Search This Blog

Monday, August 23, 2010

வை பிளட்?..சேம் பிளட்....

இந்த பதிவில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே...தனி நபரையோ,நிறுவனத்தையோ புன்படுத்துவதட்காக அல்ல...

வணக்கம்..இது உங்கள் மொக்கை டிவியின் சண்டே ஸ்பெஷல்....நான்தாங்க சந்தானம்...இன்று "வை?பிளட்..சேம் பிளட்" நிகழ்ச்சியில் ஐந்து வேலைவெட்டி இல்லாதவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்..நிகழ்ச்சியின் பெயரிலேயே தெரியும் நிகழ்ச்சி எப்படி இருக்கப்போகுது என்று...எனவே நேயர்களே கையில் பஞ்சுடன் நீங்க ரெடியாக இருங்கள்...அந்த ஐந்து பெரும் வேற யாரும் இல்ல நம்ம விஜய்,தனுஷ்,சிம்பு,அஜித் மற்றும் டைரக்டர் பேரரசு அவர்கள்..சரி நிகழ்ச்சிக்கு போகலாம்..

சந்தானம்: நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நடிகர் விஜயை உள்ளே அழைக்கலாம்..விஜய் சார் உள்ள வாங்க..(ஐந்து நிமிடம் ஆகியும் விஜய் உள்ளே வரவில்லை)

சந்தானம்: யோவ் கமேராமான் ..உள்ள என்ன நடக்குதெண்டு பாரு...

கமேராமான்:விஜய் ஒபெனிங் சாங் போட்டதான உள்ள வருவாராம்...

சந்தானம்:கருமம்...சரி ஒபெநிங் சாங் கை போட்டு தொலைங்க...(உள்ளிருந்து மச்சான் பேரு மதுர என்ற பாடல் ஒலிக்க விஜய் ஸ்டைலாக உள்ளே வருகிறார்..)

விஜய்:அண்ணா..வணக்கமுன்னா...

சந்தானம்:சீன போட்டது காணும்..அந்த சீட்ல முதல்ல உக்காருங்க...
(அடுத்து சிம்பு,தனுஷ்,பேரரசு ஆகியோர் உள்ளே வந்து அமர்கின்றனர்)

சந்தானம்:கடைசியாக நம்ம தல அஜித்....வாங்க தல...

அஜித்:தல போல வருமா...தல போல வருமா...

சந்தானம்:அஜித் சார்..பார்த்து வாங்க..மேல கம்பி இருக்கு...இல்லேன தல போயிரும்...

அஜித்:எல..நான் யாருல?

சிம்பு:தல....

அஜித்:எல்லாருக்கும் பெரிய கதிரை...தலைக்கு சின்ன கதிரையா?

சந்தானம்:நேயர்களே!இன்னைக்கு யார் முகத்தில முழிச்செனோ தெரியல...யோவ்..இருக்கிறதிலேயே பெரிய கதிரையா கொண்டு வாங்கய்யா..
(பெரிய கதிரை கொண்டுவரப்பட அஜித் அதிலே அமர்கிறார்)

சந்தானம்:எல்லாரும் இருந்திட்டாங்க..நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம்..வணக்கம் வம்பு சார்..சாரி..சிம்பு சார்...அப்பா எப்படி இருக்கார்?

சிம்பு:அப்பா அமெரிக்க போயிருக்கார்...

சந்தானம்:ஏன்?அமெரிகால பேரிக்கா சேல் போகுதா?

சிம்பு:இல்ல...சம்பள பாக்கி வசூல் பண்ண போயிட்டாரு...

தனுஷ்:சம்பளாமா?

சிம்பு:அப்பா கிங்காங் படத்தில கிங்காங்குக்கு டூப் போட்டாரு....அந்த பாக்கியத்தான் வசூல் பண்ண போய்ட்டாரு..

சந்தானம்:கிங்காங்குக்கே சம்பளமா?...சரி..எல்லோரும் உங்க கரண்ட் ப்ராஜெக்ட்ஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்க...

