Search This Blog

Friday, August 6, 2010

நக்கீரனில் என் பதிவு...

நக்கீரனில் என் பதிவு-ஒரு புலனாய்வு ரிப்போர்ட்....

பதிவுகள் திருடப்படுவது பதிவுலகில் சாதாரண விடயமாகிவிட்டது..சமீபத்தில் பிரபல பதிவர்களான ஜாகி சேகர் மற்றும் லோஷன் ஆகியோரின் பதிவுகள் திருடப்பட்டதை அவர்களின் வலைபூவினூடாக அறிந்தேன்.இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று..திடீரென்று என்மனதில் ஒரு எண்ணம் உதித்தது..ஒருவேளை என் பதிவுகளும் திருடப்பட்டிருந்தால்? ...."சீ அப்படி எல்லாம் இருக்காது...பதிவுலகில் கத்துக்குட்டி நான்..என் பதிவுகளை ஆட்கள் படித்தாலே பெரிய விஷயம்,இந்த இலட்சணத்தில் யார் என் பதிவை திருடப்போகிறர்கள் என உள் மனம் கூறியது.." இருந்தாலும் எழுந்த நப்பாசையை அடக்க முடியாமல் நான் எழுதிய பதிவுகளில் சிலவற்றை தெரிவுசெய்து கூக்ளிங்(அதாங்க கூகிளில் தேடுவது) செய்தேன்...இறால் கூட சிக்காது என நினைத்த எனக்கு பெரிய சுறாவே சிக்கியது அதிர்ச்சியாகத்தான் இருந்தது ..

அனேகமாக பதிவு திருடர்கள் இன்னொருவரின் பதிவை காப்பி பேஸ்ட் செய்வதுதான் வழக்ககம்..ஆனால் நகீரனிலோ என்பதிவை காப்பி செய்து அதன் கடைசி வரியை மட்டும் மாற்றி விட்டு ஒரு கட்டுரையின் இடையே சொருகி இருந்தார்கள்...
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் ""சிங்கம்பட சாதனை"" என்ற தலைப்பில் ஒரு சிறிய பதிவை இட்டுருந்தேன்..ஒரு கனேடிய ஆங்கிலப்பத்திரிகையில் வெளிவந்த சிங்கம் படம் சம்பந்தமான செய்தியை நான் தமிழாக்கம் செய்து மேலும் அது சம்பந்தமாக வெளிவந்திருந்த புகைப்படத்தையும் கைத்தொலைபேசியில் எடுத்து பதிவாக போட்டிருந்தேன்..

என் பதிவை பார்பதற்கான இணைப்பு..
http://ennmanavanil.blogspot.com/2010/06/blog-post_1082.html

என் பதிவின் ஸ்க்ரீன் சாட்..




இது நக்கீரன் பதிவை பார்பதற்கான இணைப்பு..
http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=392

இது நக்கீரன் பதிவின் ஸ்க்ரீன் சாட்..இரண்டு ஸ்க்ரீன் ஷோட்களிலும் சிவப்பு நிறத்தால் கட்டம் இடப்பட்ட பகுதியை பாருங்கள்...ஒரு எழுத்து வித்தியாசம் இருக்கிறதா?..படத்தை கூட என்ன அழகாக எடிட் செய்திருக்கிறார்கள்...




பதிவு திருட்டிற்கு ஜாம்பவான்கள் கூட விதிவிலக்கில்லை என்பதத்கு இது ஒரு நல்ல உதாரணம்..

4 comments:

  1. எனக்கு ஒரு சந்தேகம். பதிவுகளினால் பதிவர்களுக்கு ஒரு நயாபைசா பிரயோஜனமும் இல்லை என்று நினைக்கிறேன். அப்படியானால் நம் பதிவை யார் என்ன செய்தால் என்ன ஆகிவிடும்?

    ReplyDelete
  2. yaar sonnathu சார்.. ஒரு பைசா உபயோகமில்லை என்று.. ? நான் பதிவுலகினால்தான் பல விஷயங்களை அடைந்திருக்கிறேன்.

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  3. நான் பதிவுலகினால்தான் பல விஷயங்களை அடைந்திருக்கிறேன்.
    அடைந்து கொண்டும் இருக்கின்றேன்.

    ஷங்கர் நீங்கள் தானா இதை அனானி வடிவத்தில் எழுதியது.

    ReplyDelete
  4. பதிவுலகில் நான் அறிந்துகொண்டவை ஏராளம்..உங்களது கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே..

    ReplyDelete