தேவையானவை
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
பூண்டு - 5 பல்
நெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ - தலா 2
பிரிஞ்சி இலை - 2
புதினா - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை - தலா 10
செய்முறை
1.பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
2.குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
3.அவை பொரிந்து வரும்போது முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
4.அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
5.அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் நேரம் உப்பு மற்றும் களைந்து ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்க்கவும்.
6.கொதி நன்கு வரும் போது புதினா இலைகள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
7.ஆவி அடங்கியதும் குக்கரை திறந்தால் சாதம் நன்கு பொலபொலவென்று வெந்து இருக்கும்.
இதனை தயிர் பச்சடி, மலபார் காரக்குழம்பு, கிராவிகளுடன் சாப்பிட அருமையாக இருக்கும் அனைவரும் சாப்பிட கூடியது. மிகவும் சத்தானது. எளிதாகவும், ரிச்சாகவும் இருக்கும்.
Source:www.arusuvai.com
No comments:
Post a Comment