அஜித்:மங்காத்தா சூட்டிங் ஆரம்பிக்கமுதல் ரேசில ஒரு கோப்பையாவது வெல்லவேணும் என்றுதான் மூன்று நாளா என் காருக்கு பஞ்சர் ஒட்டிகிட்டு இருந்தேன்...எவளவு ஓட்டினாலும் டயர் நிக்கமாட்டேன்குது....

சந்தானம்:ஏச்ச தொட்டு ஒட்டி பாருங்க...டயர் நல்ல நிக்கும்..

விஜய்:நான் வேலாயுதம் முன்னூறாவது நாள் வெற்றி விழா போஸ்டர் அடிப்பதில் ஒரே பிஸி...அதில டைம் போறதே தெரியல...

சந்தானம்:பார்த்திங்களா நேயர்களே!..பாதி சூட்டிங் கூட இன்னும் முடியல...அதுக்குள்ள போஸ்டர் அடிக்கிறாராம்..போஸ்டர்...தனுஷ் சார்..நீங்க சொல்லுங்க...

தனுஷ்:என் ப்ரோஜாச்டை எல்லாம் அண்ணன்தான் பார்த்துகிறார்..அடுத்தாதாக புதுப்பேட்டை பார்ட் டூ எடுக்க இருக்கிறோம்..

சந்தானம்:அடங் கொய்யால..இன்னும் புதுபேட்டை எபெக்ட்டே இன்னும் போகல...அதில பார்ட் டூ வேறயா..

பேரரசு:எனது அடுத்த படம் நியூயார்க்...ஹாலிவூட் படம்...

சந்தானம்:வேணாம்...இதோட நிறுத்துங்க...இல்லேன இங்க ஒரு இரத்த ஆறே ஓடும்...சிம்பு சார் நீங்க சொல்லுங்க...

சிம்பு:ஒரு மென்மையான காதல் படம் இயக்கலாம் என இருக்கிறேன்...இது ரொம்ப வித்தியாசமாக இருக்கும்....பெயரே ஒன்பது வாத்துக்கள் என்றால் பாருங்களேன்...

சந்தானம்:ஓகே.ஓகே..நீங்க என்ன சொல்ல வாறிங்க எண்டு எல்லாருக்கும் தெரியும்...நேயர்களே...இப்பவே லைட்டாக காதில் இரத்தம் வருகுது...போய் ஒரு குவாட்டர் ராவா அடிச்சாதான் சரி..அதுவரைக்கும் சின்ன பிரேக்...


சந்தானம்:ஓகே..இப்போ பிரேக் முடிந்து நிகழ்ச்சி மறுபடியும் ஆரம்பிக்குது..இப்போது எல்லோரும் தங்கள் வாழ்வில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளை பகிர இருக்கிறார்கள்..விஜய் சார் நீங்க ஆரம்பியுங்க..

விஜய்:குருவி படத்தில பில்டிங்கில இருந்து பாலத்துக்கு பாயுற சீன இருந்தது எல்லோருக்கும் தெரியும்..முதல்ல அந்த சீனை ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பாயுற மாதிரி தான் எடுக்க நான் ஐடியா கொடுத்தனான்..ஆனால் கடைசியில் அது கைகூடவே இல்ல..இது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு கவலையான நிகழ்ச்சி...

சந்தானம்:விஜய் சார்...இங்க தேவை இல்லாமல் ஒரு கொலை விழ முதல் நீங்க அடங்குங்க....

அஜித்:பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முதல் நாள் தண்ணியடிச்சு மட்டயாயிட்டன்...ஒண்ணுமே படிக்கல..சரி யட்டிகுள்ள ஒளிச்சு வைச்சு பிட் அடிக்கலாம் என முடிவுசெய்து பிட் அடிச்சேன்..படுபாவி சூப்பர்வைசெர் பிடிச்சிட்டான்..பிரின்சிபால் அடி பின்னிஎடுதிட்டார்...காயம் ஆற ஒருவாரம் ஆச்சு...இத என்னால மறக்கவே முடியாது...

