடி மாற்றுவது

சொத்து :பாதி தமிழகம்

பலம்:குடும்ப அரசியல்

பலவீனம்: பதவி வெறி

வாழ்நாள் சாதனை:மூன்று முறை திருமணம் செய்தது

நீண்டநாள் சாதனை: ஐந்து முறை சி.எம் ஆனது

சமீபத்தைய சாதனை: கலைஞர் டிவி

நீண்டநாள் எரிச்சல்: ஜெயலலிதா

சமீபத்தைய எரிச்சல்: மாறன் பிரதர்ஸ்

சோனியா காந்தி: எதிர்க்க துணிவில்லை

கூட்டணி: கானல் நீர்

தொகுதி:தேர்தலின் போது மட்டும் விசிட் செய்வது

பிடித்தது: பாராட்டு விழாக்கள்

மறப்பது: வாக்களித்த மக்களை...

மாறாதது: மஞ்சள் சால்வை+கறுப்பு கூலிங் கிளாஸ்

தேர்தல் வந்தால்: ரெண்டு ரூபாய்க்கு அரிசி,இலவச வர்ண தொலைக்காட்சி

ஈழத்தமிழர் விவகாரம்: அரசியல் அஸ்திரம்




பெயர்: விஜயகாந்த்

பட்டபெயர்: புரட்சி கலைஞர்,கேப்டன்

தொழில்:நடிப்பு+அரசியல்

கொள்கை: அடுத்த தமிழக சி.எம்

பலம்: அரசியல்

பலவீனம்:இன்னமும் சினிமாவில் நடிப்பது

நீண்டநாள் சாதனை: தமிழ் சினிமாவின் புரட்சி கலைஞர்

சமீபத்தைய சாதனை:58வயதிலும் சினிமாவில் ஹீரோவாக டூயட் பாடுவது

நீண்டகால எரிச்சல்: சூப்பர் ஸ்டார் நாற்காலி

சமீபத்தைய எரிச்சல்: எல்லா காமடி நிகழ்சிகளிலும் வறுபடுவது+வடிவேலு

சமீபத்தைய லொள்ளு: கேப்டன் டிவி

தெரிந்தது:புள்ளி விபரம்+அந்தரத்தில் அந்தர் பல்டி அடிப்பது

தெரியாதது:ஆங்கிலம்

புரியாதது:ரமணாவில் விண்டோஸ் மீடியா ப்ளேயரில் டைப் செய்தது

இன்னமும் சிக்காதது: பாகிஸ்தான் தீவிரவாதி வாசிம் கான்

மன்னிப்பு:தமிழிலே பிடிக்காத வார்த்தை

2 comments:

  1. நீண்டநாள் எரிச்சல்: அ தி மு க அல்லவா.

    ReplyDelete
  2. karunanithiyin biodatavil innondrum serthu kollungal....pozhudupokku..poduchelavil paarattu vizhakalum bandha maanadugalum....

    ReplyDelete