சந்தானம்.:யட்டிகுள்ள வச்சு பிட் அடிச்சத நீங்க மட்டும் இல்ல யாராலும் மறக்க முடியாது... தனுஷ் சார் நீங்க சொல்லுங்க..

தனுஷ்:சுள்ளான் படத்தில அந்த ஒற்றைக்கால் காலேஜ் பைட் சீன் எல்லோருக்கும் தெரியும்..அந்த சீனுக்காக ஒற்றை காலில் கெந்தி கெந்தி நடந்து காலு ஒரு பக்கம் சைடு வாங்கிட்டு..பார்க்காத டாக்டர் இல்ல...செய்யாத வைத்தியம் இல்ல..கடைசியில் என்பொண்டாட்டி செய்த புண்ணியம் தான் என் காலை காப்பாதிச்சு..அந்த பைட்ட நினைச்ச இப்பவும் எனக்கு வய்த்த கலக்கும்..

சந்தானம்: யார் செய்த பாவமோ அந்த காலு குணமாயிடுச்சு...சிம்பு சார்..அடுத்து நீங்க தான்..

சிம்பு:விண்ணை தாண்டிவருவாய படத்தில திரிசாவுக்கு முத்தம் கொடுக்க கிட்ட போனேன்...திடீரெண்டு மயக்கம் போட்டு விலுந்திட்டாங்க..

பேரரசு:எல்லாம் சிம்புவோட ரொமாண்டிக் லுக் தான்...

சந்தானம்:ரொமாண்டிக் லுக்கா?...வாயில எதாவது வந்திர போகுது...இது பல்லு விளக்காம திரிஷா கிட்ட வாய கொண்டு போயிருக்கும்...கப்பு தாங்காம திரிசா மயங்கிட்டா....ஓகே பேரரசு சார் நீங்க இயக்குனரானதே ஒரு மறக்க முடியாத சம்பவம் தான்.. ஒரு பாட்டு பாடுங்க பாப்பம்..

பேரரசு: "குடிகாரனே குடிகாரனே
ரகசிய குடிகாரனே....
சின்ன வயசிலே ஆறாம் வகுப்பிலே
சுண்ட கஞ்சி அடிச்சவனே..
நீ குடிடா குடிடா
ஆட்டம் ஆடுடா ஆடுடா...."

சந்தானம்:ஆம் இந்த நூற்றாண்டின் சிறந்த மொக்கை இது தான்...மணிரத்னம் சார் கேட்ட எவளவு பீல் பண்ணுவார்...சிம்பு சார் உங்க பொழுது போக்க பத்தி கொஞ்சம் சொல்லுங்க...

சிம்பு:எங்க சார்...நயனை மறக்கவே நேரம் கிடைகல..கிடைக்கிற நேரத்தில ஜோதியில ஐகியமாகிருவென்...

விஜய்:ஆஹா..இந்த சின்ன வயசில என்ன ஒரு ஆன்மிகம்....

சந்தானம்:ஆன்மீகமாவது...மண்ணாவது...பரங்கிமலை ஜோதி தேட்டரில பலான சகீலா படத்தோட ஐகியமாகிறததான் அது அப்படி சொல்லுது...

தனுஷ்: கரெக்ட்

சிம்பு:என்ன கரெக்ட்....முழு சகீலா பட டீவீடி கலெக்சனை வைச்சுக்கொண்டு இவர் என்ன குத்தம் சொல்றாரு...

சந்தானம்:ஓகே நேயர்களே...விட்டா இவங்க போடுற மொக்கையில முழு தமிழர்களுக்கும் காதில் இரத்தம் வரும்...எனவே இத்துடன் நிகழ்ச்சியை நிறைவுசெயகிறோம்...மீண்டும் ஓர் "வை பிளட்?..சேம் பிளட்" நிகழ்ச்சியில் வேறு ஐந்து வெட்டி பயல்களுடன் சந்திக்கும் வரையில் உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் சந்தானம்...

பிற்குறிப்பு: குடிகாரனே என்ற பாடல் இணையத்தில் கேட்ட ஒரு ரிங்க்டோன்...



.

1 comment: